தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 1 கப்
வரகு அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1கப்
துவரம் பருப்பு - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
* குதிரைவாலி, வரகு அரிசி இரண்டையும் ஒன்றாகவும், பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை ஒன்றாகவும் சேர்த்து, தனியே இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, பருப்பை ஒன்றாக சேர்த்து, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்; கேரட்டை துருவிக் கொள்ளவும்.வாணலியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, லேசாக வதக்கி, மாவில் சேர்க்கவும்.
* தோசைக் கல்லை சூடாக்கி, நல்லெண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி, மேலே கேரட் துருவலை துாவி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.கேரட்டிற்கு பதிலாக, முருங்கைக் கீரையும் சேர்க்கலாம்.
* தக்காளி சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட சுவையான அடை, தோசை இது.