தேவையான பொருட்கள்
தண்ணீர் - 250 மில்லி லிட்டர்
தேயிலை - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை - 7
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை துண்டுகள் - 4
செய்முறை
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில், தேயிலை சேர்த்து, நன்கு கொதிக்கும் போது, சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும். அதன் பின், ஐந்து புதினா இலைகளை சேர்த்து, கொதிக்க விடவும்.
ஒரு நிமிடம் கொதித்ததும், தேயிலையை வடிகட்டி, டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, அதன் மேல், இரண்டு எலுமிச்சை துண்டுகளை வைத்து, தேயிலையை ஊற்றவும். இதில், எலுமிச்சை சாறை பிழிந்து, கலக்கி, மேலே இரண்டு புதினா இலைகளை போட்டு பரிமாறவும்.