கொல்லத்தில் கொண்டாட்டம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2020
00:00

எத்தனை முறை கண்டாலும், சலிப்பை தராத, அதிசய பூமி கேரளா. வனங்களை அதன் வனப்பு குறையாமல் பாதுகாப்பதிலும், இயற்கையை இம்சிக்காமல், அதை கொண்டாடுவதிலும், அம்மாநில மக்கள் முன்னோடிகள். எனவே தான், சர்வதேச சுற்றுலா பயணியரின் சொர்க்கமாக, கேரளா கருதப்படுகிறது. இந்த சொர்க்க பூமியின் ஒரு பகுதியான கொல்லத்தில், இந்த வாரமும் ஒரு ரவுண்ட் வருவோமா...

தென்மலை:
அடர்ந்த காடுகளும், ரப்பர், தேயிலைத் தோட்டங்களும் இந்தப் பிராந்தியத்தை போர்த்தியுள்ளன. இங்கு புவிச்சீர் சுற்றுலா வளர்ச்சித் திட்டம் நடை முறையில் உள்ளது. தென்மலையில் ஒரு அணைக் கட்டு உள்ளது மட்டுமல்லாமல், புவிக்கு நட்பான அற்புதமான இடமும் கூட. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் படகு சவாரியும் செல்லலாம்.

பாலருவி:
கேரளா - தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள புனலுார் - செங்கோட்டை போகும் வழியில், ஆரியங்காவுக்கு அருகில் உள்ளது பாலருவி. 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர்வீழச்சி, நிச்சயம் ஒரு பரவச அனுபவம். அருவி நீர் தடாகத்தில் கொட்டும்போது, வெள்ளை வெளேர் என்று பால் போல இருப்பதால், இதற்குப் பாலருவி என்று பெயர்.

பிக்னிக் வில்லேஜ்:
கொல்லம் நகரின் முக்கிய பொழுதுபோக்கு மையம். இதன் முன்னால் உப்பங்கழி உள்ளது. ஆசிரம வளாகத்திற்குள் இந்த கிராமம் அமைந்துள்ளது.
ஒரு விந்தைப் பூங்கா, 200 ஆண்டுப் பழமையான அரசு விருந்தினர் மாளிகை, சுற்றுலாப் படகுக் குழாம், குழந்தைகள் சாலைப் போக்குவரத்துப் பயிற்சிப் பூங்கா மற்றும் யாத்ரி நிவாஸ் போன்ற அனைத்தும் உள்ள பெரிய சுற்றுலா வளாகம் இது.

பிசர் ஜோன்:
மனிதனும் - இயற்கையும் என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சிற்பக்கலைத் தோட்டத்தில், மரப்பாலம், மனதை மயக்கும் பச்சைப்பசேல் பசுந்தழைகள் இவற்றோடு பெரிய பெரிய கற்சிலைகளும் திகைக்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெசிலிடேஷன் சென்டரில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது. நேரம்: காலை, 11:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

மகாவிஷ்ணு கோவில்:
திருமுல்லாவரம் கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த இடம் பரசுராமரால் புனிதமடைந்ததாக ஐதீகம். மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதரமான பரசுராமர் தான், கேரளத்தையே படைத்தார் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது.
இக்கோவிலில் ஒரு அதிசயம் என்னவென்றால், ஒரே கருவறையில் இரண்டு மூர்த்திகள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கிழக்கே பார்க்கும் மகாவிஷ்ணு, மேற்கே பார்க்கும் சிவன் என்று இப்படி அமைந்துள்ளன. இங்கு இருந்த மூலக்கோயில், 1 கி.மீ., தொலைவில் இருந்ததாகவும், பின்னர் இது கடலில் மூழ்கி விட்டதாகவும் ஒரு நம்பிக்கை உலவுகிறது.
தரிசன நேரம்: காலை, 5:00 முதல் - 11.30, மாலை, 4:00 முதல் - 8:30 வரை.

மையநாடு:
கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களுக்குப் புகழ்பெற்ற இடம். இதில் உமயநல்லுாரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மிக முக்கியமானது. ஆதிசங்கரர் இக்கோயில் மூலவரை நிறுவினார் என்று நம்பப்படுகிறது. கொல்லத்தில் இருந்து மைய நாட்டிற்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன.

'டச்சு கொய்லோன்':
'டச்சு கொய்லோன்' என அழைக்கப்படும் அழகான இந்த இடம் முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில், நீங்கள் சூரிய அஸ்தமனத்தையும், சந்திரோதயத்தையும், ஒரே நேரத்தில் கண்டு வியக்கலாம்.
கொல்லத்துக்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய மகத்தான கொடை என்று கருதப்படுவது, தங்கசேரியில் உள்ள கலங்கரை விளக்கம். கடந்த, 1902-ல் ஆங்கிலேயர்களால் கட்டி எழுப்பப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கின் ஒளிக்கற்றைகள், கடலுக்குள், 13 மைல் துாரத்திற்கு பாயுமாம்.
கொல்லத்திலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து தங்க சேரி, மிகவும் அண்மையில் உள்ளது.

மறுவாழ்வு மையம்:காடுகளுக்கு அருகில் உள்ள இந்த மான்கள் மறுவாழ்வு மையத்தில், கேளை ஆடுகள், கிறீச்சிடும் புள்ளிமான்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவைகளுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ கவனிப்புகள் இங்கு செய்யப்பட்டு, இயற்கையோடு இயைந்து சுதந்திரமாக உலாவ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மர உச்சியில் உள்ள வீடுகளில் இருந்து துள்ளி ஓடும் மான்களையும், காட்டின் வனப்பையும் முழுமையாகக் கண்டு ரசிக்கலாம். பெலிசிடேஷன் சென்டரிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் இருக்கிறது.
நேரம்: காலை, 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.

ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில்:
தென்னாட்டுக் காசியாகக் கருதப்படும் இந்தக் கோவிலைப் பற்றிய பாரம்பரியமான கதை ஒன்று உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த புரோகிதர் ஒருவர் காசிக்குச் சென்று கங்கையில் குளித்திருக்கிறார்.
அப்போது அவருக்கு ஒரு லிங்கம் கிடைத்திருக்கிறது. அதை இக்கோவிலின் மூலவராக நிர்மாணித்துள்ளார். கதை இப்படிப் போனாலும் இன்று இக்கோவில் சிவா விஷ்ணு கோவிலாகத்தான் உள்ளது.
அதனால் தான் இக்கோயிலில் இப்போதும் வருடத்திற்குப் பத்து நாட்கள் மஹாசிவராத்திரியும், கிருஷ்ண ஜெயந்தியும், சிறப்போடு கொண்டாடப்படுகின்றன.
தரிசன நேரம்: காலை, 4:00 - 11:00 முதல்; மாலை, 5:00 - 8:30 வரை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X