ரெளத்ர வீணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

ஒரு விவசாயி நொடிஞ்சு போறதுக்கு காரணம் வறட்சி மட்டுமா? எங்க கதையை கேட்டுட்டு பொறுமையா பதில் சொல்லுங்க. செழிப்பான நீர்வளத்தோட கிணறு இருந்தும், நெல், வெங்காயம்னு யோசிக்காம, சோளம், பருத்தின்னு பயிரிட்டிருக்கோம். என்ன பண்றதுய்யா... உங்க ஆட்சியில எங்களுக்கு விவசாய மின் இணைப்பு கிடைக்கலையே!

உடனடி மின் இணைப்புக்காக, 'சுயநிதி' திட்டத்துல 2009ம் ஆண்டுல விண்ணப்பிச்சேன். குடிக்காடு கிராமத்துல, 214/3பி1 சர்வே எண்ணுல இருக்குற என்னோட இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை, வரகுபாடி வி.ஏ.ஓ.,வும், சிறுவாச்சூர் மின்நிலைய பொறியாளர்களும் நேர்ல வந்து பார்த்துட்டு, அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள்ல இணைப்பு வந்திரும்னு சொன்னாங்க.

ஆனா பாருங்க... இன்னும் மின் இணைப்பு வரலை. நிலைமை இப்படியிருக்க, 2017ம் ஆண்டுல 'தட்கல்' திட்டத்தை நடைமுறைப்படுத்திட்டீங்க!அதாவது, 500 ரூபாய் கட்டி பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே சுயநிதி திட்டத்துல பதிவு பண்ணியிருக்கிற நான், இரண்டரை லட்சம் ரூபாய் 'தட்கல்' கட்டணம் செலுத்துனா உடனடி மின் இணைப்பு... சபாஷ்! மனசாட்சியோட சொல்லுங்கய்யா... ஒரு விவசாயி நொடிஞ்சு போறதுக்கு காரணம் வறட்சி மட்டுமா?

- விவசாய மின் இணைப்பிற்காக 'சுயநிதி' திட்டத்தில் பதிவு செய்து, 11 ஆண்டுகளாக காத்திருக்கும் அம்சவள்ளி, பெரம்பலுார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
25-மார்ச்-202018:58:29 IST Report Abuse
Raj வருத்தம் அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
25-மார்ச்-202016:50:36 IST Report Abuse
ஆப்பு மின் இணைப்புக்கு மோடி ஐயாவை அணுகவும். அவிய்ங்க ஆளுங்கதான் மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாதுன்னு சொல்லிட்டு வர்ராங்க.
Rate this:
Share this comment
Cancel
selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மார்ச்-202012:07:59 IST Report Abuse
selvaraju தமிழக விவசாயிகளின் நிலைமை இதுதான். ஒரு பக்கம் அரசாங்கம் வஞ்சிக்கின்றது. மறுபக்கம். நாம் விளைவித்த பொருட்க்களின் விலையை. வியாபாரி நிர்மாணிக்கின்றான். வள்ளி திருமணம் நாடகத்தில். நாரதராக வேடம் அணிந்து வரும் திரு.கவிராசு அவர்கள், இந்த கருத்தை அழகாக எடுத்து உரைத்து. முடிவாக ஒன்று சொல்லுவார்."அரண்மனை கோழி முடடை. அம்மியையும் உடைக்கும். நமக்கேன் பெரிய இடத்து வம்பு என்று. ஒவ்வொரு மனிதனும்.இதேபோல் நினைத்தால்,தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவாகும் மக்களே சிந்தியுங்கள், செயலாற்றுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்- ஏழை விவசாயி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X