அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

கி. சுரேஷ், கோவை: பெரும்பாலான பத்திரிகைகள், 'டிவி' சேனல்கள், நஷ்டத்தில் தான் இயங்குகின்றன என்கின்றனரே... உண்மையா?
ஓரளவு உண்மை தான்... ஆனால், அவர்கள், காந்தி நோட்டை, 'சேர்த்த' பெரும் பணக்காரர்கள்; கட்சி மற்றும் ஆட்சியின் மூலம்!
அதனால், இந்த நஷ்டம் அவர்களுக்கு, ஒரு பொருட்டே அல்ல!

* மா. சுதிக் ஷா, சேலம்: அரசு வேலையில் உள்ள பெண்களும், லஞ்ச, ஊழலில் ஈடுபடுகின்றனரே...
அவர்களுக்குள்ளும், ஆண்களின் மனப்பான்மை இருப்பதையே காட்டுகிறது; இதற்கு காரணம், உடன் பணியாற்றும் ஊழல், ஆண் அதிகாரிகளிடமிருந்து தொற்றி கொண்டதாகவும் இருக்கலாம்!

ப. மகாலிங்கம், சென்னை: ரஜினி நடித்த, 'தர்பார்' படம் நல்லாதானே இருக்கு?
'டிவி'யில் பார்த்தேன்... விளம்பர இடைவேளைகளின் போது, வேறு சேனல்களுக்கு மாறி விட்டேன் என்பது வேறு விஷயம். படத்தின் கரு நன்றாக இருந்தாலும், ரஜினிக்கு ஏற்ற கதை அல்ல... அதனால் தான் படம் தோல்வியைத் தழுவியது!
கட்சி ஆரம்பிக்கும் முன், ஒரு வெற்றி படத்தை தரவேண்டும் ரஜினி!

டி. பாரதி, சென்னை: கொரோனாவால் லாபம் சம்பாதித்தவர்கள், மளிகைக் கடைக்காரர்களும், காய்கறி கடைக்காரர்களும் என்பது உண்மை தானே!
உண்மையாக இருந்து விட்டுப் போகட்டும்; அவர்கள் திறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் பசி ஏப்பத்தில் அல்லவா தவித்திருப்பீர்கள்; அதை உணர்ந்து பார்த்தீர்களா?

அ. ராஜா ரகுமான், கம்பம்: 'ஒரு மணி நேரத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டித் தருகிறேன்...' என, முன்னாள் நிதி அமைச்சர், ப.சிதம்பரம் கூறியுள்ளாரே...
ஊழல் வழக்கில் சிக்கி, சிறையில் இருந்தவர், மனம் இளகி, தன் வீட்டின் உள் அறைகளை திறந்து விடலாம் என, நினைத்து விட்டாரோ என்னவோ!

ஆர். சுப்பு, திருத்தங்கல்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு முதல்வராகும் அதிர்ஷ்டம் கிடைக்குமா?
ஓ... ஆழ்ந்த துாக்கத்தில் அவர் கனவில் இருக்கும்போது... ம்... அதிலாவது அனுபவித்துப் போகட்டுமே!

* எஸ். ராஜலட்சுமி, மதுரை: அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண் ஊழியர் ஒருவர், என்னிடம் அடிக்கடி, அந்தரங்கம் பற்றி ஆலோசனை கேட்கிறார்... நான் என்ன செய்ய?
முதலில் அவரிடமிருந்து, 'கட்' போடுங்கள்... இவற்றை பற்றி எல்லாம் கேட்டு, உங்களை, 'வளைக்க' முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
06-மே-202005:00:59 IST Report Abuse
Manian அவர்கள் மூலதனம் வட்டி இல்லாமல் கிடைத்தா? அவர்கள் நஷ்டம் அடைந்த போது, பொது மக்கள்,ஐயோ பாவம், குறைந்த லாபத்தில் எல்லாம் நமக்கு விற்றார், இப்ப நாம் நிதி திரட்டி அவற்றை காப்பாற்றுவோம் என்று உதவி செய்தார்களா? அவர்கள் கடைகளை மூடினால்,20 கிலோ பொன்னி அரிசி 400 ரூ ரயில்வே டிக்கட் வாங்கி ஆந்திரா நெல்லூர் போய் ஒவ்வொரு வீட்டுக்காரன்களும் வாங்கி வரமுடியுமா? வியாபாரம் அடிப்படை சமுதாய பொருளாதார யந்திரம். அது இல்லை என்றால் சமுதாயமே இருக்காதேவியாபாரம் பறந்த பொருளாதார ஆலமரம். அதன் அடியில் உட்கார்ந்தால் தலையில் பறவை எச்சம் விழத்தான் செய்யும்.அது யார் குற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X