அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00
மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் எழுதியதாக, ஒரு தகவல் சமூக வலை தளங்களில், சில நாட்களுக்கு முன் வேகமாகப் பரவியது. ஆனால் அதை, அவர் எழுதவில்லை என்பதை, பி.பி.சி., நிறுவனம் உறுதிபடுத்தியது. அதில் சொல்லப்பட்டிருந்த தகவல்களில் பல, முக்கியம் வாய்ந்ததாக இல்லை; பல, எல்லாருக்கும் பயன்படும் வகையில் இருந்தன. யார் எழுதினால் என்ன... சொல்லும் விஷயம் பலருக்கும் பயன்பட்டால் நல்லது தானே!
இதோ அந்த தகவல்:
'கொரோனா வைரஸ்' நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன?
நல்லதோ, கெட்டதோ... எந்த நிகழ்வுக்கு பின்னணியிலும், ஒரு ஆன்மிக குறிக்கோள் உள்ளது என்பதை, நான் நம்புகிறேன். இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தபோது, எனக்கு சில யோசனைகள் தோன்றின.
* கலாசாரம், மதம், வேலை, சொத்து மதிப்பு, புகழ் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, நாம் அனைவரும் ஒன்றே என்பதை, இது நினைவுபடுத்துகிறது. மேலே குறிப்பிட்ட எதையும் இந்த நோய் கண்டுகொள்வதில்லை. எல்லாரையும் பீடிக்கிறது
* எல்லாரையும் இது இணைக்கிறது. எப்படி... ஒருவரை பீடித்தால், அது மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது
* நாம், நம் இருப்பிடத்திற்கான எல்லையை செயற்கையாக உருவாக்கி இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறது; ஏனெனில் இது, பாஸ்போர்ட்டே இல்லாமல், எல்லையைத் தாண்டி, எல்லாருக்கும் பரவுகிறதே
* ஆரோக்கியம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. நாம், சத்தில்லாமல் தயாரித்து வழங்கப்படும் உணவுகளை உண்டு, ரசாயனங்கள் கலந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை எனில், நாமும் வெகு விரைவிலேயே சீக்காளி ஆகி விடுவோம்
* வாழ்க்கையே மிகவும் குறுகியது என்பதை, இந்நோய் நமக்கு உணர்த்துகிறது. தேவையில்லாத பொருட்களை வாங்க, கடைகளில் வரிசையில் நிற்பதை விட, முதியோரையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கவனிக்க வேண்டியது, நம் பொறுப்பு என்பதையும் உணர்த்துகிறது
* இது போன்ற கடினமான காலங்களில் மட்டுமே, அத்தியாவசியமான உணவு, மருந்து, குடிநீர் இன்றியமையாதது என்பதை உணர்கிறோம்; ஆடம்பரப் பொருட்களின் பின் அலைவதைத் தவிர்க்கிறோம். பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்கிறோம்
* குடும்பமும், வீட்டு வாழ்க்கையும் எவ்வளவு முக்கியமானது என்பதை, இந்நோய் உணர்த்துகிறது; இதை, எந்த அளவு உதாசீனப் படுத்தினோம் என்பதை புரிய வைக்கிறது; இந்த வகையான வாழ்க்கையை மறுபடி கட்டமைத்து, குடும்ப உறவுகளை இறுக்கிக் கொள்ள, நம்மைக் கட்டாயப்படுத்துகிறது
* எப்போதும், வேலை வேலை என்று அலைவதற்காக, நாம் பிறக்கவில்லை; ஒருவரை ஒருவர் பேணிக் காக்க, ஒருவரிடமிருந்து ஒருவர் பலனடையவே பிறந்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது
* நம் வறட்டு கவுரவத்திற்கு, ஒரு பரிசோதனை வைத்திருக்கிறது. சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மனிதர் நாம் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி, வீட்டில் முடக்கிப் போட்டிருக்கிறது
* நம் செயலை தீர்மானிப்பது, நம் கையில் என்பதை சொல்லித் தருகிறது. மற்றவர்களுக்கு ஒத்துழைப்பது, பகிர்வது, கொடுப்பது, உதவி செய்வது, ஆதரவாய் இருப்பது ஆகியவை ஒரு பக்கம்; சுயநலத்துடன் இருப்பது, அபகரிப்பது, நம் சொந்த நலனில் மட்டும் அக்கறை செலுத்துவது ஆகியவை மற்றொரு பக்கம். இதில், எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?
* இது முடிவு அல்லது ஆரம்பம். நாம் செய்த வினைகளின் எதிரொலி; என்ன செய்தோம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்வு எனக் கருதலாம் அல்லது இது ஒரு உதாரணம் தான், இன்னும் இருக்கிறது என்பதாகக் கூட இருக்கலாம்
* இந்த பூமி, சீக்காளி ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. கடும் வெயிலில், ஈரம் எவ்வளவு வேகமாய் காயுமோ, அவ்வளவு வேகமாய், வனங்களை அழிக்கிறோம். இப்படி பூமியை சீக்காளி ஆக்கியதால், நாமும் சீக்காளி ஆகி விட்டோம்
* ஒரு கஷ்டம் வந்தால், அதன் பிறகு சுகம் உண்டு. வாழ்க்கையே ஒரு சக்கரம் தான்; இப்போது கடினமான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறோம்; இது கடந்து, நல்ல நிலைக்கு திரும்புவோம்
* நம் செயல்கள் அனைத்தும் தவறு; மாற்றிக் கொள்ள வேண்டும். முன்னோர் வாழ்ந்த அழகான வாழ்க்கையை மறக்கக் கூடாது என்பதை உணர்த்தி, நம்மைத் திருத்தவே இந்த, 'வைரஸ்' பிறந்து, பரவி இருக்கிறது. இந்த பாடத்தை நல்லவிதமாக எடுத்துக் கொள்வதும், ஏற்காததும் நம் கையில் தான் உள்ளது.
- இப்படியாக இருக்கிறது அந்த பதிவு. நாம் என்ன செய்யப் போகிறோம்?

திருமண காலத்தில், 30 - 40 கல்யாண பத்திரிகை, அடியேனுக்கு வரும். இன்னார் என்று கூட எனக்கு தெரியாது. ஆயினும், அவர்களை ஆசிர்வதித்து, வெண்பா பாடி அனுப்புவேன். எதற்காக, ஒரு பண்பாட்டிற்காக; அவர்களை திருப்திபடுத்துவதற்காக!
கொஞ்சம் தெரிந்தவர் என்றால், விபூதி, குங்குமம் பிரசாதமும் அனுப்புவேன். இன்னும் நெருக்கமானவர்கள் என்றால், நான் எழுதிய புத்தகத்தையும், மணமக்கள் பெயர் போட்டு அனுப்புவேன். இன்னும் கொஞ்சம் நெருக்கமானவர்கள் என்றால், என் தம்பியை அனுப்புவேன். நிரம்ப வேண்டியவர்கள் என்றால், நானே செல்வேன். மிக மிக வேண்டியவர்கள் என்றால், என் சம்சாரத்தோடு செல்வேன்.
கிருபானந்த வாரியார் எழுதிய, 'ஞான விளக்கு' நுாலில் படித்தது.
இந்த காலத்தில், கல்யாண அழைப்பிதழே, 'வாட்ஸ் - ஆப்'பில் வருகிறது; வாழ்த்தும் அதே போல் செல்கிறது.

பழைய புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். அதில், ஆக., 23, 1939ல், தி.க., பத்திரிகையான, 'விடுதலை' இதழில் வெளியான சுவாரஸ்யமான செய்தி இது:
நீதி கட்சியில் இருந்த சமயம், சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்தார், ஈ.வெ.ரா., பின்னர், நீதிக்கட்சியினர், இவரை அழைத்து, தங்கள் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்கும்படி செய்தனர். அப்போது, சென்னை, திருவல்லிக்கேணியில், 1939ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஈ.வெ.ரா., பேசியது...
'ஆகவே... என் பார்ப்பன நண்பர்களுக்கு சொல்லி வைக்கிறேன். இந்த காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க, ஒத்துழைக்க வேண்டுகிறேன். நாங்கள் பார்ப்பன துவேஷிகள் என்று கருதினால், நீங்கள் உண்மையில் ஏமாந்து போவீர்கள். 'ஜஸ்டிஸ் கட்சி' உங்களுக்குள்ள விகிதாச்சாரப்படி, பாகத்தை பிரித்து கொடுக்க சித்தமாய் இருக்கிறது. தாராளமாக வந்து சேருங்கள். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவீர்களானால் ஏமாந்து போவீர்கள்...' என்றார்.
- இதைச் செய்ய, பிராமணர்கள் தவறி விட்டனரோ?

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
07-மே-202010:47:40 IST Report Abuse
Manian அமெரிக்க நண்பரிடம் கருத்துப் பரிமூலம் கண்டு கொண்டது: மிகுந்த வக்ர புத்திசாலிதனமும், அரசாங்க ஆட்சி பதவியும் ஒரு நபர் கையில் இணைந்திருந்தால், அது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். ஹிட்லர்,முசோலினி,ஜீ பிங், டிரம்ப் போன்றவர்கள் இதற்கு உதாரணம். ராமாயாணத்தில் பரசுராமன் என்ற பிராமணன் தவ பலம் பெற்று, ஒரு ஷத்திரிய ராஜாவை தண்டிப்பதற்கு பதில் ஒட்டு மொத்த ஷத்திரிய அரசர்களையும் கொன்றான். இதை கதையே என்று வைத்துக் கொண்டாலும், இதன் கருத்தின் வலிமையை இன்றும் காண்கிறோம். இதன் காரணமாகவே, மனு 4 வர்ணங்களை ஏற்படுத்தினான், ஜாதி பிரிவை இல்லை. சுதாமா அந்தணன் என்றாலும் அறிவை வளர்த்துக் கொண்டு யாதவர்களிடம் பிச்சை வாங்கி, கல்வி கற்பித்து ஏழையாகவே வாழ்ந்தான். யாதவர் கொடுத்த சோற்றை பிச்சை வாங்கி உண்டான். கண்ணன் வீட்டில் உண்டான். ஷத்திரிய பெண்கள் பிராமணர்களை மணந்தார்கள். எனவே, பழயுணவுமுறை, நியாயமுறைகள் சமுதாய முறைகள் மாறினது போல் தொழில் சார்ந்த பிரிவுகள் ஜாதி வெறியாக ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலே மலர்ந்தது. ஆகவே அறிவு ஜீவிகளும் ஆட்சி பங்கு பெற்று, பரசுராமர்களாக மாறாமல் தாடு புலர்ந்ததால், ஷத்திரியர்களே வழி காட்டிகள் இல்லாமல் மக்களை குடிகாரர்களாகவே வைத்திருக்கிறார்கள். அறிவு ஜீவிகள் மேல் நாடுகளில், வனவாசம் போல், தங்கள் திறமைகளை மேன்மைப் படுத்தி கொண்டிருக்கிறார். தகுதி அற்றவர்கள் டியூஷன் நடத்தி ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். ஈவேரா வெற்றி பெறவில்லை.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
06-மே-202005:31:11 IST Report Abuse
Manian இதைச் செய்ய, பிராமணர்கள் தவறி விட்டனரோ? ஆங்கிலேயர்கள் வருமுன் வரை பிராமணர்கள் ஏஐகளாகவே இருந்தனர்பிறருக்கு கல்வி மட்டுமே கற்பிக்க வேண்டும்.5தே வீடுகளில் கிடைக்கும் பிச்சையை மட்டுமே, கிடைத்த அன்று உண்ணவேண்டும், இல்லையேல் நீரே ஆகாரம். மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. அரசனோ, ஜமீன்தார்களோதான் பள்ளிகளை நிறுவி மாணவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.இந்த கல்வியால் எந்த எதிர்பாப்பும் இல்லாதால் மன்னர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக, அரசாங்க அதிகாரிகளாக,சமுதாய வழி காட்டிகளாக வாழ்ந்த பிராமணர்களை திசை திருப்பி ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறைகளை அழித்தார்கள். தென்னாட்டில் எந்த பிராமண அரசரும் இருந்ததில்லை. மன்னர்கள்,ஜமீன்தார்கள் நடந்த குரு குலங்களை மூடி,பிராமணர்களை தங்கள் வேலயாட்களாக மாற்றினார்கள்(முஸ்லிம் அரசர்களும் இப்படியே மதமாற்றம் செய்தார்கள். ஆக அடிமைகளாக வாழ்ந்த பிராமணர்களை ஈவேராவால் பங்குதார்களாக மாற்ற முடியவில்லை. பணத்தாசை பிடித்த போலி ஆசிரியர்களையை ஈவேரா பங்குதார்களாக மாற்றிவிட்டார் பிராமணர்கள் தங்களுக்குள் போட்டியிடுவார்களே தவிர,ஒற்றுமையாக அரசியல் பங்கு கேட்கமாட்டார்கள்.பரம்பரயாக கல்விக்கே முன் உறிமை கொடுத்த அறிவால்,சிறந்த கல்வி கற்று புலம் பெயர்ந்தார்கள்.இங்கே அவர்களை தூற்றுகிறார்கள்,மேல் நாடுகளில் அவ்களை போற்றுகிறார்கள்.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
04-மே-202007:41:24 IST Report Abuse
கதிரழகன், SSLC அவிங்க என்னிக்கு ஒருத்தன் பின்னால அணியா நின்னுருக்காக, இவரு குடுத்த அக்ரீமெண்ட்டுல கை எளுத்து போட? ஆளாளுக்கு நாட்டாமைதான். பெரிசா சம்பாதிச்சாலும் சரி பதவியில இருந்தாலும் சரி குடும்பத்துக்கு செய்வாக சாதிக்கு ஒன்னும் செய்ய மாட்டாக,
Rate this:
Girija - Chennai,இந்தியா
05-மே-202012:12:55 IST Report Abuse
GirijaSuperb they don't do even for their family, most of the parents in aged home are from our community only....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X