வெளிநாடு செல்லும்போது குறிப்பிட்ட அளவு தான், 'லக்கேஜ்' எடுத்துச் செல்ல முடியும். எனவே அதை நிறுத்துப் பார்ப்பதற்கு, நமக்கு தேவை ஒரு தராசு. இது, 'டிஜிட்டல்' யுகம் என்பதால், நிறைய டிஜிட்டல் தராசுகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
நமக்கு விருப்பமான ஒன்றை, வாங்கி கொள்ளலாம். மிக எளிதாக, 'சூட்கேஸ், டிராலி' உள்ளிட்டவற்றை நிறுத்துப் பார்க்க, கொக்கி போன்ற அமைப்புடன் கையில் துாக்கி நிறுத்துப் பார்க்கும் வசதியுடன் கிடைக்கிறது. பாஸ்போர்ட் வாங்கிய கையோடு, இதில் ஒன்றையும் வாங்கிக்கொள்ளுங்கள். கடைசி நேரத் தவிப்புகளை, தவிர்த்து விடலாம்.கிட்டத்தட்ட, 50 கிலோ வரை நிறுத்துப் பார்க்கும் வசதி கொண்ட டிஜிட்டல் தராசுகள், 250 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.