இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2020
00:00

தகவல் மட்டுமே...

சுவிட்சர்லாந்தில் வேலை செய்கிறாள், நண்பரின் மகள். மாற்று மத வாலிபரை, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், எந்தவித மத செயல்பாடுகளும் இன்றி, திருமணத்தை எளிமையாக முடித்துக்கொள்வதாக, நண்பருக்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து இருந்தார்.
'நம் முறைப்படி, திருமணம் செய்து தர, நான் தயார்...' என்றிருக்கிறார், நண்பர்.
'திருமணம் சார்ந்த மந்திரங்கள், செயல்பாடுகள், தாலி ஆகியவற்றில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருமனம் இணைந்தால் போதும் என்பது, எங்கள் இருவரின் கருத்து...' என, கூறி விட்டாள், மகள்.
நண்பரும், விடாமல் வலியுறுத்தினார்.
'திருமணம் என்றால், நாள், நேரம் பார்த்து செய்கிறீர்களே... இதுவே விவாகரத்து செய்கிறபோது, இப்படி ஏதாவது செய்கிறோமா... ஆக, விவாகரத்துக்கு இல்லாதது, திருமணத்துக்கு மட்டும் ஏம்ப்பா... முடிந்தால், வாழ்த்துங்கள்... இல்லாவிடில், ஒதுங்கிக் கொள்ளுங்கள்...' என்றிருக்கிறாள்.
வாயே திறக்கவில்லை, நண்பர்.
தான் காதலித்தவரை திருமணம் செய்து, புகைப்படத்தை, 'இ - மெயிலில்' அனுப்பி வைத்தாள், மகள்.
வருங்காலத்தில், பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளின் திருமணத்தில், ஒரு விருந்தாளி போல் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகி வருவதை நினைத்தால், கவலையாக உள்ளது.
உலகம் எங்கே செல்கிறது!
ராஜிராதா, பெங்களூரு.

பாட்டியின், சமயோஜிதமான பணி!

சமீபத்தில், என் மருமகளுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. பணி நிமித்தமாக நான் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தையை குளிப்பாட்டுவது, மருமகளுக்கு சிரமமாக இருந்துள்ளது.
குழந்தையை பார்க்க வந்த ஒருவர், 'போன் செய்தால், ஒரு பாட்டி வந்து குளிப்பாட்டி, நன்றாக துவட்டி விடுவார்...' என கூறி, பாட்டியின் கைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.
அதன்படி, 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர், குழந்தையை குளிப்பாட்ட ஆரம்பித்தார்.
அவரிடம் விசாரித்ததில், 'ஒரு குழந்தையை குளிப்பாட்டுவதற்கு, 50 ரூபாய் கட்டணம் வாங்குகிறேன். ஒரு நாளைக்கு, குறைந்தது, 5 - 6 வீடுகளுக்கு சென்று, குழந்தைகளை குளிப்பாட்டுகிறேன்.
'அது மட்டுமல்ல, படிப்பு, வேலை நிமித்தமாக, கணவன் - மனைவி வெளியில் சென்று விடுவதால், துணையின்றி தனிமையில் இருக்கும் முதியோருக்கு துணையாக, காலை முதல் மாலை வரை இருக்கிறேன்.
'பகல் முழுதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பதால், இரவில் நன்றாக துாக்கம் வருவதுடன், ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் இல்லை; கவலையும் இல்லை. நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவை போக, மீத பணத்தை, அனாதை ஆசிரமங்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு கொடுத்து விடுவேன்...' என்றார், பாட்டி.
பாட்டியின் பேச்சும், செயலும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை உணர்ந்து பாராட்டினேன்.
- மு. முத்துலட்சுமி, சிவகங்கை.

ஹிந்தி கற்க இப்படியும் ஒரு வழி!

நெல்லையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். முன்னிருக்கையில், நடுத்தர வயதில் ஓர் ஆணும், அவர் மகளும் பயணம் செய்தனர். அப்பெண்ணுக்கு, 10 வயது இருக்கும். ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போது, ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்த்து, ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
ஆர்வ மிகுதியால், 'என்ன எழுதுகிறாய்...' என, கேட்டேன்.
நோட்டை என்னிடம் காண்பித்தாள், அப்பெண். ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரையும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என, எழுதியிருந்தாள்.
'அங்கிள்... நான், ஹிந்தி வகுப்பு போயிட்டிருக்கேன். அப்பாவோடு ரயிலில் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரையும் இதுபோல் எழுதி வைத்து படிப்பேன்.
'இப்ப எனக்கு, 150க்கும் மேற்பட்ட, ரயில் நிலையத்தின் பெயர்களை, ஹிந்தியில் எழுதவும், படிக்கவும் தெரியும். முதலில், விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். இதுவே பழக்கமாகி விட்டது...' என்றாள்.
விளையாட்டாகவும், மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொள்ளும் எந்த பாடமும் கடைசி வரை மறக்காது என்பதை, அப்பெண் எனக்கு உணர்த்தினாள்.
இனி, நாமும் இதுபோன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே!
க. சரவணகுமார், நெல்லை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
24-மார்ச்-202023:56:10 IST Report Abuse
அன்பு கல்யாணம் என்றால், ஊரே பரபரக்க தனது செல்வாக்கை சுட்டிக்காட்ட பத்துவருஷம் சேமித்து வைத்த பணத்தை செலவு செய்யவேண்டும் என்பதில்லை. நாற்பது பேரை திருமணத்திற்கு அழைத்தால் போதும். ஒரு பார்க்கில் அல்லது ரிசார்ட்டில் திருமணம் செய்தால் போதும். சேமிக்கும் பணத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்குங்கள். அதை விட, முக்கியமாக அந்த பணத்தை கொண்டு ஆட்களை அமர்த்தி ஆறு ஏரிகளை சுத்தம் செய்யுங்கள். மக்கள் வாழ்த்துவதை விட, நம்மால் பாதிக்கப்பட்டுள்ள மீன் தவளை, நண்டு, பூச்சி, செடி கொடிகள் நம்மை வாழ்த்தும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
25-மார்ச்-202005:15:39 IST Report Abuse
Girijaஅன்பு - தஞ்சை,இந்தியா கல்யாணம் ஆன்மீகத்தில் (ஆன்மிகம் என்றால் இந்துக்கள் மட்டும் அல்லது பிஜேபி என்று CAA போல் குழப்புவர்கள் கவனம்) நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் அதை நடத்தும் இடம் புனிதமான இடமாக தெய்வீக ஸ்தலமாக இருத்தல் அவசியம் , ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் போதுமானது அல்லது கட்சி ஆபீஸ் குருமார்கள் இருக்கவே இருக்கின்றனர் தொண்டனுக்கு சமாதியில் திருமணம் நடத்த. அவர்கள் உங்க ஊருக்கே வந்து புகை இல்லாமல், கண் எரியுமாம், டாஸ்மாக் நெடியுடன், அமங்கல வார்த்தையுடன் அடிப்பேன் உதைப்பேன் அன்று அசிங்கமான அரசியல் உளறி பகுத்தறிவு திருமணம் நடத்தி கொடுத்தால் வெறும் பத்து லட்சம் மற்றும் 25 அல்லக்கைகளுக்கும் சேர்த்து தங்கும் செலவு, விமான போக்குவரத்து, அலங்காரம் விளம்பரம் தான் கொடுக்கணும் ஆனால் புரோகிதர்கள் ஆ ஆ யிரம் ரூபாய் கேட்கின்றனர், என்ன அநியாயம் ?. ஹோட்டேல் மற்றும் ரிஸார்டுகளில் நடத்த திருமணங்கள் வெற்றிகரமாக தொடர்வது குறைவு . தெருக்கோடி அம்மன் கோவிலோ, சர்ச் அல்லது இணைந்து வாழும் மூத்த தம்பதிகள் வீட்டிலோ, எல்லோரும் வாழ்த்த ஒரு மஞ்சள் கயிறோ அல்லது கவரிங் மோதிரம் அணிவித்து நடப்பதுதான் வாழ்வை செழிக்கவைக்கும். ஆடம்பரம் இல்லாத ஒரு சாதாரண கல்யாணம் நடந்தால் கூட அதையொட்டி இருபது முப்பது குடும்பங்கள் பிழைக்கிறது மற்றும் நொடித்துப்போன உறவுகள் கவுரவமாக மற்ற உறவுகளிடம் உதவி கேட்க்கும் இடமாகவும் இருக்கிறது . சில உறவுகள் உதவும் பல உறவுகள் உதாசீனப்படுத்தும் என்பதும் நிஜம். சமூக சேவையை காரணம்காட்டி பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்கலாகாது. அது வேற இது வேற . நிறைய கல்யாணங்களில் வரப்பேற்பை முதல் நாளும் திருமணத்தை அடுத்த நாளும் நடத்தும் அபத்தமும் உள்ளது அதனால் விபரீதமும் நடக்கிறது....
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
23-மார்ச்-202016:43:05 IST Report Abuse
Kundalakesi Services are there to take care of babies at their home - mainly to bath and feed them food (except mother feeding). These services are available in major cities. age factor may be wrong info.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மார்ச்-202014:02:45 IST Report Abuse
D.Ambujavalli குழந்தைகள் பாலர் பள்ளியில் பாடல் மூலம் மொழி, நாள், எண்கள் என்று விளையாட்டாகவே கற்றுக்கொள்கிறார்கள். அதைத் திணிப்புனென்று யாரும் சொல்வதில்லை. ஆனால் இவ்விதம் தன்னடைவே கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விழையும் குழந்தைகளை, ‘திணிப்பு, கட்டாயம், கொடுமை’ என்று அவர்களே நினைக்காததைக் கூறி, முடக்கும் கூட்டம் அவர்கள் எதிர்காலத்துடனும், ஆர்வத்துடனும் விளையாடுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X