தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - சிறிது
பால் - தேவைக்கு
சர்க்கரை - ருசிக்கு
செய்முறை
கேரட் துருவலுடன் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் நன்கு அரைத்து, பின் சிறிது நீர் சேர்த்து, மீண்டும் அரைத்து, வடிகட்டி, காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது சூடான பால் சேர்த்து குடிக்கலாம். பரீட்சை நேரம் நெருங்குவதால், ஊட்டச்சத்து மிக்க, எளிமையாக செய்யக்கூடிய சில, 'ரெசிபி'க்கள் இந்த வாரம். இவை அனைத்தும், சோர்வை நீக்கி, சுறுசுறுப்புடன் படிப்பதற்கும், நினைவாற்றலுக்கும், உடல் உஷ்ணம் குறையவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும் உதவும்.