அதலைக்காய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
00:00

அதலைக்காய் என்பது விவசாயத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை போன்றது என்பர். விருதுநகர், நெல்லை, மதுரை மாவட்டங்களில் அதலைக்காய் பயிரிடப்படுகிறது. கரிசல் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. இது பாகற்காய் குடும்பத்தை சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. செலவு இல்லாமல் சாதாரணமாக கரிசல் மண், தரிசு காடுகளில் எளிமையாக வளரக்கூடியது.
வறட்சியிலும் பல ஆண்டு காலம் வாழும் தன்மை உடையது. வறட்சி காலத்தில் காய்ந்து விடும்.
மண்ணுக்கு அடியில் இருக்கும் இதன் கிழங்கு உயிருடன் தான் இருக்கும். கிட்டத்தட்ட பீனிக்ஸ் பறவை போலத்தான் இச்செடியும்.
இலைப்பகுதி இருதய வடிவில் இருக்கும். ஒரே செடியில் ஆண் மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும்.
மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு ஆண் மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புக்கள் இருக்கும். காய்கள் 20-25 மி.மீ., நீளம் உடையது.
காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் மெல்லிய எட்டு நுண்ணிய துளைகள் இருக்கும்.
மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய்களை பறித்து 10 மணி நேரத்தில் விற்பனை அல்லது பயன்படுத்திட வேண்டும்.
தாமதித்தால் காய்களில் வெடிப்பு ஏற்பட்டு மருத்துவ குணங்கள் பாதிக்கப்பட்டு விடும். இதை இருப்பு வைக்க இயலாது.

- எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
63746 95399

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X