நோபல் பரிசு திசையை மாற்றிய பெண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
00:00

நோபல் பரிசுகள், அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கே வழங்கப்படுகின்றன. விதி விலக்காக, 1988ல் பயன்பாட்டு அறிவியலுக்கு வழங்கப்பட்டது. அதாவது, நோய் குறைப்பு மருந்து கண்டுபிடித்த அறிஞருக்கு வழங்கப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு, வலியின் தீவிரத்தைக் குறைக்க, மருந்து கண்டுபிடித்தவர் பெண் விஞ்ஞானி ஜெர்டு பில்லி எலியன். அவரது ஆய்வும், கண்டுபிடிப்புகளும், மருத்துவ உலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மானுட துன்பத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடித்தவர்...' என, நோபல் பரிசு கமிட்டி பாராட்டியது.
ஜெர்டு பில்லி எலியன், அமெரிக்கா, நியூயார்க் நகரில், ஜனவரி 23, 1918ல் பிறந்தார். செல்லமாக, டர்டி என்று அழைக்கப்பட்டார். அவரது பெற்றோர், ஐரோப்பிய நாடான லுதுவேனியாவை சேர்ந்தவர்கள். அகதியாக அமெரிக்காவில் குடியேறினர்.
நிலையற்ற குடும்ப சூழ்நிலையால், வீட்டிலேயே கல்வி கற்றார் டர்டி. பள்ளி இறுதி தேர்வை, 15ம் வயதில் நேரடியாக எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியுற்றார்.
அப்போது, இரண்டு சம்பவங்கள் அவரை பாதித்தன. மிகவும் அன்புடன் பழகிய, அவரது தாத்தா, குடல் புற்றுநோயால் இறந்தார்; தந்தையிடம் பல் மருத்துவ உதவி பெற்றுவந்த புற்றுநோயாளி ஒருவர் கடும் வலியால் அவதிப்படுவதைக் கண்டார்.
இவற்றால் மனம் கலங்கிய டர்டி, புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாக்கினார்.
ஆனால், கல்லுாரியில் படிக்க முடியாத அளவு, வறுமை வாட்டியது. மேற்படிப்பில் சேர ஒரே வழி தான் இருந்தது. அமெரிக்கா, நியூயார்க் பல்கலைக்கழக ஹூண்டர் கல்லுாரியில், ஏழை மாணவியருக்கு ஒரு திட்டம் இருந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கற்றார்; வேதியலில், 1937ல் பட்டம் பெற்றார்.
மகள் வேலைக்குச் சென்றால், பணக்கஷ்டம் தீரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார் தந்தை. எனவே, பகுதிநேர வேலைக்கு சென்றார் டர்டி. வேலை செய்து கொண்டே அதே கல்லுாரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்தார். நன்றாக படித்து, 1941ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அப்போது, இரண்டாம் உலக யுத்தம் மூண்டது. வேலைகளை விட்டு, ஆண்கள் போர் முனைக்கு சென்றனர். காலி இடங்களில் பெண்களை அமர்த்தினர். மருந்து ஆய்வாளருக்கு உதவியாக, டர்டியை நியமித்தது ஒரு நிறுவனம்.
அந்த காலத்தில், மருந்துகளை விலங்குகளுக்கு கொடுத்து தான் சோதிப்பர். அந்த சோதனை திருப்தி தந்தால் தான் பயன்பாட்டுக்கு வரும். இந்த கொடிய முறையை மாற்றிய டார்டி, புதிய யுக்தியை அறிமுகம் செய்தார்.
இதற்காக முக்கியக் கண்டுபிடிப்பு ஒன்றை நடத்தினார். புற்றுநோய் செல்களை, மருந்துகளால் ஏமாற்ற முடியும் என்பதே அது. புற்று நோய், அதிவேகமாக செல்களை அழிப்பதை தடுக்கும் மருந்தை, 1950ல் கண்டுபிடித்தார். அது தான், புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்திய முதல் மருந்து.
அந்த ஆராய்ச்சி தந்த உத்வேகம், 1983ல் எய்ட்ஸ் நோய்க்கு, மருந்து கண்டுபிடிப்பு வரை தொடர்ந்தது. இவரது அயராத ஆய்வுகளை பாராட்டி, 1988ல், நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையை, ஏழை பெண்களின் கல்வி வளர்ச்சி பணிகளுக்கு வழங்கினார் இந்த அற்புத அறிவியல் அறிஞர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X