தேவையான பொருட்கள்
மாவு ஜவ்வரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
துாயமல்லி பச்சரிசி - 1 கப்
தங்க சம்பா புழுங்கல் அரிசி - 1 கப்
செய்முறை
* இரண்டு அரிசியையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். நன்கு பொங்கிய மாவில், ஜவ்வரிசியை சேர்த்து கலந்து, பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைக்கவும். காலையில் எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* சாதாரணமான தோசையாகவும் சுடலாம்; ரவை தோசை போலவும் வார்க்கலாம். அதற்கேற்ப மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். தோசை கல்லில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
* பாயாசத்தில் இருப்பதைப் போன்று, முத்து முத்தாக, ஜவ்வரிசி தோசையின் மேல் அழகாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
* தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, பொட்டுக் கடலை சேர்த்து அரைத்த சட்னி, தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.