இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
00:00

மனைவியும் மனுஷிதானே...

அண்மையில், மார்க்கெட் சென்று வரும் வழியில், ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தாள், என் தோழி.
'என் கணவர் வெளியூர் போயிருக்கார். அதனால, ஓட்டல்ல சாப்பிட வந்தேன்...' என்றவளை, விசித்திரமாக பார்த்தேன்.
அதை புரிந்து கொண்டவள், 'விதவிதமாய் சமைத்து போட, ருசித்து சாப்பிடும் கணவர் மற்றும் பிள்ளைகள், 'நீ சாப்பிட்டியா...' என்று, ஒருநாள் கூட கேட்டதில்லை. 'நீயும் உட்கார்ந்து சாப்பிடு, நாங்கள் பரிமாறுகிறோம்...' என, கூறுவரா என்று, மனம் ஏங்கித் தவிக்கிறது.
'அதை வாய்விட்டு கேட்டும், அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த ஏக்கமே, மன அழுத்தத்தை தர ஆரம்பித்தது. அதை தணித்து கொள்ளவே, ஓட்டலில் சாப்பிட வந்தேன். எனக்கு பிடித்த உணவை கேட்டு, பிறர் கையால் பரிமாற செய்து, சாப்பிடுவது, தனி ஆனந்தமாக உள்ளது.
'அதனால், கணவர், ஊரில் இல்லாத நாட்களில், ஒரு வேளை மட்டும் ஓட்டலுக்கு சாப்பிட வந்து விடுவேன்...' என்று கூறி, கண்கலங்கினாள்.
ஆண்டு முழுதும் அடுப்படியில் வெந்து, உணவை தயார் செய்யும் மனைவிக்கு, மாதத்தில் ஒருநாளாவது ஓய்வு கொடுத்து, அவளுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறினால், மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பதை கணவன்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியும் மனுஷி தானே!
ஜி. சுந்தரவல்லி, சென்னை.

முட்டாள்களாக்கும் வலைதள பதிவுகள்!

'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' வந்தாலும் வந்தது, நாட்டில் ஏகப்பட்ட எழுத்தாளர்களும், கவிஞர்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஐடியா கொடுக்கிறோம், ஆலோசனை சொல்கிறோம், மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் வரும் சில பதிவுகள், வெறுப்பை ஏற்படுத்துவதோடு, மக்களை முட்டாள்களாகவும் ஆக்கி வருகிறது.
அப்படி முட்டாளாக்கும் ஒரு வலை பதிவு தான் இது:
தேங்காயை சுலபமாக உடைக்க, முதலில், தேங்காயில் உள்ள குடுமியை சுத்தமாக மழித்து விட வேண்டுமாம். நல்ல வேளை, 'ஷேவிங் கிரீம்' தடவி, 'பிளேடால்' மழிக்க சொல்லவில்லை. பிறகு, மூன்று கண்களில் ஏதாவது ஒரு கண்ணை துளையிட்டு, அதன் வழியாக இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து கொள்ள வேண்டுமாம்.
அதன்பின், அந்த ஓட்டையில் கத்தியை செருகி, தேங்காயை கவனமாக பிடித்து, 'காஸ்' அடுப்பில் சூடுபடுத்த வேண்டுமாம். சிரட்டை நன்றாக சூடேறி, ஒட்டியிருக்கும் கொஞ்ச நஞ்ச நார்களும் பொசுங்கியதும் எடுத்து, சூடு தணிந்ததும், அதன் மீது லேசாக தட்ட வேண்டுமாம்.
சிரட்டை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, கொப்பரை வடிவில் தேங்காய் கிடைக்குமாம். அதை கத்தியால் பத்தை பத்தையாக கீறி பயன்படுத்தி கொள்ளலாமாம். சுலபமாக தேங்காய் உடைக்கும் வழியாம் இது.
இரண்டு தட்டு தட்டினால் உடையும் தேங்காய்க்கு, 20 நிமிட, 'ட்ரீட்மென்ட்' மற்றும் 'காஸ்' செலவு வேறு. இதைவிட முட்டாள்தனம் வேறு ஏதாவது உண்டா... இதற்கு ஒரு வீடியோ பதிவு, வெட்கக் கேடு!
பா.லட்சுமி நாராயணன், சென்னை.

சட்டம் தன் கடமையை செய்தால்....

ஓரிரு மாதங்களுக்கு முன், ஒரு இறுதிச் சடங்கில், குடித்து, ஆட்டம் போட்ட இளைஞர்கள் பற்ற வைத்த பட்டாசு, சுடுகாட்டுக்கு செல்லும் தெருவில் இருந்த, சிலரது குடிசை வீடுகளை தீக்கிரையாக்கியது.
வழியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவலர்கள், சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிந்து, இந்த செயலுக்கு காரணமான இளைஞர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சட்டப்பிரிவு கடுமையாக இருந்ததால், ஒவ்வொரு இளைஞரின் பெற்றோரும், பல்வேறு நிபந்தனைகளுடன், ஜாமின் தொகையாக, 1.5 லட்சம் ரூபாய் வரை செலவழித்து, வெளியில் அழைத்து வந்தனர்.
மது அருந்தி, சாலைகளில் பாட்டில்களை போட்டு உடைத்தும், அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவு கொடுத்தும் வந்த பிள்ளைகளின் செயல்களை கண்டிக்காமல், 'இளைஞர்கள் என்றால் அப்படித்தான்...' என்று அலட்சியமாக இருந்த பெற்றோர்களுக்கு, இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியது.
இனி, இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அந்த இளைஞர்கள் விசாரிக்கப்படுவர் என்பதால், அவரவர் பெற்றோரே, அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டதுடன், இனி, ஒழுங்காக இருக்குமாறு கண்டித்தனர்.
இது முடிந்து, சில நாட்களுக்கு பின், அதே பகுதியில் ஒருவர் இறந்து விட, இறுதி ஊர்வலத்தில், வேறு சில இளைஞர்கள், சட்டையை கழற்றி ஆட முற்பட்டனர். இதைக் கண்ட அவரவர் பெற்றோர், அந்த இளைஞர்களையும், சிறுவர்களையும் கண்டித்து, அமைதியாக செல்லுமாறு கூறியதை, நேரில் பார்த்தேன்.
அரசியல் குறுக்கீடு இன்றி, காவல் துறை, தன் கடமையை சரியாக நிறைவேற்றினாலே, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்பதை உணர முடிந்தது.
க. சரவணன், திருவாரூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
17-பிப்-202018:03:44 IST Report Abuse
Girija @ஜி. சுந்தரவல்லி, சென்னை. இதற்கு தான் பிராமின் பிரிவில் மாதம் மூன்று நாள் பெண்களை தனிமை படுத்துவார்கள், அதன் நோக்கம் சரியாக இருந்தாலும் அதை அமல்படுத்தியவிதம் மோசமாக இருந்தது அதனலாலேயே பல கூட்டு குடும்பங்கள் பிரிந்தது. இந்த வழக்கத்தை இன்றும் கடைபிடிக்கும் வீடுகளில் , அந்த நாட்களில் கணவர் சமையல் செய்து மனைவி குழந்தைகளுக்கு பரிமாறி வீட்டையும் குழந்தைகளுடன் சேர்ந்து மேனேஜ் செய்வர். அந்த நாட்களில் மனைவிக்கு ஓரளவாவது ஓய்வு மற்றும் அன்பான உபசரிப்பு ஹோட்டல் உணவு என்று கணவரிடம் இருந்து கிடைக்கிறது, நவீன உலகம் அது இது என்று பெண்களே இதற்கு எதிராக பேசி இந்த வழக்கத்தை நிறைய வீடுகளில் இப்போது பின்பற்றுவதில்லை. இதனால் கணவர், குழந்தைகளுக்கு சின்ன வீட்டு வேலைகள், உணவு பரிமாற, உபசரிக்க கூட தெரிவதில்லை. பெரியோர்கள் சொல் எப்போதும் தீமை செய்ததில்லை.
Rate this:
Share this comment
Cancel
Krish - Chennai ,இந்தியா
17-பிப்-202004:13:54 IST Report Abuse
Krish தினமலர் பத்திரிகை இதுபோல குற்றம் தண்டனைகளை படத்துடன் செய்தி வெளியிட்டால் , குறையலாம்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-பிப்-202021:11:14 IST Report Abuse
D.Ambujavalli 2 . அடித்துக்கொள்ளக் கை இரண்டு பத்தாது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பது போலிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X