கரடி செய்த தவம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
00:00

தேவம்பாளையத்தில் அடர்ந்த காடு இருந்தது; அதில், உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தை, ஏக்கத்துடன் பார்ததபடி அமர்ந்திருந்தது, ஒரு கரடிக்குட்டி.
அதன் தாய், 'ஏன்டா கண்ணு... அந்த மரத்தையே பார்த்துகிட்டிருக்க...' என்றது.
'இல்லம்மா... அந்த மரத்தின் மேல பெரிய தேன் கூடு இருக்கு; அந்த தேனை குடிக்க ஆசையா இருக்கு...'
'சொல்ல வேண்டியது தானே... மரத்து மேல ஏறி தேனை எடுத்து வந்து குடுத்திருப்பேன் இல்ல...' என்று கூறி, மரத்தில் ஏற முயற்சித்தது கரடி.
இதைக் கண்ட ராணி தேனீ, 'தேனை அபகரிக்க வருது கரடி. ஒண்ணா சேர்ந்து தாக்குங்க. இல்லன்னா, நாம கஷ்டப்பட்டு சேமிச்சதெல்லாம் வீணாப்போயிடும்...' என்று கடும் உத்தரவிட்டது.
கரடியை கொட்ட துவங்கின தேனீக்கள். வலியால் அலறித் துடித்து இறங்கி ஓடியது. தாயின் வேதனை கண்டு கலங்கியது குட்டி.
அன்று இரவு வலியால் அவதிப்பட்ட கரடிக்கு, ஒரு கனவு வந்தது. கரடி தவம் செய்வது போலவும், தேவதை வரம் தருவது போலவும் இருந்தது.
துாக்கம் கலைந்து எழுந்தததும், கனவைப் பற்றி, நண்பர்களிடம் கருத்து கேட்டது. அப்போது, 'ஆமாம்... நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்; இது போல் கனவு வந்தால் நிச்சயம் நடக்கும்...' என்றது குரங்கு.
உடனே தேவதையை நினைத்து தவத்தை துவங்கியது கரடி. விசித்திர சத்தத்தை கேட்டது. தவம் கலைத்து சுய நினைவில் கண் விழித்தது. தேவதை எதிரில் நிற்பதைக் கண்டு, எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது.
'உன் தவம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது; வேண்டும் வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்...' என்றது தேவதை.
சிந்திக்கும் திறன் சிறிதும் இல்லாத கரடி, 'எனக்கு ஒரு குடம் தேன் வேண்டும்...' என்றது.
தேனை அளித்து மறைந்தது தேவதை. அதை எடுத்து சென்று, குட்டியிடம் கொடுத்தது கரடி. குடித்து மகிழ்ந்தது குட்டி.
அப்போது, 'பெரிய வரம் எதையும் கேட்காமல், ஒரு குடம் தேனைக் கேட்டு வாங்கி, வரத்தை வீணடித்து விட்டோமே' என வருந்தி, மீண்டும் தவத்தில் அமர்ந்தது. உணவு, உறக்கமின்றி தொடர்ந்தது.
தேவதை, மீண்டும் தோன்றி, 'வேண்டும் வரத்தைக் கேள்...' என்று கூறியது. எதையும் யோசிக்காத கரடி, 'தேன் கூட்டிலுள்ள மொத்த தேனும் வேண்டும்...' என்றது.
அதை கொடுத்து மறைந்தது தேவதை. மிகுந்த மகிழ்ச்சியுடன், 'அன்று, என் செல்லத்துக்கு கொஞ்சம் தேனை எடுக்க வந்தேன். என்னைக் கொட்டி பழி வாங்கிட்டீங்க இல்ல... இப்ப நீங்க சேர்த்து வெச்ச எல்லா தேனும், என் கைக்கு வந்துடுச்சு' என்று சிரித்தது கரடி.
அந்த தேனையும், ஆசையாக குடித்து மகிழ்ந்தது குட்டி.
தேன் காலியானதும், 'பெரிய வரம் கேட்காமல், வீணடித்து விட்டோமே' என, ஏங்கிய கரடி, மீண்டும் தவத்தில் அமர்ந்தது.
உணவு, உறக்கமின்றி நீண்ட நாட்கள் அமர்ந்திருந்தது. தேவதை வரவேயில்லை. பேராசையால் அமர்ந்திருந்த கரடி, உணவு இன்றி இறந்தது.
செல்லங்களே... பிறர் உழைப்பில் உருவான பொருளை அபகரித்தால், இழப்பு தான் ஏற்படும். எதையும் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். யோசிக்காமல் எடுக்கும் அவசர முடிவு பாதகமாகவே அமையும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X