கடைகளில், சிப்ஸ் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி உபயோகிக்கும்போது, சாப்பிட்டது போக மீதியை பாதுகாப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.
காரணம், வாங்கும்போது அவை காற்றுப் புகா வண்ணம், பாக்கெட்டில் அடைத்து தருவர். பாக்கெட்டை பிரித்த பின், நம்மால் காற்று புகாமல் அதே பாக்கெட்டில் மீண்டும் வைத்துக் கொள்ள முடியாது. வேறு ஏதாவது ஒரு காற்று புகாத பாத்திரத்தை தேட வேண்டி இருக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வாக இருப்பது தான், 'மினி ஹீட் சீலிங் மிஷின்!'
பொருட்களை காற்று புகா வண்ணம் பாக்கெட்டுகளில் அடைத்து வைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'பேட்டரி'யில் இயங்கும் இதை, கையாள்வது மிகவும் சுலபம். இதன் உதவியுடன், பிளாஸ்டிக் பைகளை எளிதில், 'சீல்' செய்யலாம்.
விலை: 499 ரூபாய்