திக்... திக்... பங்களா... (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
00:00

சென்றவாரம்: கோடை விடுமுறையை கழிக்க வினுவும், மதுவும் குற்றாலம் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ரயில் பெட்டியில் ஏறிய தாடி ஆசாமி, அச்சுறுத்தி, பயணத்தை முடக்க முயன்றார். இனி -

'குற்றாலம் போக கூடாதா... நீங்க யார்...'
'வழிப்போக்கன்...'
'பேரு இல்லையா...'
'என் பேரு கொளஞ்சி...'
'குற்றாலத்துல குடியிருக்கீங்களா...'
'நான் எங்கும் இருப்பேன்...'
'ஓஹோ... நாடோடியா...'
'நான் வேறு மாதிரி...'
'அப்படின்னா...'
'ம்... சில நேரம் பைத்தியமா இருக்கேன். நல்லவங்களத் தேடுறேன்; ஞானக் கிறுக்கன்...'
'ஒண்ணு கேட்டா கோச்சுக்க கூடாது...'
'கேள்...'
'பயணச்சீட்டு வாங்கினீங்களா...'
'டிக்கெட் பரிசோதகர் கேட்கட்டும் சொல்றேன். உபயோகமற்ற கேள்விகளை தவிர்த்து, தஞ்சாவூர் வந்ததும் இறங்கிடுங்க... மாற்று ரயிலில், சென்னை திரும்புங்க...'
'டி.டி.ஆர்.,யை அழைச்சுட்டு வர்றேன்... அவர்கிட்ட வாய் ஜாலத்தைக் காட்டுங்க...'
ரசித்து சிரித்தார் கொளஞ்சி.
இருவரும் ஓடினர்; கம்பார்ட்மென்ட்டின் கடைசியில், துாக்கத்தில் ஆழ்ந்திருந்த பயணச்சீட்டு பரிசோதகரை எழுப்பினான் வினு.
'என்ன தம்பி...'
'ஒரு தாடிக்கார ஆசாமி கும்பகோணத்துல ஏறினார். எங்க கிட்ட ஏதேதோ பேசுறாரு. பழையக் குற்றாலம் போகாதீங்கன்னு மிரட்டுறார். டிக்கெட்டை நீங்க கேட்டா காட்டுவாராம்...'
'கும்பகோணத்துல முன்பதிவே கிடையாது; நானும் யாரையும் ஏத்தலயே...'
'அப்படின்னா அந்த ஆசாமி யார்...'
'சரி வாங்க... அந்தாளை காட்டுங்க...' எழுந்தார்.
வினுவுடன் நடந்தாள் மது.
இருக்கையை அடைந்த போது கொளஞ்சியை காணோம்.
டி.டி.ஆர்., ஓடி, கழிப்பறைகளை சோதித்தார். குறுக்கு விசாரணை செய்தபடி, 'கனவு கினவு கண்டீங்களா...' என்றார்.
'ரெண்டு பேர் சேர்ந்து, ஒரே கனவை விழிச்சுக்கிட்டே எப்படி சார் காண முடியும்...'
டி.டி.ஆர்., சிறிதுநேரம் யோசித்து நிமிர்ந்தார்.
'எனக்கு புரிஞ்சுபோச்சு...' என்று இருவரின் காதுகளை பிடித்துக் கிள்ளினார்.
'என்ன புரிஞ்சது...'
'என்னை ஏப்ரல் பூல் ஆக்கிட்டீங்களே... கொளஞ்சியாவது கிளஞ்சியாவது எல்லாம் உங்க கற்பனை; தேமேன்னு துாங்கிட்டு இருந்தேன். பேஜார் செய்துட்டீங்களே...'
'ஐயோ... இது முட்டாளாக்குற விஷயமே இல்ல... சந்தேகமாயிருந்தா சக பயணிகளை கேட்டுப் பாருங்க...'
விளக்கை போட்டார் பயணச்சீட்டு பரிசோதகர்.
'மன்னிக்கவும், இந்த ரெண்டு வாண்டுகளோட ஒரு தாடிக்கார ஆசாமி பேசிக்கிட்டு இருந்தாரா, சிறிது நேரத்துக்கு முன்னாடி...'
'நாங்க பாக்கலயே... இந்த ரெண்டுப் பசங்கதான் துாங்காம பேசிட்டு வருதுங்க... சின்னக் குழந்தைங்க பேச்சைக் கேட்டு துாக்கத்தை கெடுக்குறீங்களே...'
'பாத்தீங்களா... பேசாம படுத்து துாங்குங்க...' என்று நடந்தார்.
மதுவும், வினுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
'அந்த ஆசாமி எங்க போயிருப்பாரு...'
'லோயர் பெர்த்துகளுக்கு கீழே எங்கயாவது ஒளிஞ்சிருப்பாரோ...'
'நல்லா பாத்தாச்சு; இல்லையே...'
'அப்படின்னா இப்படித்தான் இருக்கும்...'
'எப்படி...'
'ஓடுற ரயிலில் அகால மரணம் அடைஞ்சவங்களோட ஆவி, பேயா வந்திருக்கும்...'
'பேயா... என்னடா பயமுறுத்துற...'
'சரி... அந்த கொளஞ்சி பேச்சை நாம நம்ப வேணாம். பேய் நம்பள ஏப்ரல் பூல் ஆக்குச்சோ என்னவோ... முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். போய் தான் பார்ப்பமே பழையக் குற்றாலத்துக்கு...' ஆணித்தரமாக கூறினான் வினு.
ரயில் தஞ்சாவூரை அடைந்தது; பயணச்சீட்டு பரிசோதகர் யோசனையுடன் இறங்கினார். ரயில்வே போலீசிடம் ஏதோ முணுமுணுத்தார். அவ்வளவு தான். ஆறு நபர் கொண்ட போலீஸ்'படை அனைத்து பெட்டிகளையும் அலசியது.
ரயில்வே இன்ஸ்பெக்டர், 'எந்த தாடிக்கார ஆசாமியும் இல்லை; அந்த வாண்டுகள் பாத்தது வெறும் மனப்பிரமையாக இருக்கலாம்...' என்றார்.
'உங்கள தொந்தரவுப்படுத்திட்டேன்...'
'சரி... இது எங்க கடமைதானே...' ரயில்வே போலீசார் புறப்பட்டனர்.
மதுவும், வினுவும் மனம் மாறி தேற்றி கொண்டனர்.
அதிகாலை, 5:30 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தது ரயில். ஏறக்குறைய, 150 நிமிடங்கள் தாமதம். பெட்டியை இறக்கியதும், மது, வினுவை கை குலுக்கி விடைபெற்றார் பயணச்சீட்டு பரிசோதகர்.
அடுத்த சில நிமிடங்களில் திருச்சி நிலையமே அதிர்ந்தது. திகிலில் பரபரப்பாக ஓட ஆரம்பித்தனர் பயணியர்.
ரயில் நிலைய ஒலிபெருக்கி அலறியது...
கொல்லம் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. பயணியர் பதட்டப்படாமல் ரயிலிருந்து இறங்குங்கள். காத்திருக்கும் அறையில் ஓய்வெடுங்கள்; மோப்ப நாய்களும், பாம் ஸ்குவாடும் வெடிகுண்டை தேட போகின்றன. வெடிகுண்டு அகற்றப்பட்ட பின் ரயில் கிளம்பும்...
- அறிவிப்பு தமிழிலும், ஆங்கிலத்திலும், தொடர்ந்தன.
பயணச்சுமைகளுடன் முண்டியடித்து குதித்து வெளியேறினர் பயணியர். எங்கும் கூச்சல், குழப்பம். மதுவும், வினுவும் இறங்கினர்.
'இதென்ன புது குழப்பம் மது... நடக்கிறதெல்லாம் அபசகுனமா இருக்கே; பேசாம அப்பாவுக்கு போன் செய்து சென்னை திரும்பிடுவோமா...'
'நோ... நோ... அது கோழைத்தனம்; கோழையாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதை விட, வீரனாய் சில நொடிகள் வாழ்வது மேல்; அந்த அறையில் காத்திருப்போம் வா...'
ரயிலில், அனைத்து கம்பார்ட்மென்ட்களும் காலியாயின. மோப்ப நாய்கள் ஆராய்ந்தன. பயணச் சுமைகளும் ஆராயப்பட்டன.
அரைமணி நேரத்துக்குப் பின் -
ரயில்வே கார்ட் கம்பார்ட்மென்ட்டில் மர்ம பெட்டி கிடைத்தது. வெப்பத் தடுப்பு ஆடையும், விசேஷ கண்ணாடி முகமூடியும் அணிந்த இருவர் பெட்டியை திறந்தனர்.
உள்ளே வெடிகுண்டு... வெடிக்க, 100 நொடிகள் தான் இருந்தன; டைமர் ஓடியது. சிவப்பு, பச்சை கறுப்பு நிற வயர்கள் பின்னிப் பிணைந்திருந்தன. எந்த நிற வயரை கத்தரிப்பது... கூட்டத்தை விலக்கி, தாடி ஆசாமி உட்பட்டார். நடப்பதை பார்க்க மதுவும், வினுவும் வந்தனர்.
சிமென்ட் பெஞ்ச் மீது ஏறினர். குண்டு செயலிழப்பு குழுவிடம், 'கட்டர்' கருவியைப் பிடுங்கினார் தாடி.
வினு, 'ஹேய்... திரும்ப கொளஞ்சிடி...' என்றான்.
'அட ஆமா...'
சிரித்தபடியே, 'பயப்படாதீங்க... வெடி குண்டை செயல் இழக்க செய்ய எனக்கு தெரியும்...' என்றார் கொளஞ்சி.
வெடிக்க, 60 நொடிகள்; கட்டர் கருவியால், சிகை கலைஞர் முடிவெட்டுவது போல வயர்களை கத்தரிக்க ஆரம்பித்தார் கொளஞ்சி.
'டிக்... டிக்... டிக்...'
நொடிகள் கரையும் சத்தம்.
கடைசி இணைப்பில், மூன்று நிற வயர்கள். சரியான ஒன்றை வெட்டினால், குண்டு முழுமையாக செயல் இழக்கும். தவறான எதை வெட்டினாலும், ரயில் நிலையம் துாள்துாளாகும்...
கட்டர் ஒரு வயரை நோக்கித் தாழ்ந்தது!
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X