காகிதங்கள் இல்லாத அலுவலங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2011
00:00

பேப்பர்லெஸ் ஆபீஸ் - அதாவது, காகிதங்களே இல்லாத அலுவலகம் என்பது இன்றைய அலுவலக நடை முறையாக மாறிவருகிறது. தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களும் இவ்வாறு மாறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது சாத்தியமா? இதனால் நன்மைகள் என்ன? பார்ப்போமா!
எல்லா அலுவலகங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது காகிதங்கள்தான். ஆயிரக்கணக்கான கோப்புகள் குவிந்து காணப்படும். இவை தவிர, புத்தகங்கள், பத்திரிகைகள், கையெழுத்து பிரதிகள் எனவும் நிறைந்து கிடக்கும். இவற்றின் ஊடே அமர்ந்து, பதுங்கி, மறைந்து இருப்பது போல பணியாற்றுகிற அலுவலர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு எப்படி புத்துணர்ச்சி கொடுக்கலாம்?
காகிதமற்ற அலுவலகம் வந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். காகித வடிவில் இல்லாமல் டிஜிட்டல் வடிவில் தகவல்களைச் சேகரித்து வைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. மரங்களை வெட்டிக் காகிதங்களைத் தயாரிப்பது குறைந்து விடும். எனவே மரங்கள், நம் வாழ்நாட் களுக்குப் பின்னரும், நீண்ட நாட்கள் வாழும். சுற்றுப்புறம் பசுமையாகத் திகழும்.
2. காகிதங்களை கட்டி "மாரடிக்கும்' தொழிலில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். காகிதங்களைப் பராமரிக்கும் கடின வேலையில் இருந்து நாம் தப்பலாம்.
3. தகவல்களை டிஜிட்டல் வடிவில் பதிவதால், அவற்றை எளிதாகக் கையாள முடியும். விரைவாகத் தேடி, வேண்டிய தகவல்களைப் பெற முடியும். தகவல்களை வேண்டிய வகையில் அடுக்க முடியும். மொத்தத்தில் தகவல்களை எளிதாக மேலாண்மை செய்ய முடியும்.
4. காகிதங்களை வைத்துப் பராமரிக்க ஏராளமான இடம் தேவை. டிஜிட்டல் வடிவத்துக்குத் தகவல்களை மாற்றினால், காகிதங்களை வைத்திருக்கப் பயன்படுத்தும் இடம் மிச்சமாகிறது.
5. பேக்கப் எடுத்து வைப்பதால் டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களை எப்போதும் நம்பலாம். காகிதங்கள் தொலைந்து போகலாம்; அவற்றைக் கரையான்கள் அரிக்கலாம். எனவே காகிதத்தில் உள்ள தகவல்களை நம்ப முடியாது.
6. டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களில், வேண்டிய பகுதியைக் கண்டு பிடித்து, விரைவாக மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலே கண்ட நன்மைகளைப் படித்ததும், தகவல்களை டிஜிட்டலாக மாற்ற எல்லாரும் விரும்புவது இயற்கையே. எனினும் சில சந்தேகங்கள், கேள்விகள் நம் மனதில் எழுலாம்.
1. டிஜிட்டலாகத் தகவல்களை மாற்ற ஏராளமான பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்குமா?
2. இனிமேல் கிடைக்கிற தகவல்களை டிஜிட்டலாக மாற்றினால் போதாதா? ஏற்கனவே காகிதங்களில் உள்ளவற்றை டிஜிட்டலாக மாற்ற பணம் அதிகம் செலவாகுமா?
3. டிஜிட்டல் வடிவத் தகவல்களை ஹார்ட் டிஸ்க்கில் போட்டு வைக்கிறோம். ஹார்ட் டிஸ்க்கை நம்ப முடியுமா? ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிட்டால் எல்லா தகவல்களும் போய்விடுமே?
மேலேயுள்ள கேள்விகளும், ஐயங்களும் வீணான பயத்தை ஏற்படுத்தியுள்ளன. தகவல்களை டிஜிட்டலாக மாற்ற அதிகப் பணம் தேவைப்படுவதில்லை. ஏற்கனவே உள்ள தகவல் மற்றும் புதிய தகவல் என எல்லாவற்றையும் டிஜிட்டலாக மாற்றி விடுவதே நல்லது. ஹார்ட் டிஸ்க்கின் விலை குறைவு. எனவே ஒரு ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டாவை மற்றொரு ஹார்ட் டிஸ்க்கில் பேக்கப் எடுக்கலாம்; சிடி-ஆர், டிவிடி டிஸ்க்குகள் போன்றவற்றிலும் பதியலாம். Raid முறையில் பல ஹார்ட் டிஸ்க்குகளை வைத்து டேட்டாவை பேக்கப் எடுக்கலாம். (Redundant Array of Inespensive Devices என்பதன் சுருக்கமே Raid.)

டிஜிட்டலாக மாற்ற என்ன தேவை?
நல்ல வேகம் கொண்ட கம்ப்யூட்டர் தேவை. தரமான ஸ்கேனர் தேவை.
ஸ்கேன் செய்கிற காகித டாக்குமெண்டுகளைப் படங்களாகச் சேமிக்க விரும்பாமல் அவற்றை டெக்ஸ்ட் பார்மட்டில் சேமிக்க Optical Character Recognition (OCR) என்னும் சாப்ட்வேர் தேவை. பொதுவாக ஸ்கேனருடன் இலவசமாக ஓஆர்சி சாப்ட்வேரைத் தருவார்கள். இந்த சாப்ட்வேர் போதுமானது. ஏராளமான காகித டாக்குமெண்டுகளை பிழையில்லாமல் டெக்ஸ்ட் பார்மட்டுகளாக மாற்ற விரும்புபவர்கள் ABBYY Fine Reader போன்ற ஓஆர்சி சாப்ட்வேர்களை விலைக்கு வாங்கலாம். இன்னும் பல சாப்ட்வேர் தொகுப்புகளும் கிடைக்கின்றன.
டிஜிட்டல் வடிவில் உள்ள உங்கள் தகவல்களை பேக்கப் செய்ய தரமான சாப்ட்வேர் தேவை. அந்த சாப்ட்வேரில் Scheduler வசதியும் இருக்க வேண்டும். அப்படியானால்தான் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பைல்களை உங்கள் உதவியின்றியே அந்த சாப்ட்வேரால் பேக்கப் எடுக்க முடியும். Second Copy, Win Backup போன்ற பேக்கப் சாப்ட்வேர்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக Docment Management software தேவை. Newsoft வழங்கும் Presto1 Page Manager போன்ற சாப்ட்வேர்கள் பல உள்ளன. ஸ்கேனருடன் இலவசமாக இத்தகைய சாப்ட்வேரைத் தருவார்கள். அதையும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டலாக மாற்ற:
காகித வடிவில் உள்ள டாக்குமெண்டை எப்படி டிஜிட்டலாக மாற்றுவது எனப் பார்ப்போம்.
காகிதத்தை ஸ்கேனரில் வைத்து ஸ்கேன் செய்யுங்கள். ஓசிஆர் சாப்ட்வேர் மூலம் காகிதத்தில் உள்ளதை டெக்ஸ்ட் பார்மட்டமாக மாற்றுங்கள்.
டாக்குமெண்ட் மேனேஜர் சாப்ட்வேர் மூலம், அந்த டாக்குமெண்ட் தொடர்பான முக்கிய குறிப்பைக் கொடுங்கள். பின்னாளில் இந்த குறிப்பை வைத்தே அந்த டாக்குமெண்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும்.
முந்தைய பத்திகளில் குறிப்பிட்டபடி எல்லா காகித டாக்குமெண்டுகளையும் ஸ்கேன் செய்து பைல்களாக மாற்றுங்கள். பின்பு பேக்கப் சாப்ட்வேர் மூலம் அவற்றைப் பேக்கப் எடுங்கள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B M ஜவஹர் - ஜல்கான்,இந்தியா
13-மே-201105:49:25 IST Report Abuse
B M ஜவஹர் வணக்கம்.மிக மிக நல்ல யோசனை. இது தொடர்பான மேலும் பலகட்டுரைகள் தங்கள் தொடர்ந்து எழுதவும்.தினமலர் சேவை தொடர பாரட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X