குருவை சரணடை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2020
00:00

குருவும், சீடனும், அடர்ந்த காட்டின் வழியே நடந்து சென்றனர். இரவு நெருங்கவே, உறங்கி, காலையில் பயணத்தை தொடர முடிவு செய்து, ஒரு மரத்தடியில் உறங்கினர்.
பொழுது விடிந்ததும், ஆற்றில் நீராடினர். சூரியனை வணங்கினார், குரு.
அப்போது, 'வேத குருவே... உங்கள், வணக்கத்தை ஏற்றுக் கொண்டேன். ஆனால், இன்று, சூரியனாகிய நான் மறைவதற்குள், உங்கள் சீடன், ராஜ நாகத்தால் தீண்டப்பட்டு, இறக்க நேரிடும். முடிந்தால், உங்கள் தவ வலிமையால் அவனை காப்பாற்றுங்கள்...' என, அசரீரி ஒலித்தது.
பின், இருவரும், பழங்களை பறித்து பசியாறி, காடு வழியே நடந்து சென்ற போது, களைப்பு ஏற்படவே, ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். கண் அயர்ந்தான், சீடன்.
அவனின் உயிரை காப்பாற்ற எண்ணி, விழித்திருந்தார், குரு. அப்போது, படமெடுத்தபடி, சீடனை கொல்ல வந்தது, ராஜ நாகம்.
'ராஜ நாகமே, நில்...' என்று, குரு ஆணையிட, அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.
'நீ, சீடனின் உயிரை எடுக்க வந்துள்ளதை அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது, என் கடமை. அதனால், இதற்கு அனுமதிக்க மாட்டேன்...' என்றார்.
'வேத குருவே... சீடனின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும் என்பது, எனக்கு, காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே, கடமையை செய்ய விடாமல், தடுக்கலாமா...' என்று முறையிட்டது, ராஜ நாகம்.
'சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே, உனக்கு, காலன் இட்ட கட்டளை... நானே, அவன் ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும், நீ, உன் கடமையை செய்துவிட்ட பலனை பெறுவாய்...' என்று கூறி, கத்தியால், சீடனின் கழுத்தில் லேசாக கீறினார்.
தன் கழுத்தில், குரு, கீறுவதை உணர்ந்தும், சிறிதும் அசையாமல், கண் மூடி படுத்திருந்தான், சீடன்.
சீடனின் ரத்தத்தை எடுத்த குரு, அதை, ராஜ நாகத்துக்கு ஊட்டி விட, மகிழ்வோடு, ரத்தத்தை உறிஞ்சி, வந்த வழியே சென்றது.
சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு, தான் எடுத்து வந்த பச்சிலை சாற்றை பிழிந்து, அவனது கழுத்து பகுதியில் பற்று போட்டு, உறங்க சென்றார், குரு.
சிறிது நேரத்துக்கு பின், கண் விழித்த சீடன், 'குருவே... நம் பயணத்தை தொடரலாமா...' என்றான்.
'சீடனே... சற்று முன் நீ உறங்கும்போது, கழுத்தில் கத்தி வைத்தேனே... உனக்கு பயம் இல்லையா...' என்று, கேட்டார்.
'குருவே... கழுத்தில் ஏதோ ஊறுவதை உணர்ந்து, விழித்தேன்; கையில் கத்தியுடன் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால், குருநாதராகிய தாங்கள், எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை அறிவேன். அதனால், நான் நிம்மதியாக உறங்கினேன்.
'குருநாதராகிய உங்களுக்கு, என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதில் எவ்வித கவலையும் இல்லை...' எனக் கூறி, பணிந்து நின்றான், சீடன்.
சீடனை ஆற தழுவி, அவனோடு நடக்கலானார், குரு.
நண்பர்களே... நமக்கு விதித்தபடி நடக்கும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் இறைவனே பொறுப்பு என்று, அவனை சரணடைந்தால், நடக்க இருக்கும் தீமையும், இறைவன் அருளால் நன்மையாக மாறும்.

ஏ. எஸ். ஜி.,

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22-மார்ச்-202018:19:57 IST Report Abuse
கதிரழகன், SSLC ஐசாக்கு எடுவார்டு சுகுமார் சார், ராகவன் சார், பாண்டிராஜ் சார், ஆரோக்கியம் சார், மைக்கேல் சார், தாமஸ் சார், நயினா முகமது சார், ராமன் சார், தமிழ் அய்யா, மகாலிங்கம் ஐயா, டிராயிங் மாஸ்டர் சார், மதுரம் சார், (அவிங்க சம்சாரம் பேரும் மதுரம், ஆன்ரூஸ் பள்ளிக்கூட டீச்சர் ) இவுங்க ஞாபகம் வந்தது. நல்லது. ராமநாதபுரம் சுவார்ட்சு உயர் நிலை பள்ளி.
Rate this:
Cancel
eeshwary - coimbatore,இந்தியா
22-மார்ச்-202014:31:11 IST Report Abuse
eeshwary மதிப்பிற்குரியீர் , ipaper -ஐ மீண்டும் சாதாரண நாளிதழாக வெளியிட வேண்டுகிறேன். வரி விளம்பர புத்தகத்தையும் பதிவு செய்யவும் வேலை தேடுவதற்கு&தேடுவோருக்கு வசதியாக இருக்கும் . சாதாரண நாளிதழ்போல் இருந்தால் படிப்பதற்கு மிக உதவியாக இருக்கும் . நான் ஏற்கனவே தினமலர் எட்டு வருடங்களாக வாங்கிக் கொண்டிருக்கிறேன் இன்று பேப்பர் வரவில்லை . ஆகையால் epaper படிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் epaper பதிவிறக்கம் மற்றும் சந்தா செலுத்த கூறுகிறது . ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தான் அதிக அளவில் வேலைவாய்ப்பு செய்திகள் வெளிவருகின்றன தயவு செய்து இன்றைய அனைத்து பக்கங்களையும் பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இரண்டு தினமலர் , கோவை செய்திகள் வரி விளம்பர புத்தகம் என அனைத்தும் பதிவிடுமாறு முக்கியமாக வேலை வாய்ப்பு செய்திகளை' பார்க்க பேருதவியாக இருக்கும் . தயை கூர்ந்து நாளிதழ் விலை குறைக்க இயலுமா ? பதில் தரவும் . இன்றைய செய்திகளை படிக்க மிக ஆவலுடன் இருந்தேன் .
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
22-மார்ச்-202012:35:50 IST Report Abuse
selva ரொம்ப நல்ல பழக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X