வனசுற்றுலா போக வேண்டும், இயற்கையை அதன் இயல்பில் காண வேண்டும் என்ற ஆர்வம், மக்களிடையே அதிகரித்து வருகிறது. இயந்திரத்தனமான நகர வாழ்க்கையில் சலிப்படைந்த மக்கள், 'ஜங்கிள் சஃபாரி' மற்றும் 'டிரெக்கிங்' போன்றவற்றில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். சிறுத்தை, சிங்கம், புலி, மான், கரடிகளை வனவிலங்கு பூங்காக்களில் கம்பிகளுக்கு பின்னால் பார்ப்பதை விட, அவை, காட்டுக்குள் சுதந்திரமாகவும், கம்பீரமாகவும் உலவுவதை காண்பது, பேரனுபவம். வனசுற்றுலாவில் நடந்து கொள்ள சில முறைகள் உள்ளன. வனத்தில் சப்தமிட வேண்டாம் என்று சொன்னாலும், பலரும் கேட்பதில்லை. கடைசியில் புலி மட்டுமல்ல ஒரு மானைக்கூட பார்க்க முடியாமல் திரும்பியவர்கள் அனேகம். மஹாராஷ்டிராவின், அமரேட் - கர்ஹன்ட்லா சரணாலயத்தில், 16 ஆண்டுகள் வழிகாட்டியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட, ராம்ராவோ நெகர், பல பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள், புலிகளை படமெடுக்க உதவியவர். இவரிடம், வன சுற்றுலாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, கேட்டதும், கடகடவென தகவல்களை கொட்டினார். “வன விலங்குகளை காடுகளில் நேருக்கு நேர் காண வேண்டும் என்ற ஆர்வம் பெரும் பாலானவர்களுக்கு இருந்தாலும், காடுகளுக்குள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என, பலருக்கும் தெரிவதில்லை. ''உதாரணத்துக்கு, வனங்களில் புலிகளை நேரில் பார்த்தவுடன், பலர் இன்ப அதிர்ச்சியில் கூச்சலிட துவங்குவர். அதேபோல், புலியை பார்க்க முடியவில்லை என்றால், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கோபத்தில் சத்தம் போடுவர். ''உண்மையில், புலி மனிதர்களை கவனித்து விட்டால், நம் கண்ணில்படாது. நாம் சத்தம் போடாமல் பொறுமையாக இருந்தால் மட்டுமே, புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை காண முடியும். ''பொதுவாக, பலரும் சரணாலயத்தில் ஜீப்பில் ஏறியவுடனேயே புலிகள் தங்களை வரவேற்க வேண்டும்; செல்லுமிடங்களில் எல்லாம் புலிகளை பார்க்க வேண்டும் என்ற மனநிலையில் வருகின்றனர். இதனால் எப்படியாவது புலிகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தாண்டிப்போகும்படி எங்களை வற்புறுத்துவார்கள். ஆனால், அப்படி செய்வது பாதுகாப்பானதல்ல” என்றார்.
வனசுற்றுலா டிப்ஸ்:
கோடைக் காலத்தில் வனப்பகுதிக்குள் அதிகம் வியர்க்கும். இதனால், விரைவிலேயே சோர்வடைந்து விடுவோம். பருத்தி உடை அணிவதால் இதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும், அடர் பச்சை, சாம்பல், கறுப்பு போன்ற நிறங்களில் உடைகள் அணிவது நல்லது. மழைக் காலத்தில் வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்கையில், ஷூக்கள் அணிவதோடு, முழுக் கை ஆடை, தொப்பி ஆகியவற்றை அணிய வேண்டும். இதன்மூலம், அட்டைப் பூச்சி, விஷப் பூச்சிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும், டிரெக்கிங் போன்ற வனசுற்றுலா செல்லும்போது, தேவையின்றி அதிகப்படியான பொருட்களை சுமந்து செல்லக்கூடாது. அது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும். தண்ணீர் பாட்டில்கள், முதலுதவிக்கு தேவையான மருந்துகள் அவசியம் தேவை. காட்டு வழியில் வாகனத்தில் செல்லும் போது ஹாரன் மற்றும் அதிகப்படியான அரட்டை சப்தத்தை உண்டாக்க வேண்டாம். இது காட்டுச் சூழ்நிலையை பாழாக்கும். காட்டுப் பாதையில் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்குவதிலிருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்துச் செல்லும் உணவுகள் நீண்ட நேரம் அல்லது நாட்களுக்கு கெடாதவாறு இருக்க வேண்டும். வனப்பகுதியில் கிடைக்கும் புதிதான காய்கள், பழங்களை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தகுந்த வழிகாட்டி இன்றி, வனசுற்றுலா செல்லவே கூடாது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.