மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மார்பக புற்றுநோய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
00:00

இந்திய பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில், மூன்றாவது இடத்தில் இருப்பது, மார்பக புற்றுநோய். இதில் பாதித்த பெண்களில், 25 சதவீதம் பேருக்கு, நோய் உறுதியானதும், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணம் அடைவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைவதோடு, புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தையும் அதிகப்படுத்துகிறது.
புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக, 'கீமோதெரபி' உட்பட பல்வேறு சிகிச்சைகள் தரும் போது, 'சைட்டோ டாக்சிக்' போன்ற வீரியம்மிக்க மருந்துகளால், வாந்தி, மயக்கம், ருசியின்மை, அயர்ச்சி போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம். தலைமுடி முழுதும் கொட்டி விடும். நோய் முற்றிய நிலையில் இருந்தால், மார்பகங்களை எடுக்க வேண்டிய நிலையும் வரலாம்.
உடல்ரீதியில் ஏற்படும் இதுபோன்ற விளைவுகளோடு, குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார இழப்பு, திருமணம் ஆன பெண்கள் என்றால், குழந்தைகளை கவனிக்க முடியாமல் போவது போன்ற பல காரணங்களால், 'நாம் எதற்கும் உபயோகம் இல்லையோ' என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்:





சோகமாகவே இருப்பது, பயம், அனைத்தையும் இழந்ததை போன்ற உணர்வு, கோபம், எதற்கு வாழ வேண்டும் என்ற எண்ணம், நம்பிக்கையின்மை, பசியின்மை, துாக்கமின்மை, கவனமின்மை, பதற்றம், எப்போதும் இறப்பை பற்றியே நினைப்பது... இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ வரலாம்.
மன அழுத்தத்துடன் இருக்கும் நோயாளிகள், டாக்டரின் ஆலோசனைப்படி, முறையாக மருந்துகள் சாப்பிடுவதில்லை; குறிப்பிட்ட தேதியில் சிகிச்சைக்கு வருவதில்லை. இதனாலேயே, நோயின் தீவிரம் அதிகமாகிறது.

என்ன செய்ய வேண்டும்?





நோயைப் பற்றியே சிந்திக்காமல், மருத்துவரின் ஆலோசனைகளை, நம்பிக்கையுடன் பின்பற்ற வேண்டும். இயல்பாக வாழ்க்கையை வாழ, பழக வேண்டும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களுடன் பேசினால், நம்பிக்கை வரும். குடும்ப பொறுப்பை முழுமையாக கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு தேவையற்றது. புற்றுநோய்க்கான சிகிச்சை, நீண்ட நாட்களுக்கு அவசியம் என்றாலும், தற்காலிகமானதே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாட்டு கேட்பது, படிப்பது என்று, விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவது, நோய் பாதிப்புக்கு முன் எப்படி இருந்தோமோ, அதுபோல் இயல்பாக இருக்க பழகுவது, ஊட்டச்சத்துமிக்க உணவுகள், வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவை, நோயிலிருந்து விரைவில் குணம் பெற உதவும்.

டாக்டர் அனிதா ரமேஷ்,
கேன்சர் மருத்துவ ஆலோசகர்,
பிரீடம் பிரம் கேன்சர் பவுண்டேஷன்,
சென்னை.
98407 58567

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X