'டயட்'டில் ஒரே மாதிரியான உணவு முறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
00:00

மெடிட்டரேனியன் என்பது, தென் ஐரோப்பாவிற்கும், வட ஆப்பிரிகாவிற்கும் மத்தியில் உள்ள கடல். ஸ்பெயின், பிரான்ஸ, மெக்சிகோ, இத்தாலி, எகிப்து, அல்பேனியா, கிரீஸ், லெபனான், துருக்கி உட்பட, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் ஒரு வகையான உணவு முறையை பின்பற்றுகின்றனர். கடல் உணவுகள், நட்ஸ், முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என்று, இயற்கையில் விளைந்த உணவுகளையே, இந்தப் பகுதி மக்கள் சாப்பிடுகின்றனர்.

இது குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் பகிர்ந்து கொண்ட விபரங்கள்: 

இதில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது?நல்ல கொழுப்பு, புரதம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை கோளாறு, உடல் பருமன் ஏற்படுவதில்லை. ஆகையால், இது சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. 


வேறு எந்த உணவையும் அவர்கள் சாப்பிடுவது இல்லையா?மிகக் குறைந்த அளவில், பால், முட்டை சாப்பிடுவர். ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோடா உப்பு, துரித உணவுகளை முழுமையாக தவிர்க்கின்றனர்.

'சிறந்த டயட்' என்றால், அனை வரும் இதை பின்பற்றலாமா?டயட்டை பொறுத்தவரை, ஒரே மாதிரியான உணவு முறை, எல்லாருக்கும் பொருந்தாது. ஒருவரின் உடல் தேவை, வாழ்க்கை முறைக்கு ஏற்ற டயட்டை பின்பற்றுவதே நல்லது. தைராய்டு இருந்தால், அதற்கேற்ற உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்; சர்க்கரை கோளாறு இருப்பவர்கள், உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கு இடையில் அதிக இடைவெளி விடக்கூடாது; சிறுநீரகப் பிரச்னை இருந்தால், சில உணவுகளை தவிர்க்க வேண்டும்; கொழுப்பு இருந்தால், அதற்கேற்ற உணவை எடுக்க வேண்டும். அதனால், இந்த உணவு முறையே சரி, இது தவறு என்று சொல்ல முடியாது. 

தங்களிடம் வருபவர்களுக்கு, என்ன ஆலோசனை வழங்குவீர்?அவர்களின் வழக்கமான உணவு முறைகள் என்ன, பெற்றோருக்கு இருக்கும் உடல் பிரச்னைகள், மாதவிடாய் சீராக இருக்கிறதா, தேவைப்பட்டால் ரத்த பரிசோதனை செய்து, அதற்கேற்ற உணவுகளை பரிந்துரைப்பேன்.தலைமுடி இழப்பு அதிகமாக இருந்தால், 'பி 12' வைட்டமின் குறைபாடு அல்லது தைராய்டு கோளாறு இருக்கலாம். அதனால், அதை உறுதி செய்ய, ரத்த பரிசோதனை அவசியம்.

தவிர்க்க வேண்டிய பொதுவான உணவுகள் என்ன?பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள், மைதா, வெள்ளை சர்க்கரை, அஜினமோட்டோ, கார்பனேட்டட் பானங்கள் சாப்பிடுவது, யாருக்குமே நல்லதல்ல.அஜினமோட்டோ என்ற ஜப்பான் கம்பெனி தயாரிக்கும் பொருள், 'மோனோ சோடியம் குளூட்டமேட்!' இந்த வகை உப்பு, என்றோ ஒரு நாள் நம் உணவில் கலந்திருந்தால் பரவாயில்லை. தினமும் உணவில் வழக்கமாக்கிக் கொள்வது தவறு. அளவுக்கு மிஞ்சினால், எல்லாமே நஞ்சு தான். 

பொதுவான ஆரோக்கியமான உணவு எது?இட்லி, தோசை, இடியாப்பம், ரசம் போன்ற தென்னிந்திய உணவுகள் தான் ஆரோக்கியமானவை. காரணம், இவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை.எந்த உடல் பிரச்னையும் இல்லாவிட்டாலும், புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு சத்துக்கள் அடங்கிய சமச்சீரான உணவையே, அனைவரும் பின்பற்ற வேண்டும். அடிக்கடி வெளியில் சாப்பிடாமல், மாதம் ஓரிரு முறை சாப்பிடலாம். முடிந்தவரை, விரும்பிய அனைத்தையும், வீட்டிலேயே சமைத்து சாப்பிட பழகுவது நல்லது.

சமூக வலைதளங்களைப் பார்த்து, டயட் பின்பற்றுவது சரியா?
தற்போது எல்லாருமே, 'கூகுள் டாக்டர்' ஆகி விட்டனர். பிரபலங்களும், 'ஹெல்த் டிப்ஸ்' கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அப்படியே பின்பற்றக் கூடாது. தினமும், ஏழு முந்திரி சாப்பிட்டால், தோல் பளபளக்கும் என்று சொல்வதை, கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர் பின்பற்றினால் பிரச்னை வரும். அதே போல், தினமும் நான்கு முட்டை சாப்பிடுவேன் என்று யாரோ சொல்வதைக் கேட்டு செய்தால், யூரிக் அமிலம் அதிகரிக்கும்.உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, அதற்கு தகுதியானவர் தான் அறிவுரை சொல்ல வேண்டும். தைராய்டு, நீர்க்கட்டிகள், சர்க்கரை கோளாறு, மூட்டு வலி என்று எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அதை பின்பற்ற வேண்டும்.
திவ்யா சத்யராஜ்
நியூட்ரிஷனிஸ்ட்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
18-ஜன-202007:59:26 IST Report Abuse
mindum vasantham Pombala. Sathyaraj ivar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X