கொட்டில் முறை கோழி வளர்ப்பு கழிவில் நுண்ணுயிர் உற்பத்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2020
00:00

மதுரை பி.இ., பட்டதாரி விவசாயி அசத்தல்

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் முத்தையா. 25 வயது நிரம்பிய இவர் பி.இ., சிவில் இன்ஜினியர். விவசாயத்தில் நாட்டம் கொண்டார். வேளாண்மை தொழிலை முறையாக மேற்கொள்ள மதுரை கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றார்.
கொட்டில்முறை ஆடு வளர்ப்பு பிரபலமாகி வரும் நிலையில் கொட்டில்முறை கோழி வளர்த்து சாதனை படைக்கிறார். கோழி கிழிவில் நல்லது செய்யும் நுண்ணுயிர் பாக்டீரியா உற்பத்தியாவதால் பண்ணை குட்டைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாகிறது. கோழி, மீன், வெள்ளாடு வளர்ப்பு மூலம் மாதம் கை நிறைய சம்பாதிக்கிறார்.
கொட்டில்முறை கோழி வளர்ப்பு குறித்து முத்தையா கூறியதாவது: சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில் தலா 50 சென்ட் நிலத்தில் இரு பண்ணை தொட்டிகள் அமைத்தேன். பண்ணை தொட்டி ஒன்றின் மீது கொட்டில்முறையில் 600 வீரிய ரக கோழிகளை வளர்க்கிறேன்.
இதன் கழிவுகள் பண்ணை தொட்டியில் விழும். அதிலிருந்து நல்லது செய்யும் நுண்ணுயிர் பாக்டீரியா உற்பத்தியாகும். அவைபண்ணை தொட்டிக்குள் விடப்பட்டுள்ள 1500 மீன்களுக்கு நுண்ணுயிர் சத்துக்களை தரும். எனினும், அன்றாட தீவனமும் மீன்களுக்கு கொடுக்கப்படுகிறது. மற்றொரு பண்ணை தொட்டியில் கெண்டை மீன் ரகத்தை சேர்ந்த கட்லா, ரோகு, மிர்கால், சாதா, புல்லு, சில்வர் கெண்டை குஞ்சுகள் 30 ஆயிரம் எண்ணிக்கையில் விடப்படுள்ளன.
மீன் குஞ்சுகளுக்கு ஆறு மாதம் வரை குறைவான தீவனம் கொடுக்கப்படும். பின் கொட்டில்முறை கோழி வளர்க்கும் பண்ணைக்குள் 1500 எண்ணிக்கையில் விடப்படும்.
அங்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு தேவையான அளவு கொடுப்பதன் மூலம் மீன்கள் செழிப்பாக வளர்கிறது. மீன் குஞ்சுகள், கோழிகள் அரச கால்நடை பல்கலை மூலம் கொள்முதல் செல்வதால் அசல் தன்மை மாறுபடாது.
மீன்கள், நாட்டுக்கோழி, வீரிய ரக கோழி (நாட்டு கோழி போல் தோற்றம் கொண்டது), வெள்ளாடு உள்ளிட்டவைகளை பண்ணைக்கே வந்து வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.
மீன்களை தண்ணீர் தொட்டியில் பராமரித்து உயிருடன் விற்பதால் இறைச்சி பிரியர்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது. பண்ணை பராமரிப்புக்கு ஒருவர் மட்டுமே உள்ளார். மீன், கோழி, வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தி செலவை கழித்து மாதம் ரூ.75 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது என்றார். தொடர்புக்கு 63805 85298
- கா. சுப்பிரமணியன்
மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
29-மார்ச்-202014:34:00 IST Report Abuse
chander மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
C Suresh - Charlotte,இந்தியா
27-மார்ச்-202015:14:00 IST Report Abuse
C Suresh இந்த முறையில் தான் தவறான கிருமிகளும் பரவ ஆரம்பிக்கும்... ஒழுங்கான கட்டுப்பாடுடன் நடத்தப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X