உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை அளவு குறையுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2011
00:00

எனது வயது 39. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு எதுவும் இல்லை. நான் உடற்பயிற்சி செய்தால், சர்க்கரை அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் வெகுவாக குறைந்துவிட வாய்ப்புள்ளது அல்லவா? கே.நாகராஜன், கோவை:


உடற்பயிற்சி என்பது நம் உடலுக்கு இன்றியமையாதது. தினமும் உடற்பயிற்சி செய்தால் தான், நாம் உண்ணும் உணவு செரிப்பதுடன், உணவின் சத்துக்களும் பயன்பாட்டுக்கு வரும். எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ரத்தக்கொதிப்பும், சர்க்கரை நோயும் இல்லாதவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதால், இந்நோய்கள் வராமலேயே தடுக்க இயலும். இத்துடன் சரியான உணவு பழக்கமும் மிக அவசியம்.



"Candesartan' என்ற மருந்தை நான் பல ஆண்டுகளாக எடுத்து வருகிறேன். தற்போது இம்மருந்து கிடைப்பதில்லை. இதற்கு மாற்று மருந்து உள்ளதா? .செல்வநாதன், மதுரை:


"இச்ணஞீஞுண்ச்ணூtச்ண' என்பது அ கீ ஆ என்ற மருந்து வகையை சேர்ந்தது. இது ரத்தக்கொதிப்பை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கிறது. அதுமட்டுமின்றி ஹார்ட் பெயிலியருக்கு இம்மருந்து நல்லது. இருதய பம்பிங் திறனையும் கூட்டுகிறது. இம்மருந்து கிடைக்கவில்லை என்றால், இதற்கு பதில் வேறு ஒரு அ கீ ஆ மருந்தை உங்கள் இருதய நோய் நிபுணரின் ஆலோசனையை பெற்று எடுத்து கொள்வது நல்லது.



எனக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் இருந்தது. மருந்து எடுத்து வருகிறேன். இரண்டு ஆண்டுக்கு முன் மாரடைப்பு வந்தது. அதற்கும் மருந்து எடுத்து வருகிறேன். ஆனால், தற்போது டாக்டர் சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவை இல்லை என்கிறார். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சோதித்ததில், எனது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மி.கி., என வந்துள்ளது. இது சரியா? ராமசாமி, அருப்புக்கோட்டை:


உங்களுக்கு சர்க்கரை நோய் ஆறு ஆண்டாக உள்ளது. உங்கள் உணவு கட்டுப்பாட்டாலும், நடை பயிற்சியாலும் அதை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி., என உள்ளது மிகவும் குறைவு தான். இதற்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரை எதுவும் தேவையில்லை. இருந்தாலும், மாதம் ஒரு முறை நீங்கள் உங்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். நாளடைவில் இது அதிகரித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவை. இருதய நோய்க்கான மாத்திரையை வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும்.



நான் ஈஐஃஙூஉM மற்றும் இஃOகஐகூஅஆ மாத்திரைகளை டாக்டரின் அறிவுரைப்படி நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறேன். இம்மாத்திரைகளின் பலன் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? ராஜா, திருப்பூர்:


ஈஐஃகூஐஅஙூஉM என்ற மாத்திரை இருதயத்தின் ரத்த நாளங்களில் உள்ள ரத்த ஓட்டத்தை சரிசெய்ய தரப்படுகிறது. இஃOஐகூஅஆ என்ற மாத்திரை இருதய ரத்தநாளங்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் தவிர்க்க தரப்படும் மாத்திரை. இந்த இரண்டு மாத்திரைகளும் இருதய ரத்தநாள அடைப்புகளுக்காக தரப்படும் மாத்திரைகளே. உங்களுக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறது என்றால் இதனுடன் சேர்த்து குtச்tடிண வகை மாத்திரையை எடுப்பதும் அவசியம்.


- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.




Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X