பாஸ்தா போன்றவற்றை சமைக்கும் போதோ, காய்கறிகளை அவிக்கும்போதோ, அவற்றை வடிகட்டி எடுப்பது, கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். கையை சுட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். நம் திறமைக்கு அவ்வப்போது சவால் விட்டபடியே இருக்கும். இந்த பிரச்னையை சமாளிக்க, ஒரு வழி இருக்கிறது. எவர்சில்வரில் தயாரிக்கப்பட்ட, கூடை போன்றிருக்கும் இதைப் பயன்படுத்தி, எளிதாக சவாலை சமாளிக்கலாம்.
அவித்தல், பொரித்தல், வறுத்தல் என அனைத்து விதமான சமையல் முறைகளிலும் இந்த கூடையைப் பயன்படுத்தலாம். சமைப்பதற்கான பொருட்களை இதனுள் போட்டு, பயன்படுத்த வேண்டும். எடுக்கும்போது கையை சுட்டுக் கொள்ள வேண்டி இருக்காது. தனியே வடிகட்ட வேண்டிய தேவையும் இருக்காது!
விலை, 410 ரூபாய்.