நம்ம பட்ஜெட்டில் ஒரு சொர்க்கம்! | சுற்றுலா | Tour | tamil weekly supplements
நம்ம பட்ஜெட்டில் ஒரு சொர்க்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மார்
2020
00:00

மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் கிரியோல் மொழிகள்

உலக வரைபடத்தில், இந்திய பெருங்கடலில் ஒரு சிறிய புள்ளியாக தென்படும் அழகிய தீவு, செஷெல்ஸ். கிழக்கு ஆப்ரிக்காவை ஒட்டியுள்ள செஷெல்ஸில், மொத்தம், 115 தீவுகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு, விமான நிலையத்திலேயே, 'விசா' தந்து வரவேற்கின்றனர். அழகிய வெள்ளை மணல் பரப்பு கொண்ட கடற்கரைகளும், நீண்ட நெடிய நீல நிற கடல்களும், மரங்கள் அடர்ந்த மலைகளும், நம்மை வா...வா.... என்றழைக்கிறது.

மும்பையிலிருந்து செஷெல்ஸ் தீவின் தலைநகரான மாஹே செல்ல, நேரடி விமான சேவை உள்ளது. மாஹேயின் முக்கிய பகுதியான விக்டோரியாவில், 65 கடற்கரைகள், தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், ரம் தயாரிக்கும் தொழிற்சாலை, வார மற்றும் தின சந்தை என, கண்டு ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன.

இங்கு என்ன செய்யலாம்?





மீன் பிடித்தல், நீச்சல், மாஷேலை கள்ளி படகு சவாரி, கோல்ப் விளையாட்டு, மலை ஏற்றம், 'ஸ்நார்கெல்லிங்' என்ற ஆழ்கடல் நீச்சல், அழகிய கடற்கரையை ஒட்டிய விருந்துகள்.
அடுத்தது, ப்ராஸ்லைன் தீவு. இங்குள்ள வல்லே டிமாய் என்ற பகுதியில் தான், ஆதி மனிதர்களான ஆதாம் - ஏவாள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இங்கு, ஆன்சே லசியோ கடற்கரை, கருப்பு முத்து எடுக்கப்படும் பகுதிகளை பார்ப்பதோடு, உலகின் மிக பெரிய தேங்காய்களும், இங்கு தான் விளைகின்றன. ஒவ்வொன்றும் குறைந்தது, 20 கிலோ எடை கொண்டவை.
வல்லே டிமாய் தேசிய பூங்காவில், உலகில் வேறு எங்கும் காணாத கருப்பு கிளிகளை காணலாம். இது தான் செஷெல்ஸ் நாட்டின் தேசிய பறவை.
அடுத்து, லாடிக்கு தீவிற்கு செல்வோம். இங்குள்ள அன்சே சோர்ஸ் டிஆர்ஜென்ட் என்ற கடற்கரை, புகைப்பட பிரியர்களின் சொர்க்கம். பெரிய கிரானைட் பாறைகளும், அழகிய ஆழ்நீல கடலும் நம்மை மயக்குகிறது. அல்டப்ரா என்ற இடத்தில், மிக பெரிய கடல் ஆமைகள் உள்ளன.

எப்படிச் செல்வது?





சென்னையிலிருந்து, 'ஏர் - இந்தியா' உட்பட, பல விமான சேவைகள் உள்ளன. இவை மும்பை வழியாக செல்கின்றன.
செஷல்ஸ் நாணயம்: செஷில்ஸ் நாட்டின் 1 ரூபாய், இந்திய மதிப்பில், 5 ரூபாய் 49 காசுகள் மதிப்பு கொண்டவை. எல்லா கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும், இந்திய ரூபாய் மற்றும் யூரோ வாங்கிக் கொள்கின்றனர். விசா கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கலாம்.
உணவு: செஷெல்ஸ் நாட்டில் கடல் உணவுகளே பிரதானம். மீன்கள், ஆக்டோபஸ், பழந்தின்னி வவ்வால்கள் உண்கின்றனர். இந்திய சைவ உணவும் சில இடங்களில் கிடைக்கின்றன. பல வகை பழங்களும் விளைகின்றன. அரிசி உணவே பிரதானம்.
என்ன வாங்கலாம்: கருப்பு முத்துகள், ஓவியங்கள், கலை பொருட்கள், கோகோ டி மெய்ர் எனப்படும் தேங்காய் இதை சரியான கடையில் ஹோலோ கிராம் எனப்படும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் விமான நிலையத்திலேயே உங்களை நிறுத்தி விடுவர். டாகாமாகா என்ற ரம் வகைகள்.
எப்போது செல்லலாம்: ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் வரை செல்லலாம். மொத்தம், 5 நாட்கள் போதும்.

செஷெல்ஸ் என்ன வாங்கலாம்?





கருப்பு முத்துகள், ஓவியங்கள், கலை பொருட்கள், கோகோ டி மெய்ர் எனப்படும் தேங்காய். இதை சரியான கடையில் ஹோலோ கிராம் எனப்படும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் விமான நிலையத்திலேயே உங்களை நிறுத்தி விடுவர். டாகாமாகா என்ற ரம் வகைகள்.

Advertisement

 

மேலும் சுற்றுலா செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X