தேவையான பொருட்கள்
வெற்றிலை - 10
அரிசி மாவு - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
இளநீர் வழுக்கை தேங்காயுடன் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
* வெற்றிலையை விழுதாக அரைத்து, அரிசி மாவுடன் அதைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கொதிக்கும் நீரில் அவற்றை போட்டு நன்றாக வெந்தவுடன், தனியாக எடுத்து வைக்கவும்.
* சர்க்கரையை ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி, இளநீர் வழுக்கையை நீளவாக்கில் அரிந்து கொள்ள வேண்டும். தேங்காய் பாலை சூடு செய்து, வெற்றிலை உருண்டைகளை பாகில் சேர்த்து, கொதிக்கும் தேங்காய் பாலில் போட்டு, இளநீர் தேங்காய் வழுக்கை, சிறிதளவு சர்க்கரை சேர்த்து, அடுப்பை அணைக்க வேண்டும்.
* விரும்பினால், நறுக்கிய முந்திரி, பாதாமை சேர்க்கலாம். சூடான, சுவையான வெற்றிலை பாயசம் தயார்.