தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் - 2
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1 கப்
ஐஸ் கட்டிகள் - 5
ஐஸ் கிரீம் - 1 கரண்டி
செய்முறை
வாழைப்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அரைக்கவும். இத்துடன், சர்க்கரை, பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மிக்சியில் அரைக்கவும். கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே விருப்பமான சுவையில், சிறிது ஐஸ்கிரீம் சேர்த்து, விரும்பினால் சிறிதளவு உருக்கிய சாக்லெட் ஊற்றி பரிமாறலாம். வாழைப்பழம் பிடிக்காதவர்களுக்கும், ஸ்மூத்தியின் ருசி பிடிக்கும்.