தன்னையே கரைத்துக் கொள்ளும், தாசில்தார் மாரிமுத்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
00:00

கிராமத்தில், மண் சுவர் வாடகை வீட்டில் வசித்தவர், மாரிமுத்து. கற்ற கல்வியால்,இன்று, தாசில்தாராக உயர்ந்து நிற்கிறார். கடந்த, 13 ஆண்டுகளாக, தனக்கு வாழ்வு தந்த கல்வியால், வார விடுமுறை நாட்களில், ஏழை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறார்.
விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர், மாரிமுத்து. கல்வி தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து, நன்கு படித்து, பள்ளி, கல்லுாரியில் முதல் மாணவராக வந்தார்.
அரசு தேர்வு எழுதி, 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' ஆக பதவி உயர்வு பெற்றார். பின், படிப்படியாக முன்னேறி, இன்று, சாத்துாரில், நில எடுப்பு தாசில்தாரராக பணிபுரிகிறார். பத்து பைசா லஞ்சம் வாங்காத, நேர்மையான அதிகாரியான இவர் செய்து வரும் பணி, மிகவும் மகத்தானது.
'அரசுத் தேர்வை எப்படி சந்தித்தோம் என்பதை, ஏழை - எளிய மாணவர்களுக்கு ஏன் சொல்லித் தரக்கூடாது என, யோசித்து, 13 ஆண்டுகளுக்கு முன், இலவசமாக பயிற்சி அளித்தேன். உயரதிகாரிகள், நண்பர்கள் உதவினர்; உற்சாகம் தந்தனர்.
'ஒரு ஆண்டு கடுமையான உழைப்பு. மாணவர்களும் நன்கு படித்து, தேர்வு எழுதிய, 150 பேரில், 145 பேர் தேர்ச்சி பெற்று, அரசு வேலையில் உள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, 'அடுத்த தேர்வுக்கு, எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்...' என்று, அக்கம் பக்க கிராமங்களில் உள்ள ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்தோர் வேண்டுகோள் வைத்தனர்.
'ஆண்டுக்கு ஆண்டு, மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது, 3,500 பேர் படிக்கின்றனர். தொலை துாரங்களில் இருந்தெல்லாம் படிக்க வருகின்றனர்.
70 சதவீதம் பேர், பெண்கள்; கட்டணம் எதுவும் கிடையாது.
'சிரமப்படும் மாணவர்களுக்கு, உடை, தேவையான புத்தகங்கள் வாங்கித் தருவது; அவர்கள் தேர்ச்சி பெற்றால், சென்னை சென்று வருவதற்கான, போக்குவரத்து கட்டணம் வழங்குவது போன்றவைகளையும் செய்து வருகிறேன்...' என்றார்.
மத்திய - மாநில அரசு வேலைக்காக நடத்தப்படும் தேர்வை சந்திப்பது குறித்து, இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வரும், தாசில்தார் மாரிமுத்து, உள்ளபடியே மகத்தான மனிதர் தான்!
இவரது அலைபேசி எண்: 98650 56155
தாசில்தார் பணிக்கு இடையூறு இல்லாதபடி, மாலை, 6:00 மணிக்கு மேல் பேசலாம்.


எல். எம். ராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-ஏப்-202003:18:11 IST Report Abuse
Manian உங்களைப் போல நாங்களும் சேவை செய்ய வழிகாட்டுங்கள் என்று எவனுமே எழுதவில்லை. ஏமாந்தவன் தலையில் மிளகாய் அறைப்பவர்களே தமிழ் நாட்டில் அதிகம்.. சிறு வயது முதல் என் தந்தையை பின் பற்றி சமூக சேவை செய்வதால், உங்கள் கோகினூர் வைர மனத்தை புரிந்து கொள்ள முடிகிறது. 99% வாய் சவடால்கள்,1% மே இலை மறைவு காய் மறைவு தொண்டர்கள். அவர்கள் மட்டுமே உண்மை பக்தர்கள். நீங்கள் பிறவி நோக்கத்தை அறிந்த பக்தர். உள்ளுணர்வால் நீங்கள் செய்யும் சேவை தொடர,.ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
07-ஏப்-202009:27:25 IST Report Abuse
muthu Rajendran Go ahead you are a jewel People will always remember you
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
06-ஏப்-202012:57:35 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) சார் Really Great. Congratulations. West wishes. God bless you and your family.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X