தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - அரை டீ ஸ்பூன்
மிளகு - 1/2 டீ ஸ்பூன்
பாலக் கீரை நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
கடுகு - 1 டீ ஸ்பூன்
செய்முறை
* கடலைப் பருப்பை அரை மணி நேரமும், சாமை அரிசியை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைக்கவும். இத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், பெருங்காயம், சீரகம், மிளகு, பொடிசாக நறுக்கிய பாலக் கீரை, ஊறிய கடலைப் பருப்பு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரவு முழுவதும் வைக்கவும்.
காலையில், கடுகு தாளித்து, மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி கலந்து, தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும். சாம அரிசியை வழக்கமான தோசை மாவைப் போல அரைத்து தோசை சுட்டால், தோசை ரப்பர் போல வரும்; அதனால் தான் கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.
இரவில் தோசை சுட வேண்டும் என்றால், காலையில் மாவை அரைத்து, பகல் முழுவதும் புளிக்க வைக்கவும்.தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது ஆளி விதை சேர்த்து செய்த இட்லி பொடியுடன் சாப்பிட, நன்றாக இருக்கும்.