சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

மே 3, உலக சிரிப்பு தினம்

புகைப்படக்காரரிடம் சென்றதும், அவர்கள் கூறும் வார்த்தை, சிரியுங்கள்!
காரணம், புகைப்படத்திற்கு கூட, பலர் சிரிப்பதில்லை.
* மோனலிசா, இன்று வரை, அவருடைய புன்னகைக்காக தான் பேசப்படுகிறார். நடிகை கே.ஆர்.விஜயாவின் புன்னகை, மிகவும் பிரபலம். அதனால் தான், 'புன்னகை அரசி' என, கூறுகின்றனர்
* சிரிக்கத் தெரிந்தாலே, வாழ்க்கையில் முன்னேறலாம். ஒருபடி முன்னேறி, மற்றவரை சிரிக்க வைத்தால், உச்சியை தொடலாம்
* சிரிக்க வைப்பவருக்கு, நண்பர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு
* ஆபிசிலிருந்து, 'டென்ஷன்' ஆக வீடு திரும்புபவர்களில் பெரும்பாலானோர், முதலில் செய்யும் நல்ல காரியம், 'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது தான். அதுவும், வடிவேலு சிரிப்பு காட்சிகளை பார்க்கும் போது, அவருடைய சவடால்கள், அபத்தங்கள், அல்டாப்புகள் நமக்கு சிரிப்பை வரவழைக் கின்றன. பலன், மனதில் குடி கொண்டிருந்த, மன அழுத்தம் மாயமாய் மறைந்து விடுகிறது
* சீனாவில், சமீபத்தில், ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்க வந்தவர்களிடம், அவர்களின் புன்னகை பணமாக ஏற்கப்பட்டது
* சிலர் புன்னகை செய்தால், அது தங்கள் கவுரவத்துக்கு குறைச்சல் என, நினைக்கின்றனர்
* தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் 'ரிசர்வ்ட் டைப்' வகையினர் சிரிக்க மாட்டார்கள்
* மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள், சிரிக்க மாட்டார்கள்; மற்றவர்களையும் சிரிக்க விட மாட்டார்கள்
* சிரித்தாலே, மற்றவர் தவறாக எண்ணக்கூடும் என, சிலர் சிரிக்க மாட்டார்கள்
* சிரிக்கத் தெரியாதவர்கள், அவர்களை அறியாமலே தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கின்றனர்
* நம் சிரிப்பால், மூளையில் எழும் துாண்டுதல், 2,000 சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது, ஒரு ஆய்வு!

உங்களுக்கு தெரியுமா...
* அடிக்கடி சிரிப்பவர்கள், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாய் வலம் வருவர்
* எதிராளி சிரிக்கும்போது, தன்னுடைய பேச்சைத் துவக்கி, தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பர்
* போனில் சிரித்தபடியே பேசிப் பாருங்கள், உரையாடல் நீண்டபடியே போகும்
* உங்கள் கண்களை பிரகாசிக்க செய்யும், சிரிப்பு. ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் துாண்டி விட்டு செயல்பட வைக்கும்
* ஒருவரின் சிரிப்பை, 300 அடி துாரத்தில் இருந்து உணர முடியும்
* ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள் முகத்தில் இயங்குகிறது
* சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள் போல் சிரிக்கவும், புன்னகை செய்யவும் தெரியும்.
நீங்கள் சிரியுங்கள். குறைந்தது, 50 சதவீதத்தினராவது பதிலுக்கு சிரிப்பர். சிரிப்பில், 19 விதம் உண்டு. இவை சமூக சூழல் மற்றும் தனி சூழல் என, இரு வகைப்படும். சமூக சூழலில் சிரிக்கும்போது, சில சதைகள் இயங்குகின்றன. அதுவே தனியாக சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும் உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன.
மொத்ததில், சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும், ஆன்மாவுக்கு நல்லது. மன மகிழ்ச்சிக்கு, 'டானிக்!'
புரிஞ்சுக்குங்க, செயல்படுத்துங்க!
ராஜி ராதா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-மே-202005:04:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிரிச்சுண்டே இருந்தால் இளிச்சவாய் என்று பட்டம்கிடைக்குமே . காரணமே இல்லாதைக்கு சிரிச்சாள் அர்த்தம் வேறு நகைச்சுவைக்கு என்று இல்லாமல் எப்போதும் ப்ளீச்சிங் பெர்சனாலிட்டியை அவர்களின் சிரிச்சமுககாகவே விரும்புறாங்க , சிரித்தமுகம் உள்ளவர்களுக்கு பிரெண்ட்ஸ் நெறைய இருப்பாங்க , அதே சமயம் அவர்கள் தன நட்ப்பைஎப்போதும் நிலைக்கவும் செய்துருவங்க ,முகம் கடுமையாக வச்சுண்டுருந்தால் பெரிய சிடுகுமுஞ்சி என்றும் பட்டம் வரும் கப்பலேகவிழ்ந்ததுபோல முஞ்சியைவச்சுருந்தால் அழுமூஞ்சி என்றும் உணர்ச்சியே காட்டாத முகம் உள்ளவர்களுக்கு மரமூஞ்சி என்றும் பெயர் இருக்கு தெரியுமோ ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X