இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

முதல் அடி, முன்னேற்றத்தின் மணிமுடி!
சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில், 'டெம்போ' வாகனம் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து சில இளைஞர்கள் இறங்கினர். அவர்களை எதிர்பார்த்திருந்தவர்கள் போல், அடுக்கு மாடியில் குடியிருந்த பலர், கார், சைக்கிள் மற்றும் டூ - வீலர்களை தள்ளி வந்தனர்.
அவர்களிடம், இளைஞர் ஒருவர், ஏதோ பேசியபடி, 'டோக்கன்' தந்தார். அதைப் பெற்றுக் கொண்டதும், வந்தவர்கள், தத்தம் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர்.
வந்த இளைஞர்களில் இருவர், சைக்கிள் ரிப்பேர், காற்றடித்தல், துடைத்தல் என, வேலையில் இறங்கினர். மற்றவர், இரு சக்கர வாகனங்களில், வாடிக்கையாளர் கூறிய பழுதுகளை நீக்கியபடியும், 'பஞ்சர்' ஆன 'வீலை' கழற்றி, சரி செய்து மாட்டினர்.
'வேக்யூம் கிளீன'ரால், காரின் உட்புறத்தை சுத்தம் செய்தனர். பின், 'வாட்டர் வாஷ்' செய்யப்பட வேண்டிய கார், டூ - வீலர்களையும் செய்து முடித்து, அந்த இடத்தையும் சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவினர்.
இத்தனை விஷயங்களையும், ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், 'எப்படி யோசிக்கிறாங்க பார்த்தீங்களா... மொபைல் போனில் அழைத்தால், நம்மை தேடி வரும் உணவுப் பொருள் மற்றும் 'கால் டாக்சி' போல், இவர்களும் அழைத்த நேரத்திற்கு வருகின்றனர். வாகனத் துாய்மை, பழுது நீக்கம் என, நம் கண் முன்னே அனைத்து வேலையையும் முடித்துக் கொடுப்பதால், நம்பகத் தன்மையையும் பெற்று விட்டனர்.
'உச்சம் தொட, முதல் அடி முக்கியம் என்பதைப் போல், முதலில், 'டெலிபோன் கிளீனிங் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் துடைத்து தருகிறோம்...' என, ஆரம்பித்தவர்கள் தான், இன்று, இந்த நிலைக்கு வளர்ந்துள்ளனர். தங்கள் தொழிலுக்கு தேவையானதை, ஒவ்வொன்றாய் வாங்கி, அனைத்தும், தங்கள் வாகனங்களில் வைத்துள்ளனர்...' என்றார், நண்பர்.
முயற்சி செய்தால், முடியாதது இல்லை. வேலை இல்லை என்று புலம்பாமல், இதுபோல, யோசித்து செயல்படலாமே!
தி.பூபாலன், ராணிப்பேட்டை.

மருத்துவர்களின் கர்ப்பப்பை வேட்டை!
என் வயது, 72. சிறுநீர்ப்பை இறக்கக் குறைபாட்டை சரி செய்ய, மதுரையில் உள்ள, பிரபல மருத்துவமனைக்கு கணவருடன் சென்றேன். என்னை மேலோட்டமாக பரிசோதித்த மருத்துவர், 'பையை துாக்கி வைத்து தைத்து விடலாம்...' என்றார்.
மேலும், 'கர்ப்பப்பை இறங்கியுள்ளது. அதில் புண்கள் உள்ளன. ஆகவே, கர்ப்பப்பையை ஆபரேஷன் மூலம் உடனே அகற்றாவிடில், அது, புற்றுநோயாகவும் மாறும் அபாயம் உள்ளது...' என்றும், அச்சுறுத்தினார். 70 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பதால், உடனே முடிவு செய்யாமல் தாமதித்தோம்.
அதற்குள் மருத்துவரின் ஏஜன்ட், 'பணத்தை பற்றி யோசிக்க வேண்டாம். பிடித்தம் இல்லாமல், மருத்துவக் காப்பீட்டு தொகையில், 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளலாம்...' என்று, ஆசை வார்த்தை காட்டினார்.
அதனால், காப்பீட்டுத் தொகை கணிசமாக குறைந்து விடும் என்பதால், மாற்று ஆலோசனை பெற, வேறொரு மருத்துவரை அணுகினோம்.
'ஸ்கேன்' செய்து பார்த்த போது, புண்கள் உள்ளதாக, முன்னவர் கூறியது, அப்பட்டமான பொய் என்பது தெளிவாகியது. மேலும், 'கர்ப்பப்பை மிக குறைந்த அளவே இறங்கி உள்ளது. அதில், இன்னும், நான்கு நிலைகள் உள்ளன; இப்போதைக்கு, ஆபரேஷன் தேவையில்லை...' என்றார்.
அத்துடன், சிறுநீர்ப்பை கோளாறுக்கு, எளிய பயிற்சியும் கற்றுக் கொடுத்தார். இப்போது, இரண்டு ஆண்டுகளாக ஒரு உபத்திரவமும் இல்லை.
பணத்தாசை பிடித்த மருத்துவர்கள், தம்மிடம் வரும் வயதான பெண் நோயாளிகளை குறி வைத்து, ஆபரேஷன் என்ற பெயரில், அவர்களின் கர்ப்பப்பையை, ஏஜன்டுகளின் உதவியுடன் வேட்டையாடுவது, இந்த நிகழ்ச்சிக்கு பின் வெளிச்சத்துக்கு வந்தது.
கடவுள் படைத்த அனைத்து உறுப்புகளுக்கும், நம் ஆயுள் உள்ளவரை, ஏதாவது பயன்பாடு இருந்தபடியே இருக்கும். இந்த விஷயத்தில், அவசரப்பட்டு நடவடிக்கையில் இறங்கி, ஆபரேஷன் என்ற பெயரில் உறுப்புகளை இழப்பதால், ஆரோக்கியம் கெடுவதுடன், பக்க விளைவுகளால் அவதிப்படவும் நேரிடும்.
வயதான பெண்கள், இதை உணர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படுவது, அவர்கள் உடல் நலத்துக்கு, 'பர்சு'க்கும் நல்லது.
சு.வசந்தா, மதுரை.

வேலை தான் முக்கியம்; தோற்றம் அல்ல!
பெண்கள் அழகு நிலையம் நடத்தி வரும், தோழியை சந்திக்க, அங்கு சென்றேன். அவளது கடையில் வேலை செய்யும் திருநங்கை, வேலை நேரம் முடிந்ததும், தோழியிடம் சொல்லி கிளம்பினார்.
தோழியிடம், 'அழகு நிலையத்தில், அழகான பெண்ணை வேலைக்கு வைக்காமல், திருநங்கையை வைத்திருக்கிறாயே... சரிபடுமா...' என்றேன்.
'இதற்கு முன், ஒரு அழகான இளம் பெண்ணை வேலைக்கு வைத்திருந்தேன். கடையில் இருக்கும், 'காஸ்ட்லி' ஆன அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது மற்றும் நான் இல்லாத சமயங்களில், அவரது தோழியரை அழைத்து வந்து, 'மேக் - அப்' போடுவது என்று, அவள் நிறைய செலவு வைத்தாள்.
'எனவே, அவளை, வேலையை விட்டு நிறுத்தினேன். அச்சமயம் வேலை கேட்டு வந்த, இந்த திருநங்கையை சேர்த்துக் கொண்டேன். இவரிடம், தொழில் சுத்தமும், நேர்மையும், மேலும், நான் வெளி வேலையை முடித்து வர நேரமாகும் சமயங்களில், பள்ளியிலிருந்து வரும் என் குழந்தையை பொறுப்புடன் கவனித்தும் கொள்கிறார்.
'என்னை பொறுத்தவரை, அன்பும், நேர்மையும் தான் உண்மையான அழகு. அந்த வகையில், திருநங்கை அழகாக தெரிந்ததால், மனதுக்கு பிடித்திருந்தது. இவரே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்...' என்றாள், தோழி.
மு. முனீஸ்மாலா, சிவகாசி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-மே-202006:17:38 IST Report Abuse
D.Ambujavalli வாழும் வழிகள் கொட்டிக்கிடந்தாலும் மூக்கால் அழுதுகொண்டு இருப்பவர்களிடையே, சிறு துரும்பையும் உபயோகமான பொருளாக்குவதுபோல் வேலையை தாமே உண்டாக்கிக்கொள்ளும் இத்தகையவர்கள் ஊக்கப்படுத்தப் படவேண்டியவர்கள்
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
03-மே-202007:08:03 IST Report Abuse
வழிப்போக்கன் வசந்தா அவர்களே - கர்ப்பப்பையை வேட்டையாட முடியாது. கர்ப்பப்பை மாற்று சிகிச்சை என்பது இன்னமும் வளராத ஒரு முறை. அதுவும் உங்களை பார்த்தவுடன் அதனை முடிவு செய்வது போல அதற்கு டிமாண்டும் இல்லை. கிட்னி என்பது கூட அத்தனை எளிது அல்ல என்னமோ சினிமாவில் பார்ப்பது போல (விவேக் காமெடி - கொரோனா காலம் இந்த டிவி நிறைய நேரம் செலவாகிறது ). போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறீர்கள்? நீங்கள் செகண்ட் ஒப்பீனியன் கேட்டீர்கள் - புத்திசாலித்தனம். ஆனால் இரு மருத்துவர்களின் சிகிச்சை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் முத்தின பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று செய்வார்கள், சிலர் முளையிலேயே கிள்ளிவிடலாம் என்பார்கள். இரண்டுமே தவறு இல்லை. உங்கள் வயது வேறு அதிகம். இந்த வயதில் முற்றட்டும் என்பது உங்களுக்கு நடைமுறை சிரமங்களை தரலாம். அதுவும் எழுபத்திரண்டு வயது பெண்மணி கர்ப்பப்பையை ஆட்டையை போடுவார்கள் என்பது நகைப்பை வரவழைத்தது. உங்கள் கஞ்சத்தனம் (வேறு மாதிரி சொன்னால் பணம் முக்கியம் ஆரோக்கியம் இரண்டாம் பட்சம் ) மருத்துவர்களை அவமதிக்காதீர்கள் - அதுவும் போகிற போக்கில் பணத்தாசை பிடித்த மருத்துவர்கள் என்று. இந்த உபாதையால் நீங்கள் மரணித்தால் அந்த மருத்துவர் தவறாக சொல்லிவிட்டார் என்று குற்றம் சாட்ட சற்றும் தயங்க மாட்டீர்கள். உண்மையில் நீங்க தான் பணத்தாசை கொண்டவர் (அதனை நீங்களே சொல்லிவிட்டீர்கள் - இரண்டாம் ஒப்பீனியன் நீங்கள் கேட்க முக்கிய காரணமே காப்புறுதி பணம் குறையும் என்பதுதான் உங்கள் ஆரோக்கியம் என்ன ஆகும் என்பதால் அல்ல). எவ்வளவு எளிதாக மருத்துவர்களை குற்றம் சாட்டுகிறார்கள்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
05-மே-202011:33:31 IST Report Abuse
Manianவருத்தமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவில் மருத்துவர்களுக்கு இடை தரகர் கிடையாது. மேலும் ஒருவர் மருத்துவர் மேல் குற்றம் சாட்டினால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மருத்துவம் கூட செய்ய முடியாமல் போகலாம். ஆனால் இங்கோ கோட்டா மருத்துவர்கள்,போலிகள் அதிகம். இவர்கள் மாமூல் மருத்துவர்கள்.பணம் செலவு பற்றிய சிந்தனை சரியே.தேவை இல்லாவிட்டாலும், முன்கால ஏழ்மை வாழ்க்கை பயம், வயதான காலத்தில் உடல் நலத்தை பேணுவதை விட, சேமித்து பின் வாரிசுகள் அதை அனுபவிக்க எண்ணுவதே,எண்ண கட்டாப் படுத்துவதே அதிகம்.தானும் கஷ்டப்பட்டு, பிறறையும் தொல்லை கொடுத்து பணம் சேர்த்து வைத்து, கடவுளை ஏசி, சாகுபவர்களே அதிகம்....
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
03-மே-202006:52:43 IST Report Abuse
வழிப்போக்கன் ராணிப்பேட்டை வாசகரே - இது நீண்ட காலமாக இருக்கிறது. இன்று எங்கள் வீட்டு வண்டிகளை பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் வைத்து இருப்பவர் இப்படித்தான் ஆரம்பித்தார். எங்கள் வீட்டுக்கு ஒரு டிவிஎஸ் - 50 ல் சனிக்கிழமை வருவார், எல்லாவற்றையும் கழட்டி போட்டு , துடைத்து மாட்டி விட்டு போவான்(ர்). அப்படியே வளர்ந்து இன்று மெக்கானிக் ஷாப் ஓனர். அன்று அவன் (பன்னிரண்டு- பதிமூன்று வயது சிறுவன்) கழட்டி போட்டு கற்று தந்தது (எனக்கு) அனுபவ பாடம். இன்றும் எங்களை போன்ற பழைய கஸ்டமர்ஸ் வீட்டு-சர்வீஸ் கிட்டுகிறது. நியாயஸ்தர். படிக்காதவர், இன்று அவர் கீழே எம்பிஏ , இஞ்சினீரிங் படித்துவிட்டு வேலை செய்யும் பலர் இருக்கிறார்கள். உழைப்பு என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இன்றும் (தொப்பை இருந்தாலும்) லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு வேலை செய்ய தயங்காதவர்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
05-மே-202011:48:11 IST Report Abuse
Manianடிவி சுந்தரம் ஐயங்காரும் இப்படி செய்தே பெரிய தொழிலதிபரானார். சுய வேலை செய்வதை கேவலமாக எண்ணுபவர்களே அதிகம். சிறு வயதில் குடை, பூட்டு ரிப்பேர், பம்பரத்துக்கு ஆணி அடித்தல் பல செய்து பெற்ற அனுபவத்தால் பகுதிநேர மெகானிகல் இஞ்சினீயராக வேலை செய்த அனுபம் எனக்கு உண்டு. பிறர் என்ன சொல்கிறா்கள் என்பதை பொருட்படுத்தியதில்லை.இரண்டு கேள்விக்கு கிடைக்கும் பதிலை பொருத்ததே என் செயல் (1) சொல்பபவர் எனக்கு சம்பளம் தரும் எஜமானரா அல்லது (2)நான் சம்பளம் தந்து என்னிடம் வேலைபார்ப்பவரா? இரண்டுக்கும் "ஆம்" என்ற பதில் அவ்கள் சொல்வதை,சரி என்றால் கேட்பேன். இல்லையேல், அவர்கள் வேலை இல்லாத மூடர்கள் என்று ஒதுக்கிவிடுவேன் (வக்கீல்,போலீசு மருத்துவர்கள்,இன்னும் சிலர் விதி விலக்கு)....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
10-மே-202018:57:45 IST Report Abuse
தமிழன்USA la TVS 50 ah?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X