இஞ்சியை இடித்தால் நஞ்சாகலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
00:00

வைரஸ் தொற்று பரவும் இந்த சூழலில், நான் சொல்லும் உணவு பழக்கத்தை, அடுத்த ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் நல்லது. சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை, ஏதோ விடுமுறை கிடைத்து விட்டது என்ற மனநிலையில், பலர் இருப்பதை பார்க்க முடிகிறது. பிரியாணி போன்ற விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம் என்று இருக்கின்றனர்; இது மிகவும் தவறு.

இஞ்சி:

காலையில் வெறும் வயிற்றில், கட்டை விரலின் நகம் அளவிற்கு, தோல் சீவிய இஞ்சியை, சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம். இஞ்சி நல்லது என்பதற்காக, நிறைய சாப்பிட வேண்டாம். தினமும் காலையில் சிறிய துண்டு சாப்பிட்டால், படிப்படியாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி நல்லது என்று இடித்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தோல் சீவி, சிறு துண்டுகளாக பயன்படுத்த வேண்டும். இடித்து போட்டு, அதன் சாறு இறங்கினால், நஞ்சாகி விடும்.

காபி:

இந்த நேரத்தில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'காபி குடிக்காமல் என்னால் இருக்க முடியாது... தலைவலி வரும்' என்று சொல்பவர்கள், பால் சேர்க்காமல், கருப்பு காபி குடிக்கலாம். டீ குடித்தால் நல்லது. ஆனால், பாலில் டீ துாளை சேர்த்து கொதிக்க வைக்காமல், டீ டிக்காஷன் போட்டு, கொஞ்சம் பால் சேர்த்து குடிக்கலாம்.
அதேபோல, கிரீன் டீ. நிறைய, 'ஆன்டி ஆக்சிடென்ட்' இருக்கிறது என்று, ஒரே நாளில் நான்கு, ஐந்து முறை குடிக்க கூடாது; அதிகபட்சம், இரண்டு முறை தான் குடிக்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால், இந்த நாட்களில் தவிர்க்கவும்; அது, அவ்வளவு ஆரோக்கியமான உணவு கிடையாது.

கஞ்சி:

வீட்டிலேயே இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக இருக்கும். எனவே, காலை அல்லது இரவு உணவு சிறுதானியத்தில் செய்த கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்று, ஆவியில் வேக வைத்த உணவு சாப்பிடலாம். உளுந்து கஞ்சிக்கு, கருப்பு உளுந்து பயன்படுத்துவது நல்லது.
மதிய உணவில், மிளகு, சீரகம் என, ஏதாவது ஒரு ரசம் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பருப்பு அதிகம் சாப்பிடக் கூடாது; 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும்.
கண்டந்திப்பிலி, வேப்பம் பூ கிடைத்தால், வாரம் ஒருமுறை ரசம் செய்து சாப்பிடலாம். இந்த சமயத்தில், தினமும் ரசம் சேர்த்துக் கொள்வது நல்லது.

துவையல்:

இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும். எந்த துவையலாக இருந்தாலும், அரைத்த மூன்று மணி நேரத்தில் சாப்பிட்டு விட வேண்டும். காலை அரைத்ததை இரவு சாப்பிடுவது, ப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்துவது என கூடாது. எந்த துவையலாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பின் கெட்டு விடும்.
சமையலில் காய்ந்த மிளகாய்க்கு பதில், மிளகு சேர்த்துக் கொள்வது அவசியம். மிளகையும், குழம்பு கொதிக்கும் போது போடாமல், அடுப்பை அணைத்த பின், எவ்வளவு காரம் தேவையோ, அந்த அளவு மிளகை இடித்து சேர்த்து, கலந்து கொள்ளலாம்.
வேக வைத்த காய்கறிகள் மட்டும் சாப்பிடவும். வறுத்த, பொரித்த காய்கறிகள் கூடாது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் பாசிப்பருப்பு சுண்டல் சாப்பிடலாம். தினமும் கீரை சாப்பிட்டால், சளியை அதிகப்படுத்தும்; 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும். முட்டையை தவிர்க்கலாம். பால், பால் பொருட்களை நேரடியாக சாப்பிட வேண்டாம். பிரியாணி, புளியோதரை இரண்டையும் தொடவே கூடாது.
வெண்டைக்காய், காலிப்ளவர், அப்பளம் இந்த சமயத்தில் சாப்பிடவே வேண்டாம். தக்காளியின் பயன்பாட்டை, முடிந்த வரை குறைத்துக் கொள்ளலாம். தயிரை தவிர்த்து மோர் குடிக்கலாம்.
அசைவ உணவுகள் ஜீரணத்தை மந்தப்படுத்தும் என்பதால், இந்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மது, சிகரெட்டை தவிர்ப்பதும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மது கார்த்தீஸ்
சித்த மருத்துவர்
9994493887

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ksekar Sekar - coimbatore,இந்தியா
11-ஏப்-202001:35:43 IST Report Abuse
Ksekar Sekar ..இஞ்சிய இடிச்சு குடிச்சால் நஞ்சு ஆகுமாம் ...இவனை போல ஆயிர கணக்கில் புத்திசல் போல முலைச்சு இருக்காங்க ..ஒரு நாட்டு வைத்தியர் கடலை வெந்தியம் மிளகு சேர்த்து குடிச்சா கொரானா போயிடுமாம்..
Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஏப்-202007:35:51 IST Report Abuse
Anandanஇஞ்சியை மேல் தோல் மட்டுமல்ல அதற்க்கு அடுத்த பகுதியை நீக்கிவிட்டு எடுப்பது நலம். இஞ்சி சாறு எடுத்தால் அதை அரை மணி நேரம் வைத்து பின் கீழே தாங்கும் சுண்ணாம்பை நீக்கித்தான் சாறை எடுப்பர். இந்த சித்த மருத்துவர் சொல்வது உண்மை என்றே தோன்றுகிறது....
Rate this:
Cancel
Annan - Madurai,இந்தியா
08-ஏப்-202017:01:15 IST Report Abuse
Annan இஞ்சியை இடித்தால் நஞ்சு என்பது தவறான தகவல். இஞ்சி தோல் தான் நஞ்சு போன்றது. இஞ்சி சாறு அல்ல. தோல் நீக்கிய இஞ்சியை தயிர் சாதத்தில் மிகச்சிறிய துண்டுகளாகவும், டீ யில் இடித்த இஞ்சியையும் பயன்படுத்துவார்கள்.
Rate this:
Cancel
govendhan - thanjavur,இந்தியா
08-ஏப்-202011:56:44 IST Report Abuse
govendhan இது எல்லாமே எதிர்மறையா இருக்கு , இஞ்சி சாறு குடிக்க கூடாதா?? எலுமிச்சை ,தேன், வெந்நீர் சேர்ந்து குடிக்கக்கூடாதா? யாரு யா நீ புதுசா பேசுற ?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஏப்-202005:16:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//யாரு யா நீ புதுசா பேசுற ? // இஞ்சி தின்ன கொரங்கா இருக்குமோ? :)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X