இளஸ்... மனஸ்! (34)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
00:00

இனிய பிளாரன்சுக்கு...
மகளை நினைத்து வேதனைப்படும் தாய் எழுதுவது...
என் மகளுக்கு, ஒன்பது வயதாகிறது; 4ம் வகுப்பு படிக்கிறாள்; சுமாராக தான் படிப்பாள்; நகைச்சுவை உணர்வு மிக்கவள். அளவாக சாப்பிடுவாள்; நெடு நெடு உயரம்; ஒல்லியான உடலுக்கு பொருந்தாத பருத்த முகம்; ஒரு வயதில் தம்பி இருக்கிறான்.
மகளின் ஒரே பிரச்னை, பழைய நடிகர் எம்.ஆர்.ராதா போல், இரண்டு குரலில் பேசுவது தான். பள்ளியிலும், வீட்டுக்கு வெளியேயும் சரி, இயல்பான குரலில் பேசுவாள்.
வீட்டுக்குள், குடும்பத்தினரிடம், இரண்டு வயது குழந்தை போல, மழலை குரலில் பேசுவாள். வீட்டுக்கு வெளியே, பெரும்பாலும் உண்மை பேசும் அவள், வீட்டுக்குள் பெரும்பாலும் பொய்யே பேசுவாள்.
எங்களிடம் பேசும் மழலைக்குரலில், திக்கல், திணறல், நடுங்கல் இருக்கும்; நானும், எத்தனையோ முறை, 'ஒரே குரலில் பேசுடி... எதுக்கிந்த நாடகம் போடுற... இனி, எங்க கிட்ட, 'லல்லல்லா' குரல்ல பேசுன, குரல்வளையை நசுக்கிப் புடுவேன்...' என்று மிரட்டி பார்த்து விட்டேன்.
கண்டித்த சிறிது நேரம், இயல்பான குரலில் பேசுவாள். மீண்டும் மழலைக் குரலில் பேச ஆரம்பித்து விடுகிறாள். அவளை என்ன செய்து திருத்தலாம்.

சினிமா நடிகர் குரலில் மகள் பேசுவதைக் கண்டு நடுங்கும் சகோதரியே...
உன் மகளுக்கு, இரட்டை ஆளுமை என்ற மனநோய் இருக்கிறது. அளவுக்கு மீறிய கண்டிப்பு, அவளை இரண்டு குரல்களில் பேச வைக்கிறது. பள்ளியில், ஆசிரியை கடுஞ்சொல் பேசி மிரட்டவில்லை; பக்கத்து வீட்டார், அண்டை வீட்டாரிடம் அவள் பயப்படவில்லை.
வெளிஉலகம் கனிவாக இருக்கிறது; அதனால், வீட்டுக்கு வெளியே, இயல்பாக, நடந்து கொள்கிறாள்.
வீட்டுக்குள் நீங்களும், உங்கள் கணவரும், 'அதை செய்யாதே... இதை செய்யாதே... பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் விளையாட போகாதே, குப்புறப்படுத்து, தாறுமாறாய் துாங்காதே, ஒழுங்காக பல் விளக்கு, பள்ளியில் சாப்ப்பிடாமல் திருப்பி எடுத்து வராதே...' என, ராணுவ கட்டுப்பாடு போல் கட்டளை பிறப்பிக்கிறீர்.
மகளை அது மிகவும் பாதித்திருக்கிறது; நடத்தையில், சதா குறை கண்டுபிடிப்பதாக பயந்து, உங்களிடம் பொய் பேசுகிறாள்; மழலை மாறாத இரண்டு வயது குழந்தை என்ற பாவனையை ஏற்படுத்த முயல்கிறாள்; இதை, வளர விட்டால், சிக்கல் அதிகமாகும்.
அவளை சரிப்படுத்த சில வழிமுறைகளை செயல்படுத்துங்கள்...
நீங்கள் முதலாளி, உங்கள் மகள் தொழிலாளி; நீங்கள் சர்வாதிகாரி, மகள் அடிமை என்ற பாவனையை, முதலில் விட்டொழியுங்கள்; மகள் என்றாலும், அவள் தனித்தன்மை வாய்ந்தவள் என்பதை உணருங்கள்.
செலுத்தும் வாகனத்தை அதன் போக்கில் விட்டு மென்மையாக வேகத்தை குறைக்க வேண்டும்.
இடது திசையில் போக வேண்டிய வாகனம், வலது திசையில் போனால், 'ஸ்டிரியங்'கை, லாவகமாக கையாண்டு, திருப்ப வேண்டும். உங்களுக்கும் சேதாரம் இருக்க கூடாது; வாகனத்திற்கும் சேதாரம் வரக் கூடாது.
எதை கூறினாலும், 50 சதவீதம் அன்பை கலந்து விடுங்கள். இரட்டைக் குரலில் பேசினால், 'இது மாதிரி தொடர்ந்து பேசினால், எல்லாரும், உன்னை கிண்டல் செய்வர்; வேண்டாம்மா... கடவுள் உனக்கு கொடுத்த குரலில் பேசு செல்லம்...' என, நைச்சியமாக தடுங்கள்.
பொய் பேசினால், 'எதுக்கம்மா வீணாக சிரமப்படுகிறாய்; ஒரு பொய் பேசினால், அது தொடர்ந்து, 100 குட்டி போடும். அம்மாவோ, அப்பாவோ பூதங்கள் அல்ல; எங்களைக் கண்டு பயப்படாதே; பெற்றோர் என்ற மதிப்புடன் நட...' என கூறுங்கள்.
'எட்டு வயது வரை தனிக்காட்டு ராணியாக இருந்து விட்டோம்; இப்போது, தம்பி பிறந்து, நம் இடத்தில் பாதியை பிடுங்கிக் கொண்டானே' என்ற பதட்டம் கூட, மகளுக்கு இருக்கலாம்; இருவரையும் சரி சமமாக நடத்துங்கள்.
நீங்கள் கண்டிப்பாய் இருந்தால், உங்கள் கணவரை, மகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள சொல்லுங்கள். கணவர் கண்டிப்பாய் இருந்தால், நீங்கள் அனுசரணையாக இருங்கள். இருவரும் ஜோடி சேர்ந்து ஓட ஓட விரட்டாதீர்கள்.
ஒரு நாளின், 24 மணிநேரமும், மகளை கண்டித்தபடியே இருக்காதீங்க; அவளிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டுங்கள்.
தம்பியை எப்படி பாதுகாப்பாக துாக்குவது, உணவு ஊட்டுவது, தம்பிக்கு எப்படி நாப்கின் மாற்றுவது என்பதை, மகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
சதா, 'படி... படி...' என நச்சரிக்க வேண்டாம். ஒரு சிறுமிக்குரிய எல்லா சந்தோஷங்களையும், அனுபவிக்க அனுமதியுங்கள்.
மகளுக்கு, 'குட் டச்... பேட் டச்...' பற்றி நுட்பமாக சொல்லிக் கொடுங்கள்.
எதாவது, 'டிவி, மிம்மிக்ரி' நிகழ்ச்சியை பார்த்து, இரட்டைக் குரலில் பேசுகிறாளா என்பதை கவனியுங்கள். அப்படி இருந்தால், பல குரல் கலைஞராக, பெண்கள் பரிணமிப்பது மிகவும் கடினம் என்பதை விளங்க வையுங்கள்.
நல்லதே நடக்கும், என நம்பிக்கையுடன் இருங்கள் சகோதரி!
- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X