தேவையான பொருட்கள்
சோயா உருண்டை - 20
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரொட்டி துாள் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் இருமுறை அலசி, பிழிந்து எடுக்கவும். அதோடு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும்.
* அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விருப்பமான வடிவத்தில் செய்து, ரொட்டி துாளில் பிரட்டி, எண்ணெயில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.