தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
நெய் - 4 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
மோர் மிளகாய் - 5
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் துாள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
மஞ்சள் துாள் - ¼ டீ ஸ்பூன்
பொட்டுக் கடலை - 1 டீ ஸ்பூன்
மிளகாய் துாள் - 3 டீ ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
பூசணி விதை - 1 டீ ஸ்பூன்
பொரி - 200 கிராம்
புதினா - 1 கை பிடி அளவு
செய்முறை
புதினாவை, நன்கு கழுவி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். வாணலியில், தேங்காய் எண்ணெய், நெய் ஊற்றி, உருகியதும் கடுகு தாளித்து, மோர் மிளகாயை சேர்க்கவும். சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் துாள், மிளகாய் துாள் போட்டு வறுத்ததும், பொட்டுக்கடலை சேர்க்கவும். அதன்பின், வேர்க்கடலை சேர்க்கவும்.
நன்கு வறுபட்டதும், பூசணி விதை, முந்திரி சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொரியை சேர்த்து, லேசாக வறுக்கவும். மசாலா பொருட்கள் அனைத்தும் பொரியில் நன்றாக ஒட்டியதும், பொடித்து வைத்துள்ள புதினா துாளை துாவி, கலந்து, அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான், புதினா பொரி தயார்.