புளிப்பு, காரங்களை தவிர்ப்பது நல்லது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2020
00:00

கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மை உடையது. கொரோனா வைரஸ் பாதித்தால், சாதாரண சளி முதல், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். காய்ச்சலுடன், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள், ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமாகவோ இதில் இருக்கலாம்.

ஆயுர்வேத முறைப்படி, பின் பனிக்காலத்தில் கபம் அதிகரித்து, இளவேனிற் காலத்தில் சூரிய வெப்பத்தால், கபம் இளக்கப்படுவதால், நம் உடலில் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இக்காலகட்டத்தில், பலவீனம் ஏற்பட்டு, தொற்றுக் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கபத்தை உடனடியாக தணியச் செய்வது முக்கியம். எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய மஞ்சள், மிளகு, நெல்லி, வேப்பிலை, சீதல் கொடி, துளசி ஆகியவற்றை கஷாயமாகவோ அல்லது இலையாகவோ தினமும் சாப்பிடலாம்.

உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய, இஞ்சி டீ, சுக்கு டீ, சீரக தண்ணீர் ஆகியவற்றை பருக வேண்டும். குளிக்கும் போது, கற்பூரம், சந்தனம், அகில், குங்குமப்பூ முதலியவற்றை பூசிக் கொள்ளலாம். மூக்கடைப்பு மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை போக்க, நசிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

இச்சிகிச்சையில், மூக்கில் எண்ணெய் விடுதல் அனுத் தைலம், சய்பிந்து தைலம் உபயோகிக்கலாம். வாந்தி சிகிச்சை செய்வதன் மூலம் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றலாம்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு, மஞ்சள் நீர், எலுமிச்சை சாறு, வேப்பிலை தண்ணீர் பயன்படுத்தலாம். வேப்பிலைகளை பயன்படுத்தி, துாமம் என்ற புகை போடலாம். சுற்றுப்புறத்தில் இருக்கும் கிருமிகள், இதனால் அழியும். நல்லெண்ணெய், கல் உப்பு, திரிபலா குடிநீர் கொண்டு, அடிக்கடி வாய் கொப்பளிப்பது நல்லது. இது, வாய் வழியாக கிருமிகள் உடலினுள் செல்வதை தடுக்கும்.

எந்த உணவாக இருந்தாலும், நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். புளிப்பு மற்றும் காரங்களை தவிர்ப்பது நல்லது. சந்தனம் நீர், தேன் கலந்த நீர், வெட்டிவேர் நீர் ஆகியவற்றை, அடிக்கடி பருகுவதால், உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும். பிரணாயாமம் மற்றும் கபால பஸ்தி ஆகியவற்றை செய்வதன் மூலம், நுரையீரலை பலப்படுத்த முடியும்.

டாக்டர் கவுதமன் கிருஷ்ணமூர்த்தி
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை
99400 79511

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
24-மார்ச்-202012:53:58 IST Report Abuse
ocean kadappa india உலகில் மனிதர் கூட்டம் பெருகி விட்டது. உலகெங்கும் மனிதக் கழிவுகள் பிணங்கள் சாக்கடைகள் நிலத்திலேயே விடப்படுகின்றன. மழை காலத்தில் அவைகள் ஊறி நிலத்தடி நீருடன் கலந்து. அதையும் கெடுத்து வருகின்றன. அந்த காலத்தில் ஆறுகள் ஓடைகள் குளம் குட்டைகள் சுத்தமாக இருந்தன. இப்போது அப்படி இல்லை. அந்த காலத்தில் காற்றும் மிக தூய்மையாக இருந்தது. மாலையில் நல்ல மூலிகை மணத்துடன் வீசும் தென்றல் காற்றின் சுகமே தனி. இப்போது அப்படி இல்லை. இந்தியாவை பொறுத்த மட்டில் இன்றைய குடும்பங்களில் ஒற்றுமை இல்லை. பெரியவர்களை சிறியவர்கள் பொருட்படுத்துவதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலமென்று அலைகிறார்கள். யோகிகளும் ஞானிகளும் இப்போதில்லை. மனித கலாச்சாரத்தில் நிகரற்ற இந்தியா இன்று இப்படி என்றால் வெளிநாடுகளின் நிலை எப்படி இருக்கும். உவாங் நகர் வாழ் ஒரு பெண்ணுக்கு வந்த கொரோனாவை உடனே கண்டறிந்து சிகிச்சை செய்து கட்டு படுத்த தவறியதால் (சமீபத்திய செய்தி) அந்நோய் மருத்துவ உலகினருக்கு சவால் விடுகிறது. பூமிக்கு அடிப்பகுதியும் கழிவுகளால் கெட்டது மட்டுமின்றி ஆழ்கடல் நீரையும் அளவு மீறிய உப்பாக்கி விட்டது பூமியின் மேற் பரப்பும் கெட்ட காற்றால் கெட்டு விட்டது. பூமியில் சேரும் கழிவுகள் அனைத்தையும் பூமியை விட்டு அகற்ற வேண்டும். பூமியின் புவி ஈர்ப்பு விசை ஏறக்குறைய 250 கி.மீ உயரம் வரை உள்ளதாக சொல்கின்றனர். காற்றில் கலந்துள்ள நச்சு தன்மை ஈர்ப்பு விசை அதி வேக எல்லை வரை அதிகம் இருக்கலாம். அதாவது பூமிக்கு மேலே சராசரியாக முதல் ஐந்து கி.மீ உயரம் வரை தொண்ணூறு விழுக்காடும் (விமானம் பறந்து செல்லக்கூடிய உயரம்) அதனை அடுத்து ஐம்பது கி.மீ உயரம் வரை .அறுபது விழுக்காடும் அதற்கடுத்து நூறு கி.மீ உயரம் வரை நாற்பது விழுக்காடும் நூறு கி.மீ உயரம் முதல் இரு நூறு கி.மீ உயரம் வரை இருபத்தைந்து விழுக்காடும் அதற்கும் மேலே நச்சு தன்மை இருக்காது என கருதுகிறேன். உயரம் செல்ல செல்ல காற்றின் நச்சு தன்மையை படிப்படியாக குறையும் வாய்யப்புள்ளது. காற்றின் நச்சு தன்மை அதிகமுள்ள அதிகவேக ஈர்ப்பு விசை எல்லை வரை மட்டும் அதாவது ஐம்பதாயிரம் அடி உயரம் வரை அதி சக்தி வாய்ந்த நச்சு முறிப்பான் மருந்துகளை வானில் பரவலாக தூவி செல்லலாம். இதற்கு பயணிகள் செல்லும் விமானங்களில் கூடுதல் தெளிப்பான்களை அமைக்கலாம். உலக கழிவுகளை சாட்டி லைட்டுகள் மூலம் இன்னொரு கண்டத்தில் கொண்டு போய் தள்ள வேண்டும். மனிதர்கள் அடுத்த கண்டத்திற்கு போக முயலாமல் பூமியிலேயே தங்கி வாழ வேண்டும்.. இப்படி தெரிவிப்பதால் என்னை பைத்தியம் என்பீர்கள். என்ன செய்வது உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழவேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்ற நப்பாசையில் என் சிந்தனை ஓடியது. அதனை கருத்துகளாக்கி தந்துள்ளேன். வருங்காலத்தில் இப்படி கூட நடக்கலாம். யார் கண்டார்கள். இது சரியாக நடைமுறைக்கு வந்தால் மனிதருக்கு எந்த வியாதியும் வைரஸ்களும் பூமியில் வர வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்ச்-202008:50:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கபம் என்ன வெண்ணையா இல்லை நெய்யா? வெயிலில் இளகுவதற்கு? மார் சளி என்பது வெளியில் இருந்து வந்த தொற்று, அல்லது ஒவ்வாத பொருளுக்கு (அலர்ஜி, ஆஸ்த்மா) நுரையீரலின் பதில். மஞ்சளாக இருக்கும் பட்சத்தில் அது தொற்றினால் (பேக்டீரியா) வந்தது, அப்படி இல்லாமல் சளி இருந்தால் அது ஒவ்வாமை. பேக்டீரியா என்றால் ஆண்டிபயாடிக், ஒவ்வாமை என்றால் ஆன்டி அலர்ஜி.. அது அதுக்கு தகுந்த சிகிச்சை தந்து சீராக்கி கொள்ளுங்கள். பொதுவாக நன்றாக உடற்பயிற்சி செய்து நுரையீரலை வலிமையாக வைத்துக்கொள்ளுங்கள். புளி என்ன புலியை கூட அடித்து சாப்பிடலாம் (ஒரு ரைமிங்கிற்கு சொன்னேன்). எலுமிச்சம் பழம் குளிர்ச்சி, கபம் வரும் என்று கூட பினாத்துபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும். எலுமிச்சம் பழம் வைட்டமின் சி.. 100% நோய் எதிர்ப்பு வளர்க்கும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்ச்-202003:50:50 IST Report Abuse
J.V. Iyer அய்யா உப்பும், சர்கரையும்தான் இந்தியர்களுக்கு எதிரிகள். இவைகள் இல்லாமல் சாப்பிட குழந்தைகளுக்கு பழக்கவேண்டும். பிறந்தது முதல் குழந்தைகளுக்கு சர்க்கரையை வாயில் திணிக்கிறார்கள்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்ச்-202022:07:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சார்வாளுக்கு சக்கரை வியாதியும், ரத்த கொதிப்பும் இருக்கு போல. அதான் எரிஞ்சு விழறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X