தேவையான பொருட்கள்
ஓட்டடையான் சம்பா அரிசி - 1 கப்
குதிரைவாலி அரிசி - ½ கப்
துவரம் பருப்பு - ½ கப்
கடலை பருப்பு - 1 கை பிடி அளவு
உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் - ½ கப்
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி -1
கேரட் - 2
வெங்காயம் - 1
கடுகு - 1 டீ ஸ்பூன்
செய்முறை
ஓட்டடையான் அரிசியை தனியாகவும், குதிரைவாலி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பை தனியாகவும், இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்,
குதிரைவாலி அரிசி, பருப்புகளுடன் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சிரகம், தேங்காய் துருவல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஓட்டடையான் அரிசியில், தக்காளி சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து, இதில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி சேர்க்கவும். இத்துடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி தழை கலந்து கொள்ளவும்.
தோசை மாவை விடவும், கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியை சூடாக்கி, எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும்.