அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2020
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது, ஆண்; பி.இ., பட்டதாரி. தனியார் துறையில் ஓர் ஆண்டு பணிபுரிந்து, தற்போது அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். பி.இ., இறுதி ஆண்டு படிக்கும்போது, உறவுக்கார பெண், முகநுாலில் தொடர்பு கொண்டாள்.
என்னை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து, சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சரியம். உரையாடல்கள் தொடர்ந்தன. இரண்டு, மூன்று முறை நேரில் சந்தித்தாள். அதன்பின், 'லவ் ப்ரோப்பஸ்' செய்தாள்; எனக்கு, முறைப் பெண் அவள்.
'நான், போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றவுடன், இருவரும் அவரவர் வீட்டில் சொல்லி, சம்மதம் பெறுவோம்...' என்ற ஒரே நிபந்தனையுடன், அவளின் காதலை ஏற்றுக்கொண்டேன்.
அப்போது, அவள், இளநிலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். போட்டி தேர்வுக்கு முதல் நாள், அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது...
'என் அம்மாவிடம், நம் விஷயத்தை சொன்னேன். அவர்களும், நீங்கள் நல்ல பையன் தான் என்றார். இருந்தாலும், நாம் ஒன்று சேர இயலாது. உங்கள் அப்பாவுடைய சகோதரருக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பிரச்னை உள்ளது.
'விசேஷத்தில் அவர்களோடு ஒன்றாக பங்கேற்க முடியாது. 'நீ மட்டும் அந்த பையனோடு சேர்ந்து வாழ்ந்து கொள். நாங்கள் எந்த விசேஷத்திலும் கலந்து கொள்ள மாட்டோம்' என்று அம்மா கூறினார். நாம், இனி பேச வேண்டாம்...' என்றாள்.
இதைக் கேட்டு, நிலை குலைந்து போனேன். மனம் வெதும்பி, மறுநாள், போட்டி தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இவ்விஷயத்தை என் பெற்றோரிடம் சொல்லவில்லை. என்னால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை.
பொது இடங்களில் மற்றும் விசேஷத்தில் என்னை முறைத்து முறைத்து பார்த்தனர், அவளது உறவினர்கள்.
நானோ, அமைதியாக சென்றேன். மனதில் ஒருவித பயம். இது, தொடர்கதை ஆனது. அவளின் உறவினர்கள் மத்தியில், நான் கெட்டவன் ஆனேன்; எங்கள் உறவினர் பார்வையில், அவள் நல்லவள்.
எட்டு மாதங்களுக்கு பின், மீண்டும் என்னை தொடர்பு கொண்டவள், 'என் அம்மாவை சமாதானம் செய்து கொள்ளலாம்...' என்று கூறி, மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தாள்.
திடீரென ஒருநாள், என்னை தொலைபேசியில் அழைத்தவள், 'என் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்...' என்று கூறினாள்.
அப்போதே நான் அவளிடம், 'உனக்கு, என்னால் எந்த தொந்தரவும் வராது...' என்று, உறுதி கொடுத்தேன்.
அதன்பிறகு நடந்த போட்டி தேர்வுகளில் மனதை ஒருநிலைபடுத்தி படிக்க இயலவில்லை. விளைவு, தோல்வி.
இப்போது, அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதை, உறவினர் மூலம் அறிந்தேன். எங்கள் குடும்பத்திற்கும் அழைப்பு வந்தது. அவளது உறவினர்கள், என்னை வேண்டா வெறுப்பாக பார்க்கின்றனர்.
அவளோ, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டாள்; நானோ, இன்னமும் அதே நிலையில். என் லட்சியமான அரசு பணியை அடைய, போட்டி தேர்வில் வெற்றி பெற ஆலோசனை கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு
உங்கள் மகன்


அன்பு மகனுக்கு —
சில காதல்கள், ஓர் ஆணை குப்பையிலிருந்து கோபுரத்துக்கு உயர்த்தும்; சில காதல்கள், அதே ஆணை சிகரத்திலிருந்து படுபாதாளத்துக்கு தலைகுப்புறத் தள்ளி விடும். உன்னுடைய காதல், இரண்டாவது வகை.
உன் காதலி, ஒரு ஆர்வக்கோளாறு பெண்மணி; கோழை; பிரச்னைகளை கண்டு புறமுதுகு காட்டி ஓடுபவள். நிலையில்லாத மனம் கொண்டவள்.
நீ, அவளை துரத்தி சென்று காதலிக்கவில்லை, அவள் தான் உன்னை முகநுாலில் மோப்பம் பிடித்து, வலிய வந்து காதலித்தாள். உங்கள் காதல், உடல் ரீதியானதல்ல.
காதலியின் உறவினர்களிடம், உன்னை பற்றி ஏதோ அவதுாறாய் கூறியிருக்கிறாள், அவளது அம்மா. அவர்களை கண்டு நீ ஏன் பயப்பட வேண்டும். அவளது உறவினர்களிடம், நீ நல்லவன் என பெயர் வாங்கி என்ன பிரயோஜனம். உன்னுடைய குற்ற உணர்ச்சி தேவையில்லாதது.
இனி நீ செய்ய வேண்டியது...
* உன் காதலியை அடியோடு மறந்து விடு. அவளுடைய தொலைபேசி எண்ணை, உன் கைபேசியிலிருந்து அகற்று; உன் கைபேசி எண்ணை மாற்று
* அரசு போட்டி தேர்வு எழுதி, தேர்வாக, ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படி. பதறாமல், சிதறாமல், கவனத்தை தேர்வில் வை
* சிறு மனஸ்தாபத்தை மனதில் வைத்து, மகளின் காதலை நிறைவேற்ற மறுத்த பெற்றோர், ஆபத்தானவர்கள். இப்போதாவது அவர்களிடமிருந்து விலகினாய் என்று சந்தோஷப்படு. அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு, அதன் பின், சிறுசிறு பிரச்னைகளை எல்லாம் ஊதி பூதாகரமாக்கினால் என்ன செய்வாய்
* காதலியின் திருமணத்திற்கு போகாதே. அவளது திருமண நாளன்று, வேறு ஏதாவது உபயோகரமான வேலைகள் இருந்தால் செய். வாழ்த்து கூட அனுப்பாதே
* உன்னை குரோதமாய், இழிவாய் பார்த்து சிரித்த அவளது உறவினர்கள், உன் அசுர வளர்ச்சியை பார்த்து திகைத்து நிற்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது போல், உனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்
* போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வயது வரம்பை கடந்து விட்டால் கவலைப்படாதே. முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை படித்து, ஏதேனும் ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராகு
* 'நீ ஒரு இளித்தவாயன்'- என்கிற முத்திரை, உன் முகத்தில் குத்தப்பட்டுள்ளது. இனி, யாரையும் காதலிக்காதே; காதலிக்கிறேன் என, எவள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாதே
* நல்ல வேலைக்கு போனதும், உனக்கு வரன் பார்க்க சொல். உறவுக்கார பெண்களிடம் சிக்கிக் கொள்ளாதே. அயல் பெண்ணாக பார்த்து மணந்து கொள்
* முகநுாலில் பெண்களிடமிருந்து, நட்பு விண்ணப்பம் வந்தால் ஏற்காதே. முகநுால் வழி காதல்கள் ஆபத்தானவை
* ஒரு பெண் காதலிக்கிறேன் என வந்ததால், பலமுறை அரசு போட்டி தேர்வுகளில் தோற்றிருக்கிறாய். அவ்வளவு பலவீனமானவனா நீ... யோகா வகுப்புகளுக்கு போய், மன வலிமையைக் கூட்டு
* உன்னை ஆசை காட்டி மோசம் செய்த பெண்ணின் திருமண வாழ்வு, வீணாக போய்விட வேண்டும் என, கடவுளிடம் வேண்டாதே. அவள், அவளின் கணவனுடன் சந்தோஷமாக இருக்கட்டும். நீ, உன் மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்து
* உன்னை மாதிரி அப்பாவி ஆண்கள், மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். உன்னையும், உன் கடிதத்தையும் பார்த்து வியந்து நிற்கிறேன். ஆணினம் முழுவதும் கெட்டு போய் விடவில்லை என்கிற ஆசுவாச பெருமூச்சு, என்னிடமிருந்து எழுகிறது.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
12-பிப்-202011:05:17 IST Report Abuse
Kundalakesi தம்பி. உலக நடப்பு தெரியாம நேரத்தையும் பெற்றவர்களின் நிம்மதியையும் போக்கிக்கொண்டிருக்கிறாய். Swiggy Zomato போன்ற வேலையிலாவது சேர்ந்து நாலு காசு சேர்க்கிற வழியப்பாரு. இவரு படிப்பாராம்மா, அம்மணியப்பார்த்தோன படிப்பு போச்சாமா. யாருக்கிட்டலே ரீலு விடர
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
11-பிப்-202009:49:36 IST Report Abuse
TechT அவ ஒரு item... அவளை ஏன் நினைக்கிறாய், கடவுள் பக்தி முக்கியம்..ஜாதகம் பார்க்கவும் .....அதன்படி .....நடந்துகொள்ளவும் ...நேரம் காலம் முக்கியம். பெண்ணால் படிக்கவில்லை என்பது சும்மா.. நீ ஏன் மனது அலைபாய்கிறாய் .. காமத்தை விடு (அதுவே மூலகாரணம் - உள்ளுக்குள் இருக்கும்) உணவு பழக்கத்தை மாற்றினால் சாத்தியம்.. கடவுள் நம்பிக்கை வேண்டும் படிப்புவரை ஹயக்ரீவ ஸ்தோத்திரம் படிக்கவும்.
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
12-பிப்-202012:40:18 IST Report Abuse
Girijaஇந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன். பெண்கள் தெய்வத்திற்கு சமம்....
Rate this:
Share this comment
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-202016:52:54 IST Report Abuse
Valaikuda Vallalஎல்லா பெண்களையும் கூற வில்லை ... குறிப்பிட்ட அந்த பெண்ணை பற்றி தான் கூறினான் ... அதற்கு ஏன் இவ்வளவு கோபம் ?...
Rate this:
Share this comment
Sivak - Chennai,இந்தியா
12-பிப்-202017:19:30 IST Report Abuse
Sivakஎன்னது பெண்கள் தெய்வத்திற்கு சமமா ?? தானே தன்னை புகழ்ந்து கொள்வது கேவலமா இருக்கு ... //அம்மாவை கொன்றுவிட்டு அந்தமானில் பாய் பிரண்டுடன் சுற்றுலா மாட்டிய மகள்// இதுவும் செய்தில வந்தது தான் இது என்ன மாதிரி தெய்வத்திற்கு சமம்?...
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
13-பிப்-202014:34:15 IST Report Abuse
Girija@Sivak - chennai,இந்தியா, குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று, பத்து மாதம் சுமந்து, தன் ரத்தத்தை பாலாக தந்து , ஈ எறும்பு அண்டாமல், கங்காரு போல் எப்போதும் இடுப்பில் சுமந்து கொண்டு, இருக்கும் பிடி சோறையும் தனக்கென்று கொள்ளாமல் ஊட்டி வளர்த்த தாயை கொலை செய்த மகாபாவிகள் பற்றிய செய்தி தினம் தினம் வருகிறதே ? பெண்ணை மதித்து போற்றாவிட்டால் உயர்வில்லை என்பதை காலம் உணர்த்தும். உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறது சில பிரபலங்களின் வாழ்க்கை மூலம். பெண்களை இழிவாக பேசி தெய்வத்தை கும்பிட்டு பயனில்லை....
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
13-பிப்-202018:06:00 IST Report Abuse
Girijaஜல்லிக்கட்டுக்கு பழக்கப்பட்ட முரட்டு காளை போட்டியின் போது மக்கள் இருக்கும் பகுதிக்கு மிரண்டு மின்னல் வேகத்தில் ஓடி வருகிறது, எதிரில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் மற்றொரு கையில் ஒரு சிறுவனையும் பிடித்துக்கொண்டு வருகிறாள் , காளை என்ன செய்தது ? அந்த பெண் குழந்தைகளை முட்டி தள்ளாமல் ஒரே தாவாக தாண்டி குதித்து ஓடியது. காளை சிவன் சொரூபம் , பெண் துர்கை சொரூபம். ஆனால் மானிட ஆணுக்கு இப்படி எந்த ஒரு பெருமையும் இல்லை ஏன் என்றால் நடத்தை அப்படி. ஐட்டம் என்று தொடங்கி ஸ்லோகம் படிக்க சொல்கிறார்...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202016:07:21 IST Report Abuse
Girija இதை படிக்கும்போது உங்க அம்மா வீட்டில் விளக்குமாறு வாங்குவத்தில்லை என்று தெரிகிறது, இல்லாவிட்டால் உன்னை பிய்த்து எடுத்திருப்பாள் நீயும் இப்படி ட்ராமா பண்ண முடியாது , நீ பி ஈ படித்து, ஒரு வருடம் வேலை பார்த்து பிறகு அதையும் விட்டு விட்டு அரசு தேர்வுக்கு படிக்கிறேன் என்று சொல்லி வெட்டி பொழுது போக்கிக்கொண்டு இருக்கிறாய். என்னமோ காதலியாம் இவர் எல்லாவற்றையும் கோட்டை விட்டுக்கொண்டு உடர்ந்துகொண்டு இருக்கிறாராம். நீ இன்றும் டீ வியில் ஒரு அழகான பெண் வந்தால் முறைத்து பார்ப்பதில்லை? வேளைக்கு காபி டிபன் சாப்பாடு சாப்பிடுவதில்லை? சினிமா போவதில்லை? உங்களை போன்ற வருத்தப்படாத வாலிப சங்கங்களுக்கு டீ கடை மற்றும் பெட்டிக்கடை, நேரத்தின் அருமை தெரியாமல் டீ தம் அடித்துக்கொண்டு, சாலையில் வரும் பெண்களுக்கு அட்டெண்டன்ஸ் போட்டுகொண்டு இருப்பதில்லை? என்னவோ எவளோ காதலித்தாளாம் இவர் அப்பா அம்மா பணத்தில் தின்றுகொண்டு காதலியை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறாராம். உன் பி ஈ படிப்புக்கு உன் தந்தை குறைந்தபட்சம் ஐந்து லட்சமாவது செலவளித்திருப்பார், அந்த பணத்தை நேரத்தில் கட்ட கடன் வாங்க வங்கி, வேலை செய்யும் அலுவலகம் மற்றும் நண்பர்கள் முன் நெளிந்து இருப்பார்? உரைக்கிறதா மண்டையில் ? பொருள் ஈட்டாதவனை இல்லாளும் மதிக்க மாட்டாள் என்று ஆயிரம் ஆண்டுகாலம் முன்பே வள்ளுவர் சொல்லி எழுதிவைத்திருக்கிறார். கனடாவில் பிள்ளைகளுக்கு பதினெட்டாம் வயது பிறந்தநாள் அன்று பெற்றோர்கள் அவர்களை வீட்டை விட்டு அனுப்பிவிடுவர் , இல்லாவிட்டால் கூடுதல் வரி கட்ட வேண்டும் .அதுபோல் இங்கும் சட்டம் வரவேண்டும் அப்போதுதான் ஸ்ட்ரைக், பஸ் டே , பைக் ரேஸ், ரூட் தல, காதல் என்று போதையில் அலைவது, பட்டகத்தியில் கேக் வெட்டும் தருதலைகள் ஒழியும். மிகவும் வருத்தத்துடன் இந்த பதிவு செய்கிறேன் எங்கள் அலுவலகத்தில் நடத்திய இந்த வருஷத்திற்கான பிரெஷ்ஷர் பொறியியல் மாணவர்கள் மாணவிகள் நேர்முக கானலில் ஒருவர் கூட பாஸ் மார்க் எடுக்கவில்லை. மாணவர்கள் ஹேர் கட், நடை, உடை பேச்சு அப்படியே இரண்டாம் தர சினிமா, மாணவிகளோ ஸ்டைலோ அப்படியே மாடலிங் நடிகைகள் போல் ஒரு மயக்கத்தில் மிதக்கின்றனர். எங்கே செல்லும் இந்த பாதை ? பெற்றோர்கள் சாட்டையை கையில் எடுக்கவேண்டும், பிள்ளைகள் உறுப்பிட.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-பிப்-202011:54:09 IST Report Abuse
skv srinivasankrishnaveniயூஸ் நீங்கள் சொல்றது 100% கரெக்டுங்க இதுபோல சில பட்டதாரிகள் பாஅறிந்தானாவேன் என்று சொல்லிண்டுஅப்பா அம்மாக்குபரமா வீட்டுலேகுந்திண்டு இருக்கானுகளே அவனுக்களையும் அடிச்சு உதைக்கவேண்டும் படிக்கவாங்கின கடனும் அடக்கமுடியாமல் சாவாமை செத்துண்டு தவிக்கும்பலை பெற்றோர்களையும் அறிவேன் கிடைக்கும்வரையே இருப்போம் என்று ஒரு வேலைக்கே போறவன்தான் புத்திசாலி அரசுவேலைகள் எல்லாம் லஞ்சம்வாங்கி குவிக்கும் சர்காரி பிராமின் ஏன்னு அழைக்கப்படும் SC ST BC என்பவர்களேதான் என்று திமுக அதிமுகளே எடுத்தமுடிவு பலன் படிச்ச மேதாவிகள் போறானுக பாரின்க்கே என்பது உண்மை போறவரைக்கும் அவனுக எவ்ளோ முயற்சி செய்றானுக என்றும் தெரியும் போனால்பிறகு சொல்றானுக பெரியவந்தனம் டு தேர் தேசம் இதுவும் உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X