கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2011
00:00

கேள்வி: ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை என்னுடைய விண்டோஸ் டெஸ்க் டாப்பிலிருந்து நேரடியாக அமைக்க முடியுமா? அப்படி ஒரு வழி இருந்தால், ஒவ்வொரு முறை புதிய சாப்ட்வேர் ஒன்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்கையில், பாதுகாப்பாக ரெஸ்டோர் பாய்ண்ட்டை அமைக்க எண்ணுகிறேன்.
-ஜே. மோகன் ராஜ், சென்னை.
பதில்: தாராளமாக அமைக்கலாம். ஆனால் அது உங்களிடம் எந்த விண்டோஸ் பதிப்பு இயங்குகிறது என்பதைப் பொறுத்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பெற்றுச் செல்லவும். இதில் சி ட்ரைவ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் C:\WINDOWS\system32\Restore என்ற போல்டருக்குச் செல்லவும். இங்கு ‘rstrui.exe’ என்ற பைலைக் காணவும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாப் அப் மெனுவில், Send To என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Desktop (create shortcut) என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இதுதான் நீங்கள் ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கத் தரப்படும் வழி.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் வேறு வழியைக் கையாள வேண்டும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் New என்பதையும் அடுத்து Shortcut என்பதையும் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Browser என்பதில் கிளிக் செய்து Browse for Files or Folders என்ற டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், C:\Windows\ System32 என்ற போல்டருக்குச் செல்லவும். இங்கு SystemProperties Protection.exe என்ற பைலைத் தேடி அறியவும். இதன் மீது ஒருமுறைகிளிக் செய்து, பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Next என்பதில் கிளிக் செய்து, அமைய விருக்கும் ஷார்ட் கட் ஐகானுக்கு ஒரு பெயர் (Create a Restore Point என்று கூடத் தரலாம்) தரவும். பின்னர் Finish என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.

கேள்வி: சிடி ஒன்றில் டேட்டாவினை பர்ன் செய்து முடிக்கும் போது, இறுதியில் அதன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் எழுதி வைக்கவா என்று ஒரு கேள்வி கிடைக்கிறது. பெரும்பாலும் இதற்கு நோ சொல்லி மூடி வருகிறேன். இது எதற்காக? பயன் என்ன?
-தி.ராபர்ட் சாமுவேல், திருப்பூர்.
பதில்: ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். அதாவது அனைத்து பைல்களும் இடம் பெறும் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். இதனைத் தயாரித்துப் பதிந்து வைத்தால், சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால், நேரத்தை மிச்சப்படுத்திச் செயலை முடிக்க இதனைத் தயாரித்துக் கொள்வது நல்லது. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், என்ன என்ன பைல்கள் உள்ளன என்று குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அடையாளம் காணும் வகையில் பெயர் தந்து சேவ் செய்து கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஓ. பைல்களை உருவாக்குகையில் இந்த ஏற்பாடு மிக அவசியம்.

கேள்வி: என்னுடைய வசதிக்காக, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் கிடைக்கும் போல்டர்களின் பெயர்கள் அனைத்தையும் பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?
-க.லஷ்மி வெங்கட், செங்கல்பட்டு.
பதில்: இப்போது இதற்கான தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய கிடைக்கின்றன. அண்மையில் Karen’s Directory Printer என்ற புரோகிராம் ஒன்றினை http://www. snipca.com/x724 என்ற முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்தில் பார்த்தேன். இதனை இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இதனை இயக்கியவுடன் தரப்படும் விண்டோவில், Print என்ற டேப்பினைத்தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கிடைக்கும் பிரிவில் folder view என்பதன் மூலம் எந்த போல்டர் அல்லது பைல்களை பிரிண்ட் செய்திட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக் கலாம். போல்டர்கள் தேந்தெடுக்கப் படுகையில், அதனுள் அமைக்கப் பட்டிருக்கும் துணை போல்டர்கள் மற்றும் பைல்களும் பட்டியலிடப்பட்டு அச்சிடப்படும். இவை வேண்டாம் என்று கருதினால், ‘Search SubFolders’ என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம். இந்த ஆப்ஷன்கள் அனைத்தையும் கவனித்துப் பின் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து, Print பிரிண்ட் பட்டனில் கிளிக் செய்து அச்சிடலாம்.

கேள்வி: என்னுடைய கேமராவிலிருந்து நான் எடுத்த சில போட்டோக்களை அழித்துவிட்டேன். அவற்றை மீண்டும் பெற முடியுமா?
-சீ.மாலதி, மதுரை.
பதில்: தொடர்ந்து அதனைப் பயன்படுத்தி வேறு போட்டோக்கள் எடுக்காமல் இருந்தால், கம்ப்யூட்டருடன் அதனை இணைத்து, ரெகுவா (Recuva) போன்ற அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் மீட்க வாய்ப்புண்டு.

கேள்வி: என் கம்ப்யூட்டருடன் யு.எஸ்.பி. ஹப் ஒன்றை இணைத்து, என் மவுஸ், கீ போர்ட் மற்றும் ஸ்கேனர் சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறேன். அண்மையில் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கி, இதில் இணைத்துப் பயன்படுத்தினேன். அப்போது மற்ற சாதனங்கள் இயங்கவில்லை. இருப்பதை கம்ப்யூட்டர் காட்டவில்லை. ஏன்? இதற்கு என்ன வழி?
-என். கார்த்திகேயன், திருத்தணி.
பதில்: யு.எஸ்.பி. கேபிள்கள் குறிப்பிட்ட அளவில் தான், இயங்குவதற் கான மின்சக்தியைப் பெற்று இயங்கும். எனவே, அளவுக்கதிகமாக சாதனங்கள் இணைக்கப்படுகையில், அனைத்து சாதனங்களும் இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் யு.எஸ்.பி. ஹப் தனியே பவர் சப்ளையைப் பெற்று இயங்குமா என்பதனைச் சோதனை செய்து, முடியும் என்றால், தனியே மின் சக்தி இணைப்பினைத் தரவும். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்க்கு தனியே வேறு ஒரு யு.எஸ்.பி. போர்ட்டினைப் பயன்படுத் தவும்.

கேள்வி: ஒரு பெரிய டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்தேன். இதில் கலரில் பல விளக்கப் படங்கள் மற்றும் அட்டவணைகள் உள்ளன. இங்க் ஜெட் பிரிண்டரில், இதனை கருப்பு வெள்ளையில் மட்டும் பிரிண்ட் செய்திட முடியுமா?
-அ. மதிவாணன், தேவாரம்.
பதில்: பிரிண்ட் விண்டோவில், Properties என்னும் கட்டத்தில் கிளிக் செய்திடவும். இங்கு Paper/Quality என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் ஆப்ஷன்களில் Black and White என்பதைத் தேர்ந்தெடுத்து அச்செடுக் கவும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இரண்டையும் பதித்துள்ளேன். ஆப்ஷன்ஸ் மூலம் தேவையானதை இயக்கலாம். தற்போதைக்கு விஸ்டா, மாறாநிலை ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைக்க விரும்புகிறேன். இதனை எப்படி செட் செய்வது?
-டி. காயத்ரி தேவி, பழநி.
பதில்: விண்டோஸ் 7 இயக்கவும். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் மீது லெப்ட் கிளிக் செய்திடவும். இங்கு Advanced System Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘Startup and Recovery’ என்ற பிரிவில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Default Operating System menu மெனுவில் Windows 7 தேர்ந்தெடுத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7, டிபால்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பிரவுசரை என் டிபால்ட் பிரவுசராக வைத்திருக்கிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தன்னை டிபால்ட் பிரவுசராக வைத்துக் கொள்கிறாயா என்று ஆப்ஷன் விண்டோ தருகிறது. இந்த விண்டோ வருவதனை எப்படி நிறுத்துவது?
-ஜ. இஸ்மாயில், காரைக்கால்.
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்கவும். அப்படி இயக்குகையில், அதனை டிபால்ட் பிரவுசராக அமைத் திடவா என்று ஆப்ஷன் விண்டோ கிடைத்தால், அதனை அலட்சியப் படுத்தவும். அடுத்து Tools பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு Internet Options என்ற பிரிவின் மீது கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், Programs என்ற டேப்பின் மீது கிளிக் செய்திடவும். அடுத்து ‘Tell me if Internet Explorer is not the default browser’ என்ற பாக்ஸ் மீதுள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டுப் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த ஆப்ஷன் விண்டோவும் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: என்னுடைய டாஸ்க் பார் எப்படியோ விலகி மானிட்டரின் வலது புறம் சென்றுள்ளது. இதனை முன்பு போல கீழாக எப்படி அமைப்பது? மீண்டும் இதே போல மாறாமல் இருக்க என்ன செய்திட வேண்டும்?
-சே. திருமூர்த்தி, காரைக்குடி.
பதில்:ஸ்டார்ட் மெனு அருகே, மவுஸால் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க் பார் எங்கிருக்க வேண்டுமோ, அங்கு விட்டுவிடலாம். மீண்டும் மாறாமல் இருக்க, டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Lock the Taskbar என்பதில் கிளிக் செய்திடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r .rajnivetha - karur,இந்தியா
27-டிச-201119:53:09 IST Report Abuse
r .rajnivetha this is very wonderfull
Rate this:
Share this comment
Cancel
r.harisaikumar - karur,இந்தியா
27-டிச-201119:39:03 IST Report Abuse
r.harisaikumar this is very super
Rate this:
Share this comment
Cancel
அழகு நிலவன் - coimbatore,இந்தியா
14-மே-201114:58:41 IST Report Abuse
அழகு நிலவன் தினமலர் சேவை பற்றி ஓர் வாசகர் NLB மற்றும் தங்கள் சர்வர் பற்றி சொன்னார் + technical என்றார் + விளக்க mudiyuma
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X