அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2020
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது: 28. இள வயதிலிருந்தே, காதல் என்றாலே பயம். எந்த ஆணுடனும் பேச மாட்டேன். அதனால், பள்ளி படிப்பை பயத்துடன் முடித்தேன். மதுரையில், செவிலியர் பயிற்சிக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறையில், உறவினர் வீட்டிற்கு சென்று வருவேன்.
அப்போது, ஒரு ஆண் நண்பரின் பழக்கம் ஏற்பட்டது. பேச தயங்கினேன்.
'அவன், உனக்கு அண்ணன் தான்; தயங்காமல் பேசு...' என்றார், அம்மா.
தயக்கத்துடன் பேசினேன். பிறகு ஒருநாள், தொலைபேசியில், 'நான், உன்னை விரும்புகிறேன்...' என தெரிவித்தான்.
நான், அதை ஏற்கவில்லை.
அவன், கையை அறுத்து கொண்டு, அடிக்கடி தொல்லை செய்தான். நான், அதை கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள், கையை ஆழமாக அறுத்துக் கொண்ட அவனை, மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, என்னை தொலைபேசியில் அழைத்து, 'நீ இல்லை எனில் செத்துடுவேன்...' எனக் கூறினான்.
நானும் பரிதாபத்தில் பேச ஆரம்பித்து, கடைசியில் அவனை விரும்பினேன். இப்போது, இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என்னால் அவனை மறக்க முடியவில்லை.
அவனோ, 'இப்போது தான் எல்லாம் புரிகிறது. நீ, எனக்கு தங்கை; உன்னை, என்னால் திருமணம் செய்ய இயலாது...' என, கூறுகிறான்.
எனக்கோ தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. இது, வீட்டிற்கு தெரிய வர, அவர்களும் என்னை கடுமையான சொற்களால் காயப்படுத்துகின்றனர். இவர்களுக்கு மத்தியில் வாழ வழி கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
காதல் என்பது, உலகின் அனைத்து கவிஞர்களும் ஒன்று சேர்ந்து எழுதிய, ஹைக்கூ கவிதை. நுண்மையான காதல் உணர்வு, தற்காலத்தில் கொச்சைப்படுத்தப்படுகிறது. பணம், அதிகாரம் மற்றும் புகழை காட்டி, துரத்தி துரத்தி, கெஞ்சி, யாசித்து, வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன, காதல்கள்.
எந்த நேரமும் கலைந்து விடும் அவசரக் கோலங்களான இவ்வகை காதல்கள், செயற்கையானவை. உன் காதல், இயந்திரம் அடைகாத்த கோழிக்குஞ்சு.
உன் காதலை பெற, காதலன், 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்திருக்கிறான். திருவோட்டை நீட்டி, காதல் பிச்சை கேட்டிருக்கிறான். நீயும் பரிதாபப்பட்டு, காதலை தந்திருக்கிறாய்.
உன் அம்மா, 'அவன் அண்ணனை போன்று, வயதில் மூத்தவன். அதனால், அவனுடன் இயல்பாக பேசு...' என்கிற அர்த்தத்தில் பேசினாரா அல்லது அவன் நிஜமாகவே, உனக்கு அண்ணன் உறவு முறையா... அதை நீ தெளிவாக கடிதத்தில் குறிப்பிடவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், அவனுக்கு ஞானோதயம் வந்து, தங்கை முறை பெண்ணான உன்னை காதலிக்க மாட்டேன் என்கிறான்.
யோசித்து பார், அவனுடைய அழகை, படிப்பை, திறமையை, பராக்கிரமத்தை பார்த்தா காதலித்தாய்... அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் செத்து விடுவான் என, பயந்துதானே ஏற்றுக்கொண்டாய்... அவன் செய்த அதே தவறை, நீ செய்யலாமா?
சந்திர கிரகணத்திலிருந்து சந்திரன் விடுபடுவது போல, சூரிய கிரகணத்திலிருந்து, சூரியன் விடுபடுவது போல, இக்காதலில் இருந்து விடுபடு. உன்னை, அவன் தொடர்ந்து தொந்தரவு செய்யாமல் விலகிப் போகிறானே என, நிம்மதி பெருமூச்சு விடு. அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* அவனை தலை முழுகு. அவனை பற்றிய நினைவுகளை மனதிலிருந்து துடைத்தெறி. அவன் கைபேசி எண்ணை மற, உன் கைப்பேசி எண்ணை மாற்று
* செவிலியர் பயிற்சி முடித்ததும், பணியில் சேர்ந்து விடு. அரசு பணி கிடைத்தால் நல்லது. இல்லையென்றால், ஏதாவது ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் நங்கையாக பணியில் சேர்; நோயாளிகளுக்கு சேவை செய்யும்போது, சுயம் மறந்து போகும். சில விஷயங்களில், மருத்துவர்களுக்கு சமமான, கூடுதலான மருத்துவ அறிவு, செவிலியர் நங்கையருக்கு உண்டு. மிகச்சிறந்த செவிலியர் நங்கை என, பெயர் வாங்கு
* உன் அம்மாவிடம், வரன் பார்க்க சொல். தகுதியான வரனை பார்த்து நீ மணந்து கொண்டால், பாலைவனமான உன் வாழ்க்கை, சோலைவனமாகும்
* உனக்கும், காதலுக்கும் சரிபட்டு வராது. பணியிடத்தில், யாருடனும் காதல் வயப்பட்டு விடாதே
* அண்ணன் முறை காதலன், மீண்டும் உன் வாழ்க்கையில் குறுக்கிடும் வாய்ப்புகளை முழுமையாக கத்தரி
* தற்கொலை எண்ணத்தை கைவிடு. சாவதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால், வாழ்வதற்கு, 999 காரணங்கள் இருக்கின்றன. 'மீதி வாழ்நாளில், ஒரு லட்சம் நோயாளிகளின் உயிர் காக்கும் சேவை செய்வேன்...' என, சங்கல்பம் கொள்
* உன் தோழியர் யாரும், அர்த்தமற்ற காதல்களில் ஈடுபடாமல் இருக்க, தகுந்த ஆலோசனைகள் கூறு
* திருமணத்திற்கு பின், கணவரை காதலி; வாழ்க்கை அர்த்தப்பூர்வமாக நகரும்
* அம்மாவுடன் பேசும் நேரத்தை அதிகரி. அம்மாவின் அறியாமையையும், உன் அறியாமையையும் ஒரு சேர போக்கு
* செவிலியர் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைந்து விட்டால், பழைய விஷயங்களை, உன் வீட்டார் எளிதில் மறந்து விடுவர். இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாய் சவாரி செய்வாய் என, திடமாய் நம்புகிறேன்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
02-மார்ச்-202023:08:02 IST Report Abuse
Anantharaman Srinivasan மொத்தத்தில் இருவரும் இனம் புரியாத இளம்வயதில் அம அண்ணன்தங்கை முறையென்று தெரிந்தே ஒத்தர்மாற்றி ஒத்தர் காதல்வயப்பட்டு இருக்கிறார்கள். இதுஒரு வகை சைக்கோ, எட்டா பழத்துக்கு கொட்டாவி விடுவதுபோல்.
Rate this:
Cancel
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்ச்-202010:50:56 IST Report Abuse
Valaikuda Vallal "எந்த ஆணுடனும் பேச மாட்டேன்" இது தான் நீ செய்த முதல் தவறு.. ஏன் உன் தந்தை ஒரு ஆண்தானே? எதையும் ஓவராக செய்தால், இது தான் விளைவு ... பள்ளி படிப்பை எதற்காக பயத்துடன் முடிக்க வேண்டும் ?? 28 வயதாகியும் இன்னும் செவிலியர் படிப்பை முடிக்க வில்லையா ?? யார் காதில் பூ சுற்றுகிறாய் ?? நீ காதலித்த அந்த வாலிபன் அண்ணன் முறை என உனக்கு தெரியும் அல்லவா?? தெரிந்தும் காதலித்தது உன் தவறு ... அந்த வாலிபரை பற்றி உன் பெற்றோரிடம் ஏன் முன்கூட்டியே கூற வில்லை ?? பெண்ணே நீ உன் வாழ்வில் எதையும் இழக்க வில்லை.. நடந்ததை கெட்ட கனவாக நினைத்து புது வாழ்வை தொடங்கு ...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-மார்ச்-202001:43:29 IST Report Abuse
Girija ஒருத்தன் ப்ளாக்மெயில் செய்தால் அயோக்கியன் என்று அர்த்தம் . நீ செய்த புண்ணியம் அவனுடன் ஓடி போய் அவமானப்படவில்லை. ஒரு தடவை மலத்தை மிதித்தால் அதை தினமுமா நினைப்பாய்?
Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
01-மார்ச்-202014:22:11 IST Report Abuse
Giridharan Srinivasan//ஒருத்தன் ப்ளாக்மெயில் செய்தால் அயோக்கியன் என்று அர்த்தம் .// என்பது சரி. இங்கு குறிப்பிட்டு இருக்கும் பெண் தெளிவாக " .'அவன், உனக்கு அண்ணன் தான் தயங்காமல் பேசு...' என்றார், அம்மா." என்று கூறி இருக்கிறார். அப்பொழுது இந்த பெண் சம்பந்தப்பட்ட ஆண் இடம் தெளிவாக "என் அம்மா உங்களை என் அண்ணன் உறவு முறை என்று சொல்லி இருக்கிறார், அதனால் உங்களை என் அண்ணனாகத் தான் கருதுதி / நினைத்து பழகுகிறேன்." என்று முதலிலேயே கூறாமல் இருந்தது இந்த பெண்ணும் அந்த ஆணை சந்தித்த நாட்களில் இருந்தே விரும்பி இருக்கிறாள் என்று கருதலாம். மேலும் இந்த பெண் "ஒரு ஆண் நண்பரின் பழக்கம் ஏற்பட்டது. பேச தயங்கினேன்." என்று சம்பந்தப் பட்ட ஆணை "நண்பர்" என்று இங்கு எழுதி இருப்பது இந்த பெண்ணும் அந்த ஆணை சந்தித்த நாட்களில் இருந்தே விரும்பி இருக்கிறாள் என்று தயக்கமின்றி கருத வாய்ப்புக்கள் உள்ளன....
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
01-மார்ச்-202019:23:27 IST Report Abuse
வழிப்போக்கன் அதற்கு trauma என்று பெயர் .. சொல்வது எளிது .. காதலில் விழுந்து அதில் தோல்வி கண்டவர்களுக்கு புரியும் இந்த பெண்ணின் மனநிலை. வருடங்கள் கடந்த பின்னரும் பள்ளி காதலியை (அது ஒருதலை காதலோ அல்லது க்ரஷ் அல்லது பதின்மப்பருவ காதலோ - எப்படி வர்ணம் பூசினாலும்) காணும் பொழுது அவருடன் காலத்தை கழிக்க முடியவில்லையே என்ற சிறு வருத்தம் தோன்றாது இருக்காது (அது தற்போதைய துணைக்கு துரோகம் என்று தோன்றினாலும்). அதுதான் காதலின் வலி ( மை)...
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
01-மார்ச்-202019:36:02 IST Report Abuse
வழிப்போக்கன் இந்த பெண் படிப்பாரோ இல்லையோ. ஆனால் ஒன்று இந்த வலி உண்மையானது. சற்றும் தீர்க்கமுடியாத ஒன்று எத்தனை ஆழமாக காதலித்து இருக்கிறார் என்பதை பொறுத்தது. வெறும் டைம்பாஸ் காதல் (அது காதல் இல்லை வெறும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்) என்றால் வலி இருக்காது. அடுத்த நபரை தேடி சென்று விடும். அதனை விட்டு இது நமது துணை என்று எண்ணி இருக்கும் காதல் (எல்லை மீறுவது கூட அதனால்தானே - பெண்கள் எளிதாக எல்லை மீறுவதில்லை இன்றைய நவீன உலகில் கூட, பாதுகாப்புகள் பல இருந்தும் கூட) அது முறிவது எளிதாக ஏற்க முடியாது. அதுவும் சற்று (சற்று என்ன நிறைய) பழமைவாத கோட்பாடுகளை சுமந்து கொண்டு இருக்கும் தமிழ் நாட்டில் காதல் கொள்வதே குற்றம் , அதுவும் கன்னித்தன்மை , என்ன இருந்தாலும் ஆண்மகன் என்ற எண்ணம் இது இன்னமும் கஷ்டம் .. இந்த பெண்ணும் அது போன்ற எண்ணங்கள் நிறைந்தவர் அதனால் தான் வருந்துகிறார். இவருக்கு தேவை ஒரு நல்ல மனநல மருத்துவர் (இது போன்ற பொதுவெளி அல்ல) . அதுவும் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது என்றால் அது சற்று ஆபத்தானது. எழுதி இருக்கிறார் என்றால் ஒரு உத்வேகத்தில் முடிவெடுக்காத ஒருவர் என்பது நல்லதே. உடனே தான் பணிபுரியும் மருத்துவமனையில் ஒரு நல்ல ஆலோசகரை தேர்ந்து எடுத்து உதவி பெறுவது , மனஅழுத்ததில் இருந்து வெளிவர மருந்துகள் (இவை உண்மையில் நன்மை பயக்கும் )உட்கொள்வது நல்லது. மற்றவர்களுக்காக வாழும் சமூகம் நாம் (அறிவில்லாத செயல் - அந்த மற்றவர்கள் விமர்சனம் செய்வார்கள் மற்றபடி வேறு எதற்கும் உதவ மாட்டார்கள்). அவர்களை இக்னோர் செய்து விட்டு தன வேலையை செய்து கொண்டு செல்வதே நல்லது. அந்த மற்றவர்கள் இறங்கி உதவி செய்ப்பவர்கள் என்றால் இன்று தமிழ்நாடு சொர்கபுரியாக மாறி இருக்கும்...
Rate this:
Girija - Chennai,இந்தியா
01-மார்ச்-202022:27:31 IST Report Abuse
Girija"பிறகு ஒருநாள், தொலைபேசியில், 'நான், உன்னை விரும்புகிறேன்...' என தெரிவித்தான். நான், அதை ஏற்கவில்லை.அவன், கையை அறுத்து கொண்டு, அடிக்கடி தொல்லை செய்தான். நான், அதை கண்டுகொள்ளவில்லை.ஒருநாள், கையை ஆழமாக அறுத்துக் கொண்ட அவனை, மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, என்னை தொலைபேசியில் அழைத்து, 'நீ இல்லை எனில் செத்துடுவேன்...' எனக் கூறினான்." Giridharan Srinivasan - chennai, உங்களுக்கு இந்த பகுதி CAA NPR NRC போல் புரியாமல் உள்ளது...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
02-மார்ச்-202010:13:45 IST Report Abuse
Rajeshஅவன் கையை அறுத்துகிட்டா உனக்கென்ன, வேற எதையாவது அறுத்துகிட்டா உனக்கென்ன. உங்ஸ் அம்மா தான்முதலிலேயே தெளிவா சொல்லிட்டாங்களே அவன் அண்ணன் முறைன்னு. அவன் செத்த சாவட்டும்னு போம்மா. அப்புறம் இந்த கிரிஜா கொடுமை, ஒருத்தன் ப்ளாக்மெயில் செய்தால் அயோக்கியன் என்று அர்த்தம். அப்போ ப்ளாக்மெயில் செய்யும் பெண் என்ன தேவமாதாவா?...
Rate this:
Girija - Chennai,இந்தியா
03-மார்ச்-202014:28:09 IST Report Abuse
Girijaஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் ஒவ்வொரு ஒரு பெண்ணை தவறானவளாக செய்வதற்கு பல ஆண்கள் இருக்கின்றனர். இந்த சம்பவத்திலும் ஆண் தான் அயோக்கியன். தாயாகிய பெண் ஆரம்பத்திலேயே மகளுக்கு நல்லதை சொல்லியிருக்கிறாள்....
Rate this:
Sivak - Chennai,இந்தியா
03-மார்ச்-202015:29:23 IST Report Abuse
Sivakசரியாக சொன்னீர்கள் ராஜேஷ் ... இந்த கிரிஜா என்பவர் பெண்ணாதிக்க மனப்பான்மை கொண்டவர் .......
Rate this:
Girija - Chennai,இந்தியா
04-மார்ச்-202001:01:50 IST Report Abuse
GirijaIPC ஐ படிக்கவும், அச்சுறுத்ததால் என்பது என்ன என்று புரியும். பெண் என்றால் எப்படி வேண்டுமானாலும் தனிப்பட்ட விமர்சனம் செய்வது கேவலமான செயல். I am a feminist OR non feminist is none of your business. Who are you all dare enough to pass personal comments about me? limit your comments only up to the subject matter only....
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
05-மார்ச்-202010:12:56 IST Report Abuse
HSRதங்கச்சி முறைன்னு அந்த ...க்கு தெரியாதா? அவனை ஒன்றுமே சொல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறைகூறுவது உங்கள் ஆணாதிக்க சிந்தனை என்று கூறலாமா? அறியாப்பெண்ணை அனுபவித்து விட்டு எல்லாம் முடிந்தபின் ஞானோதயம் வரும் இவனை விட அந்த பெண் மேலானவளே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X