சித்திரக்கடவுளுக்கு சிலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாவ, புண்ணிய கணக்கு உண்டு. அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்கின்றனர். இதற்குரிய பலனையும், தண்டனையையும் தருவதற்காக, சிவனால் நியமிக்கப்பட்ட பணியாளரே, சித்திரகுப்தர்.
ஒரு தங்கப் பலகையில், இளைஞனின் சித்திரம் ஒன்றை வரைந்தார், சிவன். அதுகண்டு மகிழ்ந்த சிவனின் மனைவி பார்வதி, அதற்கு உயிரூட்ட வேண்டினாள்; சித்திரம் உயிர் பெற்றது. அந்த இளைஞனை, தன் மகனாக்கிக் கொண்டனர், சிவ - பார்வதி. அவருக்கு, உயிர்களின் பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, எமதர்மராஜாவிடம் ஒப்படைக்கும் பணி தரப்பட்டது. சித்திரகுப்தர் பிறந்தநாள், சித்ரா பவுர்ணமி.
அன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தென் மாவட்டங்களில் உண்டு. ஒருவர் இறந்து போனால், காரியம் நடத்துவர். அன்று இரவில், எண்ணெய் தேய்த்து குளித்து காரியத்தை நிறைவு செய்வர். 'இதோடு எல்லாம் போகட்டும்' என்பதே எண்ணெய் குளியலின் தத்துவம்.
நரகாசுரன் மறைவு நாளான தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்து குளிப்பதும், இதனால் தான். பாவம் செய்பவர்கள், இவனோடு தொலையட்டும் என்பதே அதன் தாத்பர்யம்.
சித்ரா பவுர்ணமி - மே 7 அன்று, நம் பாவங்கள் நீங்க, காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து, சித்திர புத்திரரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பாவம் செய்யாத அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைய வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று காலையில், அவலை பாலில் நனைத்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஒரு காலத்தில், சித்திர வடிவில் வணங்கப்பட்ட சித்திர புத்திரருக்கு, பிற்காலத்தில் சிலைகள் வடிக்கப்பட்டன. சித்திர புத்திரருக்கு தனி கோவில்கள், காஞ்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில், சித்திர புத்திரருக்கு சன்னிதி உள்ளது. ராமனும், லட்சுமணனும் சீதையை தேடி அலைந்த போது, சிவலிங்கம் வடித்து வணங்கினர். அவர்களிடம், சீதையை மீட்பது சத்தியம் என, வாக்களித்தார், சிவன். சத்தியம் செய்து கொடுத்ததால், 'சத்தியவாகீஸ்வரர்' என, பெயர் பெற்றார். இங்கு, கோமதி அம்பாளும் அருள்புரிகிறாள்.
'கோ' என்றால் பசு. இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை இல்லை. அவர்களுக்கு குழந்தையாக வளர, காமதேனு பசுவின் வயிற்றில், சித்திரபுத்திரன் பிள்ளையாகப் பிறந்தார். சிறிது காலம் இந்திரனிடம் வளர்ந்த பிறகு, பார்வதியிடம் திரும்பினார். இந்த அடிப்படையில் அம்பாளுக்கு, 'கோமதி' என, பெயர் சூட்டப்பட்டது.
சித்ரா பவுர்ணமியன்று, களக்காடு சென்று, சித்திர புத்திரரை வணங்கி, புண்ணிய கணக்கை துவங்கலாம்.

தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
05-மே-202014:54:57 IST Report Abuse
Kundalakesi பங்குனி வெயில் நம்மை பதம் பார்த்து விடும். எண்ணை குளியல் உடம்பிற்கு நல்லது. சொன்னால் எவர் கேட்பார். அதான் நம் முன்னோர்கள் இப்படி ஒவ்வொரு நல்லதையும் சாமி என்று மாற்றினர். தீப ஒளி கூட விளக்கு ஏற்றி அறுவடையான விவசாய பொருட்களை மழைக்காலம் முடிந்து பிறந்த பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட்ட விழா. பூச்சி விளக்கில் விழும். பொருட்களை விற்றால் பணம் நிறைய வரும். புத்தாடை பலகாரம் புதிய பொருள் வாங்க பணம் கிடைக்கும். இதுதான் வெடி தீபாவளியாக மாறியது. அதை அமேசான் பிளிப்கார்ட் போன்ற வியாபாரிகள் சிறப்பு விற்பனை திருவிழாவாக மாற்றினர். போனஸ் வேண்டுமே
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
05-மே-202011:55:25 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI சித்திர புத்தரின் அருள் பெற்று அனைவரும் புண்ணிய கணக்கை துவங்குவோம்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
05-மே-202011:54:46 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பொறுப்பாசிரியர் அவர்களுக்கு “சித்திரக் கடவுளுக்கு சிலை” பகுதியில் மே 7 அன்று என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். சித்திர புத்தரின் சன்னதிகள் எங்கு உள்ளது என்பதை அறிந்தேன். சித்திர புத்தரின் அருள் பெற்று அனைவரும் புண்ணிய கணக்கை துவங்குவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X