தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சை பயறு - 1 கப்
காய்ந்த மாங்காய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகு துாள், சீரக துாள் - தலா 1/2 டீ ஸ்பூன்
நறுக்கிய மல்லி தழை - சிறிது
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
முளைகட்டிய பச்சை பயறை, இரு நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதோடு, துருவிய கேரட், சீரகம், மிளகு துாள், மாங்காய் துாள், மல்லித்தழை, உப்பு கலந்து பரிமாறவும்.