தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 10
கறுப்பு கொள்ளு - 50 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 10
நெய் - 50 கிராம்
செய்முறை
* அலுமினியம் பாயில் பட்டன் காளானின் தண்டை நீக்கி, சுத்தம் செய்ய வேண்டும். கறுப்பு கொள்ளை வாணலியில் வறுத்து, மிக்சியில் நன்றாக பொடியாக்கவும். வெல்லம் மற்றும் ஏலக்காயையும், நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி, தேங்காய் துருவலை வதக்க வேண்டும். அதில், வெல்லம், ஏலக்காய், கறுப்பு கொள்ளை சேர்த்து வதக்கி, வெல்லம் லேசாக உருகிய பின், அடுப்பை அணைக்கவும். இந்த பூரணம் ஆறிய பின், தண்டு நீக்கிய காளான் பகுதியில், பூரணத்தை வைக்க வேண்டும்.
* அதன்பின், அலுமினிய பாயிலில் காளானை வைத்து, கொழுக்கட்டை வடிவில் சுற்றி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்தால், சுவையான காளான் கொழுக்கட்டை தயார்.