இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
00:00

சுய தொழிலே மேன்மை!

அரசு ஊழியராக பணிபுரிகிறார், என் நண்பர். அவருக்கு, ஒரே மகள். பி.ஏ., முடித்தாள். திருமண வயது வந்ததும், மாப்பிள்ளை தேடினார். பி.இ., படித்த இன்ஜினியர் வரன் கிடைத்தது.
மாப்பிள்ளை, அரசு மற்றும் தனியார் பணியில் இல்லாமல், கிராமத்தில், அவருக்கு இருந்த நிலத்தில், விவசாயம் செய்து கொண்டிருந்தார். தன் மகளுக்கும், குடும்பத்தாருக்கும் பிடித்திருந்ததால், அந்த மாப்பிள்ளையை பேசி முடித்து, திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்கு வந்தவர்கள், 'ஒரே பெண்ணை வைத்திருக்கிறாய், அரசு ஊழியர் அல்லது பெரிய பணக்காரராக பார்த்து திருமணம் செய்து கொடுத்திருக்கலாமே...' என்றனர்.
அந்த நேரத்தில், உற்றார், உறவினரின் பேச்சு, அவருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், மனம் தளராமல், மகளுக்கு செய்ய வேண்டிய சீர், செனத்திகளுடன் அனுப்பி வைத்தார், நண்பர்.
கிராமத்து, பி.இ., பட்டதாரி மாப்பிள்ளை மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவருடைய நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து, எண்ணெய் வித்துகளை பயிர் செய்தார். அத்துடன், சுகாதார முறையில் மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய்யை, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தினார்.
மேலும், உயர் ரக நெல் வகைகளில் பயிர் செய்த அரிசியையும், சமூக வலைதளம் மூலம் விளம்பரப்படுத்தி, விற்பனையில் சாதனை படைத்தார். இப்போது, பத்திரிகை பேட்டிகளில் இடம்பெற ஆரம்பித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் துறையில், மாத சம்பளம் வாங்குவதை விட, இப்படி சுயமான முறையில் விவசாயம் செய்து, உயர் நிலையை அடைவது பெருமை வாய்ந்தது என்பதை, நண்பரின் மருமகன் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் திறமை, வளர்ச்சி கண்டு, நண்பர் வீட்டாரும், சுற்றத்தாரும் இப்போது பெருமையாக பேசுகின்றனர்.
- கே. அருணாசலம், தென்காசி.


இளைஞர்களே, உழைக்க தயாராகுங்கள்!

இன்று, தமிழகத்தின் பெரிய நகரம், சிறு நகரம் மட்டுமின்றி, சிற்றுாரில் கூட மளிகை கடை, ஓட்டல், ஜவுளிக்கடை, இறைச்சி கடை மற்றும் கட்டடம் கட்டும் பணிகளில், ஹிந்தி பேசும் வடமாநிலத்தவர் தான் உள்ளனர்.
தமிழகத்தில் தொழிலாளர்களே இல்லையா, இளைஞர்களுக்கு பஞ்சமா என விசாரித்த போது, கிடைத்த தகவல் அதிர்ச்சியளித்தது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட, வடமாநில இளைஞர்களை பணியமர்த்தியுள்ள, பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், 'தினசரிகளில், 'ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்தாலும், தமிழ் இளைஞர்கள் வருவது, ஒன்றிரண்டு பேர் தான். அவர்களும், எட்டு மணி நேர உழைப்பை தருவதற்கு தயாராய் இருப்பதில்லை.
'பீகார் மாநில இளைஞர்களுக்கு, தங்க இடம், மூன்று வேளை உணவு, மாதம் முடிந்ததும் சம்பளம் என்றால், தினசரி, 12 மணி நேர உழைப்பை தர, தயாராய் உள்ளனர். அதனால் தான், வெளி மாநில வேலை ஆட்களையே விரும்புகிறோம்...' என்றார்.
இப்படியே போனால், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. அதீத உழைப்பை காட்டினால் மட்டுமே, நிறுவனங்கள், உங்களை போட்டி போட்டு அழைக்கும்.
ஆகவே, தமிழக இளைஞர்களே... கடுமையாக உழைக்க தயாராகுங்கள். இல்லாவிடில், வேலை தேடி, வட மாநிலத்தவர் தமிழகம் வருவது போல், நீங்களும், வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டி வரும்.
டி. ஜெய்சிங், கோவை.

'கொரோனா' விழிப்புணர்வும், துாய்மையும்!

பக்கத்து தெருவில் வசிக்கும் என் மகனின் நண்பர்கள், தேர்வுக்காக சேர்ந்து படிக்க, எங்கள் வீட்டிற்கு வருவர். எங்கள் அடுக்ககம் வாசலில், வேப்ப இலைகள் போட்ட தண்ணீர் வைத்திருந்தோம்.
மகனின் நண்பர்கள், வாசலில் வைத்திருந்த தண்ணீரில், கை, கால் கழுவி, வீட்டிற்குள் வந்தனர்.
வழக்கமாக, மண் காலுடன், 'ஹால் கார்பெட்' மீது ஏறி குதிப்பர்.
சிறிது நேரம் படித்தவுடன், வடையும், காபியும் தந்தேன். கைகளை கழுவி சாப்பிட்டனர்.
வழக்கமாக, கையில் வாங்கி கடித்து, கிடைக்கும் துணியில் கை துடைக்கும் வழக்கம், மறைந்து போயிருந்தது.
'ஏண்டா பசங்களா... எத்தனை முறை கண்டதை மிதிச்சிருப்பீங்க... உள்ளே வந்ததும், கால் கழுவுங்க, சாப்பிடும் முன், கை கழுவுங்கன்னு முட்டிக்கிட்டோம். நழுவிடுவீங்க... இப்ப யாரும் சொல்லாமலே, சுத்தத்தை கடைப்பிடிக்கிறீங்களே... 'கொரோனா' சொல்லித் தந்த பாடமா...' என, சிரித்தார், மாமனார்.
'தாத்தா... இதுக்கு முன்ன, நீங்களும், கை, கால் கழுவ, வீட்டு வாசல்ல தண்ணீர் வைக்கலையே...' என, பதிலுக்கு அவர்களும் வாரினர்.
துாய்மை விழிப்புணர்வை, 'கொரோனா' மீட்டெடுத்திருப்பது நிஜம். இப்போது பல வீடுகளில், வாசலில், சாணி தெளிப்பதும், வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதும் வழக்கமாகி உள்ளது.
இதுதான் நம் முன்னோர், கலாசாரமாக கடைப்பிடித்த நெறி. இனி, இதை எப்போதும் கடைப்பிடிப்போம்.
கீதா பாலு, ஐதராபாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-ஏப்-202011:14:54 IST Report Abuse
Manian டி. ஜெய்சிங், கோவை:(1) தமிழ் நாட்டில் உடல் உழைப்பை கேவலமாக பார்கிறார்கள். வெட்டி பந்தா, பெற்றோர் களின் தவறான அன்பே காரணம்.ஆனால் இவர்களில் வெளி நாடி சென்றால் ,வேறு வழி இல்லாமல் குப்பை கூட அள்ளுகிறார்கள் (2)கல்வி என்பது புறநானூறு- உலகம்,அதன் இயக்கம்,பகுதிகள்,சக்தி,வசிக்கும் பல பிரணிகள், என்று அந்த உலகத்துடன் இணைந்து வாழ கற்பதே டிகிரி கல்வி என்பதை புரிந்து கொள்வ தில்லை. ஏணியை சரியாக 45 டிகிரியில் சாய்மானம் வைத்தால் மட்டுமே புவி ஈர்ப்பு (Gavity, momentum)விசைக்கு உட்பட்டு ஏறமுடியும் உராய்வ சக்தி(Heat and Friction )இல்லை என்பதாலேயே, ஈரக் காலில் வழுவழுப்பான தரையில் நடந்தால்,பிடிப்பில்லாமல் விழுந்து அடிபட்டு கொள்கிறோம் என்றெல்லாம் பவுதிகத்தில் கற்கிறோம்.இது போலவே ரசாயனம்,விலங்கியல் எல்லாம் கற்கிறோம். இதனால் வேலை கிடைக்காது.அகனானூறு என்பது- தன் நிறை குறைகளை அறிதல்,ஆளுமைத் திறனை வளர்த்தல்-பணிவு,இணைந்து பணியாற்றல்,தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளுதல், நேரம் தவறாமை,பழல் சொல்லாமை, தன்நம்பிக்கை..இவற்றை சமூக சேவை,இன்டர்ன்ஷிப் போன்ற வற்றால் ஒரு வழி காட்டி மூலம் கற்க வேண்டும்.இதுவே வேலைக்கு தேவை. இதை புரிந்து கொள்ளாதவர்களே வேலை இல்லாத,படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்று புலம்பித்திரியும் போலி பட்டதாரிகள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-ஏப்-202016:31:08 IST Report Abuse
Natarajan Ramanathan skv srinivasankrishnaveni......உங்கள் தோழி ஏன் தனது இரண்டு மகள்களுக்கும் மண்ணை நம்பும் விவசாயியை திருமணம் செய்து வைக்கவில்லை? விவசாயம் என்பது விளையாட்டு அல்ல. மிகவும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லையேல் நஷ்டம்தான் வரும். அறுவடை செய்தவுடன் விற்காமல் சிறிது பொருத்து விற்பவனே இன்று ஓரளவுக்கு லாபம் பார்க்கமுடியும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
06-ஏப்-202013:57:50 IST Report Abuse
Girija வரும் நாட்களில் விவசாயம் தான் சிறந்தது, திருநெல்வேலி எலுமிச்சம் தோட்டம் தம்பதி பற்றி எல்லோருமே அறிந்திருப்போம். கூந்தல் இருக்கிறவ அள்ளி முடிகிறாள், இதில் எரிச்சல் பட என்ன உள்ளது.
Rate this:
Manian - Chennai,இந்தியா
11-ஏப்-202011:38:08 IST Report Abuse
Manianஇது மேலோட்டமாக பார்த்தால் எங்கும் பச்சையே தெரியும்.புள்ளி விவரம் இல்லாத போது 6 கோடி தமிழர்களில் ஒருவர் போட்ட எலுமிச்சை தோட்டமே வெற்றி ஆகாது.அவர்கள் என்ன சரியாக செய்தார்கள், எப்படி யார் மூலம் உதவி பெற்றார்கள்,முதலீடு,தோல்வி அடைந்தால் மாற்று வழி வைத்திருந்தா்களா, எங்கிருந்து நீர் கிடைத்தது..என்ற நீண்ட பட்டியல் இல்லாமல் விவசாயம் வெற்றி பெறாது. பல ஆண்டு விவசாயம் செய்தவர்கள் நாங்கள்.18 சித்தர்கள் இருந்தது போல் இப்போது அது போன்ற 1008 சித்தர்கள் முளைக்கவில்லை. தனி மனிதன் வெற்றியை பெரும்பாலோர் அடைய முடியாது.அதுவே இயற்கையின் கட்டுப்பாடும் கூட.உங்கள் எண்ணம் தவறல்ல, நடைமுறையில் பரவலாக நடக்காது. இது எதிர்மறை எண்ணம் இல்லை,அனுபவ புள்ளி விவரப் பாடம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X