கழுவிய பாத்திரங்களை, நீர் வடிவதற்காக, 'டிரே'யில் வைப்பதில் இருக்கும் ஒரே சிரமம், அது நமக்கு இன்னொரு வேலையை உண்டாக்கி விடுவது தான். கழுவிய பாத்திரங்களிலிருந்து வடியும் நீர், தரை எங்கும் பரவி விடும். பிறகு, தரையையும் சுத்தம் செய்தாக வேண்டும்.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக வந்திருக்கும், இது போன்ற ஒரு டிரேயை வாங்கிப் பயன்படுத்தி பாருங்கள். தண்ணீர் வடிவதற்கு தனி வழி இருப்பதால், பெரும் பிரச்னை தீர்ந்துவிடும்.
பாத்திரங்கள் காய்ந்த பிறகு, அவற்றை தனியே வேறு ஒரு இடத்தில் அடுக்காமல், இதிலேயே கூட அடுக்கி வைத்துக் கொள்ளலாம். குறைந்த அளவில் பாத்திரங்களை பயன்படுத்துபவர்களுக்கு, நல்ல தேர்வாக இருக்கும்.
விலை: 399 ரூபாய்