சேற்றில் இறங்கி நாற்று நடும்நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
00:00

இந்திய ஒரு விவசாய நாடு. இளைய தலைமுறையினர் விவசாயம், விவசாயிகள் படும் கஷ்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது எதிர்கால வளமிக்க இந்தியா உருவாக வாய்ப்பாக அமையும் என கருதிய சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவ, மாணவியரை சேது பாஸ்கரா விவசாய கல்லுாரிக்கு அழைத்து சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் உள்ளிட்ட களப் பயிற்சிகளை அளித்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், பண்ணை மேலாளர் கருப்பு ராஜ், தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் செய்திருந்தனர்.

தலைமை ஆசிரியர் கூறியதாவது: இளம் மாணவர்களுக்கு இப்போதே விவசாயம் தொடர்பாகவும், விவசாயம் செய்வது குறித்து அறிந்து கொள்ளவும் ஏதுவாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேளாண்மை கல்லுாரியின் தாளாளர் சேது குமணன் ஒத்துழைப்புடன் களப்பயணமாக அழைத்து வருகிறோம். இதன் மூலம் மாணவர்கள் விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கற்று கொள்கின்றனர். எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும், என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்க்கிறோம். விவசாய கல்லுாரியில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் பண்ணைகளை மாணவர்கள் பார்வையிட்டனர். பூச்சியியல்துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம் மேற்கொள்ளும் பணிகள்குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது குறித்து விவசாய பிரிவு அலுவலர் விக்னேஷ், பண்ணை உதவியாளர் சகாயம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இக்கல்லுாரி 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை விவசாயம் கடைபிடிக்கபடுவதை மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

தானிய குதிர்
இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடபட்டதையும் மாணவர்கள் நேரில் ஆய்வுசெய்தனர். எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரிய காந்தி, தென்னை, பூக்களில் முக்கியமாக மல்லிகை, பல மரங்களில் மா, பலா, வாழை மற்றும் மாதுளை, சந்தனம், தேக்கு, செம்மரம், வாகை, புங்கம், வேம்பு, இலுப்பை, புளி, வெப்பாலை போன்ற பலன்தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதை மாணவர்கள் நேரடியாக பார்வையிட்டனர்.
5 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை கொடுத்து நட ஏற்பாடு செய்யப்பட்டது. நவீன வேளாண்மை முறையில் தக்காளி பயிர் செய்வதை கற்றனர். 4,500 கிலோ நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பண்டைய கால நெல் சேமிப்பு பாதுகாப்பு முறையான 'தானிய குதிர்' தொடர்பாகவும் மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.
சேற்றில் இறங்கி நாற்று நடுதல், மண்புழு உரம், பஞ்ச காவிய உரம், மீன் அமிலம், காளான் வளர்ப்பு போன்றவை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது, என்றார்.

மாணவிகள் கீர்த்தியா, ஜெயஸ்ரீ, நதியா: புறா குஞ்சு எனது கையில் வாங்கி பார்த்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். நான் இது வரையில் முயல் குட்டி பார்த்தது கிடையாது. இங்குள்ள சுகாதாரமான பண்ணையில் முயல் வளர்க்கின்றனர். முதல்முறையாக முயல் குட்டியை துாக்கியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, என்றார்.

மாணவர்கள் அய்யப்பன், வெங்கட்ராமன்: மண் புழு உரம் தயாரிப்பது எப்படி? அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக விளக்கினார்கள். இதுவரை 'டிவி'யில் மட்டுமே கால நிலை அறிவது தொடர்பாக பார்த்து வந்துள்ளேன். ஆனால் இங்கு தெளிவாக அதனை நேரில் காண்பித்து எவ்வாறு மழை பெய்யும் அளவை கணிப்பது, இன்றைய வெப்பநிலை அளவு என்ன அதன் தொடர்ச்சியான தகவல்களை விளக்கியது அருமை, என்றார்.
தொடர்புக்கு: 80562 40653
- கா.சுப்பிரமணியன் மதுரை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Routhiram Palagu - Chennai,இந்தியா
11-மார்ச்-202003:49:53 IST Report Abuse
Routhiram Palagu நல்ல முயற்சி. எலிய வாழ்க்கை சிறந்த வாழ்க்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X