சமையலின் போது, கையுறைகளைப் பயன்படுத்துவது என்பது, சமையலை விட சங்கடமான ஒன்று. ஒவ்வொரு விரலாக மாட்டி, கழற்றி... 'போதும் போதும்' என்றாகி விடுகிறது. இதனாலேயே பலர், கையுறை என்றால் தெறித்து ஓடி விடுவர். பதிலுக்கு, துணி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, ஆபத்தையும் வரவழைத்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக, மைக்ரோவேவ் ஓவனைப் பயன்படுத்துவதில், பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, இந்த சிலிகான் கையுறை.
இந்த கையுறையினுள் கையை நுழைப்பதும், நீக்குவதும், பயன்படுத்துவதும் மிகவும் எளிது; பாதுகாப்பானதும்கூட. இதனுள் குறைந்த வீரியம் கொண்ட காந்தமும் இருப்பதால், பாத்திரங்களை சிக்கென்று பிடித்துக் கொள்ளலாம். எளிதில் நழுவாது. சுத்தம் செய்வது மிக எளிது.
விலை: இரண்டு கையுறை, 219 ரூபாய்