தேவையான பொருட்கள்
பாலக் கீரை - 2 கட்டு
துவரம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் - 1
பூண்டு - 7 பல்
கடுகு எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
செய்முறை
வாணலியில் கடுகு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, இடித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
இதில், மஞ்சள் துாள், நறுக்கிய பாலக்கீரை சேர்த்து, எண்ணெயில் கீரை நன்கு வதங்கிய பின், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது, வேக வைத்து மசித்த துவரம் பருப்பை சேர்க்கவும். கலவை நன்கு கொதிக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கீரையும், பருப்பும் சேர்ந்து கலவை கெட்டியானதும், அடுப்பை அணைக்கவும். விரும்பினால், சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.பாலக் கீரையுடன், பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டு, பஞ்சாப் மாநிலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் தொடுகறி.