வைரஸ் பயோ இன்ஜினியரிங்கில் கில்லாடி. தன் அளவு, வடிவம், நம்முள் புகும் விதம் போன்ற எல்லாவற்றையும் காலப்போக்கில் மாற்றிக் கொண்டே இருக்கும். ஏன் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கேட்கிறீர்களே? இன்றே அதற்கொரு மருந்து கண்டுபிடித்தாலும், அதை முறியடிக்கும் விதத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் வைரஸ்களுக்கு உண்டு.
பொதுவாக, உடலின் அளவைப் பொறுத்தே, உயிரினங்களின் மூளை வளர்ச்சி, ஆயுள் முதலியவை அமையும். ஆனால், அந்த உயிரினம் இனப்பெருக்கம் செய்யும் விதத்தைப் பொறுத்துத்தான் அதன் தாங்குதிறன் (survival rate) அமையும். அப்படிப் பார்த்தால், வைரஸின் தாக்குப்பிடிக்கும் திறன் மனிதனைவிட அதிகம். ஏனென்றால், ஒவ்வொரு முறையும் தன் அளவு, வடிவம் மட்டுமன்றி, மனிதனைத் தாக்கும் விதத்தையும் அது மாற்றிக் கொண்டே இருக்கும்.
மரபியல் பொறியியல் (genetic engineering) துறையில் வைரஸ் கில்லாடி. வைரஸ் தன் வடிவத்தை, செயற்பாட்டை அதிகம் மாற்றும் என்பதால்தான், அதற்கு மருந்து கண்டுபிடிப்பதும் சிரமம். மருந்து கண்டுபிடிப்பதற்குள் அது வேறு வடிவத்துக்கு மாறிவிடும்.
டாக்டர். G.ஸ்ரீனிவாஸ்
நோய் பரவியல் துறை, தலைவர்,
தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்.