மந்திரியின் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

விதியை காட்டிலும் வலிமை உடையவை வேறு உண்டோ என்பார் - திருவள்ளுவர்
வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ - கம்பர்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - சிலப்பதிகாரம்
- இப்படி, பலரும் சொன்ன விதி தொடர்பாக நடந்த ஒரு வரலாற்றை சொல்லி விளக்குகிறார், காஞ்சி, மகா பெரியவர்.
அச்யுதராயர் என்ற அரசனிடம், கோவிந்த தீட்சிதர் என்பவர் மந்திரியாக இருந்தார்.
இவர், கோவில் கட்டுவது, குளம் வெட்டுவது, வேத பாடசாலை வைப்பது, வேதியருக்கு தானம் செய்வது முதலான, பல புண்ணியங்களை செய்து வந்தார்; சுருங்கச் சொன்னால், அவர் செய்யாத தர்மமே இல்லை.
ஒருநாள், அவரிடம் வேலை பார்த்து இறந்து போன ஒருவன், பரலோகத்திலிருந்து வந்து, அவரை அழைத்தான். இறந்தவன் எழுந்து வந்தால், விந்தை அல்லவா...
'தங்களிடத்தில் ஒழுங்காக வேலை செய்த புண்ணியத்தால், என்னை, எமதர்ம ராஜன், எம கிங்கரனாக வைத்துக் கொண்டான். எம லோகத்தில், எமனும், சித்ரகுப்தனும் பேசும் போது, 'தீட்சிதர், நந்தவன தர்மம் ஒன்றை தவிர, மற்றதெல்லாம் செய்திருக்கிறார்...' என்று பேசினர். தாங்கள், அதையும் செய்ய வேண்டும் என்றே கூற வந்தேன்...' என்றான், அவன்.
'நீ சொல்வதை எப்படி நம்புவது...' என, கேட்டார், தீட்சிதர்.
'சுவாமி... தங்களிடம் வேலை செய்யும், ஸ்தபதியின் உயிரை எடுத்து போக வந்திருக்கிறேன். மேலே ஏற்றும் கல் விழுந்து, அவன் இறக்கப் போகிறான். அதைக்கண்டு என் சொல்லை நம்பலாம்...' என்றான்.
அவன் வார்த்தைகளை கேட்ட தீட்சிதர், உடனே, அந்த ஸ்தபதியை ஓர் அறையின் உள்ளே வைத்துப் பூட்டி, சாவியை ஜாக்கிரதையாக வைத்தார்.
கோவில் கட்டட வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரும் கற்பாறையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம்.
'கற்பாறையை நிலை நிறுத்த, ஸ்தபதி வந்தாலொழிய வேறு யாராலும் முடியாது...' என்றார், மேஸ்திரி.
கட்டட வேலையில் ஊக்கமுள்ள தீட்சிதரின் மனம், எதற்காக ஸ்தபதியை உள்ளே வைத்து பூட்டி இருக்கிறோம் என்பதை மறந்து, அறையை திறந்தார்.
வெளியே வந்த, ஸ்தபதி, கல்லை மேலே ஏற்றினான். அவன் மீது கல் விழுந்தது. உடனே, கிங்கரன், அவன் உயிரை எடுத்து சென்றான்.
விதியை மதியால் வெல்ல முடியாது என, உண்மையை உணர்ந்த, தீட்சிதர், கிங்கரன் சொல்லை நம்பாமல் இருக்க முடியுமா, நந்தவன தர்மத்தையும் செய்தார்.

பி. என். பரசுராமன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
05-மே-202012:26:24 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI “மந்திரியின் கதை” பகுதியில் கோவிந்த தீட்ஷிதர் செய்த தர்மமும் விதி வலியது என்பதை வலியுறுத்தியது. ஆனால் கொஞ்சம் விவேகத்தை பயன் படுத்தி அவர் ஸ்தபதியை உள்ளே பூட்டி வைத்தும் அவரின் மறதியால் ஸ்தபதியை காப்பாற்ற முடியவில்லை. எனவே விதி வலியது. இதில் நாம் எடுத்து கொள்ள வேண்டியது தருமம் செய்வதையும் விவேகத்தையும் மட்டுமே.
Rate this:
Manian - Chennai,இந்தியா
07-மே-202004:02:16 IST Report Abuse
Manianஇதை இன்னொரு விதமாகப் பார்க்கலாம். ஒரே விஷய சிறப்பு அறிவாளித்தனம் (Domain Specific Intelligence) domain ) என்பதை மட்டுமே கோவிந்த தீஷிதரின் சிறப்பு. இது பனை மரம்,தென்னை, பேரீச்சை போன்ற ஓங்கி வளர்ந்த அறிவு, இன்றைய முனைவர் பட்டம் போன்றது. புள்ளி விரத்தில் (Statistical Probability ) இதை இருபலன் செயல்கள்:நேர் பலன்-எதிர் பலன் -பகல்-இருட்டு இரண்டுமே 50 சதம், ஆக இரண்டும் இணைந்ததே சேர்ந்ததே ஒரு நாள். கோவிந்த தீட்ஷிதர் இதையே நம்பினார். இன்னொறு அறிவாளித்தனம் சிறப்பு பன்முக அறிவாளித்தனம்( Domain General Intelligence). இது, எந்த செயலுடனும் இணைந்துள்ள மறைமுக தொடர்புகளையும் தெரிந்து, புரிந்து கொள்ளுதல். இதை இருவழி பலன் என்பதை உண்டு-இல்லை( 50% வெற்றி:50% தோல்வி) என்பதை விரிவு படுத்தி 1%,2%,...100% வெற்றி- தோல்வி(Probability of success varies from 1%,2%,40%..100%) என்று புரிந்து கொள்ளும் திறமை ஏற்படும். அதவது எது செய்தாலும் முழு பலன்(100% வெற்றி)இல்லை என்றாலும் ,முழு தோல்வியும் இல்லை-அதாவது நமது முயற்ச்சியில் என்ன தவறு என்று கண்ட அனுபவ லாபம் கிடைக்கிறதே அடுத்த முயற்ச்சியில் அதை தடுத்து விடுகிறோம். மன்னர்கள் படையெடுப்பில் இதுதானே நடந்துள்ளது. இதையே தீர ஆலோசனை செய்தல்,பன்முக தன்மையிரிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்தல்-ஆகவே அறிவாளி மந்திரிகள் நிறைந்த மன்னர்களே பெரும்பாலும் சிறந்து விளங்கினார்கள்.கோவிந்த தீட்சிதருக்கு அந்த வாய்ப்பில்லை அல்லது அதை புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் பன்முக கல்வி இல்லாதவர்கள், பன்முக தன்மை இல்லாமல் துதி படுபவர்கள் நட்பை- "தீயார் கேண்மை நீர் கொள் பாசி போல் வேர்க் கொள்ளாதே என்றும், நகுதல் பொருடன்று நட்டல், மிகுதி கண் மேற்சென்று இடித்தல் பொருட்டே" என்கிறார் வள்ளுவர். நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வில்லை என்று புலம்புவர்கள் பன்முகதன்மையை கற்காதவர்கள் கோவிந்த தீட்சதர் போலவே வருந்துவர்.இதை தலை எழுத்து என்று புலம்பி தன் அறிவை வளர்த்துக் கொள்ளாமல், திருத்தி கொள்ளாமல், தன் தோல்விக்கு பிறறைக் குற்றம் சாட்டிக் கொண்டு டாஸ்மார்க் , ஓசி பிரியாணி தொண்டர்களாகவே சாவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X